வேலை கிடைக்காததால் என்ஜினீயர் தற்கொலை

கடந்த சில மாதங்களாக அஜித்குமார் மணப்பாக்கம் பகுதியில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.வீட்டில் தனியாக இருந்த அஜித்குமார் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலை கிடைக்காததால் என்ஜினீயர் தற்கொலை
Published on

போரூர்:

நெசப்பாக்கம், மஞ்சு கார்டனில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மணிகண்டன், வேன் டிரைவர். இவரது மகன் அஜித்குமார் (வயது 23), என்ஜினீயர்.

கடந்த சில மாதங்களாக அஜித்குமார் மணப்பாக்கம் பகுதியில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். பின்னர் அவர் வேலைக்கு செல்லவில்லை. படிப்புக்கு ஏற்ற வேலையை தேடிவந்தார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை.

இதனால் அஜித்குமார் கடந்த 3 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் மன உளைச்சலில் இருந்தார்.

இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த அஜித்குமார் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com