search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அன்னதானம்"

    • விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு மண்டபம், சத்திரம் மற்றும் வாகனங்கள் மூலமாக பல்வேறு அமைப்புகளும் தனியார் நிறுவனங்களும் அன்னதானம் வழங்குவார்கள்.
    • அன்னதானம் வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை பயன்படுத்தாமல் பாக்கு மட்டைத் தட்டுகள், வாழை இலை ஆகிய பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 30, 31-ந் தேதி மற்றும் நவம்பர் 1-ந் தேதி ஆகிய 3 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த 3 நாட்களிலும் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு மண்டபம், சத்திரம் மற்றும் வாகனங்கள் மூலமாக பல்வேறு அமைப்புகளும் தனியார் நிறுவனங்களும் அன்னதானம் வழங்குவார்கள். அப்படி உணவு வழங்குபவர்கள் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டவிதிகளின்படி உணவு தயாரிப்பதற்கான பதிவு சான்று பெற வேண்டும். அதன் பின்னரே அன்னதானம் வழங்க வேண்டும்.

    மேலும் அன்னதானம் வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை பயன்படுத்தாமல் பாக்கு மட்டைத் தட்டுகள், வாழை இலை ஆகிய பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    உணவு பாதுகாப்பு துறையின் பதிவு சான்று பெற 04286-299429 தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • நன்கொடை வழங்குவோர் இதுவரை ஒரு நாளைக்கு ரூ.33 லட்சம் வழங்கி வந்தனர்.
    • அன்னப் பிரசாத திட்டத்துக்கு தினமும் 14 முதல் 16.5 டன் அரிசியும், 6.5 முதல் 7.5 டன் காய்கறிகளும் பயன்படுத்தப்படுகிறது.

    திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னப் பிரசாத நன்கொடை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்கு ஏராளமான பக்தர்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் தினமும் திருமலையில் சுமார் 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பக்தர்கள் இலவசமாக உணவு உண்டு வருகின்றனர். மேலும் வரிசையில் தரிசனத்துக்காக காத்திருக்கும் பக்தர்கள், பஸ் நிலையம், மாதவம், ஸ்ரீநிவாசம், விஷ்ணு நிவாசம் பக்தர்கள் தங்கும் விடுதிகள், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் என பல்வேறு இடங்களில் இலவச அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக நன்கொடை வழங்குவோர் இதுவரை ஒரு நாளைக்கு ரூ.33 லட்சம் வழங்கி வந்தனர். இந்நிலையில், விலைவாசி உயர்வால் அன்னதான நன்கொடை ரூ.38 லட்சமாக உயர்த்தப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று அறிவித்துள்ளது.

    இதன் மூலம் சிற்றுண்டிக்காக ரூ.8 லட்சம் மற்றும் மதிய மற்றும் இரவு உணவுக்காக தலா ரூ.15 லட்சம் வீதம் மொத்தம் ரூ.38 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நன்கொடை வழங்க விரும்பும் பக்தர்கள் ஒவ்வொரு வேளைக்கும் தனித்தனியாகவும் நன்கொடை வழங்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

    அன்னப் பிரசாத திட்டத்துக்கு தினமும் 14 முதல் 16.5 டன் அரிசியும், 6.5 முதல் 7.5 டன் காய்கறிகளும் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டி கோவிலில் கிடாய் வெட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.
    • முன்னாள் எம்.எல்.ஏ. வழங்கினார்

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வாவிடைமருதூர், பெருமாள்பட்டி பகுதியில் நல்லதங்காள், பெரியையன், சின்னையன் சுவாமி கோவில் உள்ளது. இங்க 48-ம் நாள் மண்டல பூஜை நடைபெற்றது. வான வேடிக்கை முழங்க தேங்காய், பழக்கூடை தட்டு, வண்ண மாலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, பின் கோவில் முன்பாக வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.

    எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வேண்டி முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பையா சார்பில் கிடாய் வெட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பங்காளிகள் செய்திருந்தனர்.

    • செயலாளர் தம்பித்தங்கம் தொடங்கி வைத்தார்
    • காந்திஜி கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் நடந்தது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 15-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள், சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, சிறப்பு அன்னதானம், பக்தி சொற்பொழிவு, பாட்டு கச்சேரி, நாதஸ்வர கச்சேரி, வாகன பவனி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    4-ம் திருவிழாவான நேற்று காலை 10 மணிக்கு கன்னியாகுமரி காந்திஜி கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் பகவதி அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், களபம், குங்குமம், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மதியம் 12 மணிக்கு கன்னியாகுமரி காந்திஜி கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் 1000 பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் நடந்தது.

    இதனை காந்திஜி கடை வியாபாரிகள் சங்க செயலாளர் தம்பித்தங்கம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சங்க பொருளாளர் சுரேஷ், கன்னியாகுமரி பார்க்வியூ பஜார் வியாபாரிகள் சங்க செயலாளர் பகவதியப்பன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • அ.தி.மு.க. 52-வது ஆண்டு விழா பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.
    • அண்ணா எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகி யோர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் பகுதியில் அ.தி.மு.க. வின் 52-வது ஆண்டு விழா கொண்டா டப்பட்டது. நிகழ்ச்சிக்கு இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் மரக்கடை முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளரும், மதுரை கிழக்கு மாவட்ட செயலா ளருமான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகி யோர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    பின்னர் 16 நாள் மண்டபத்தில் அ.தி.மு.க.வின் கட்சி கொடியை ஏற்றி பொது மக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் பெரிய புள்ளான் எம்.எல்.ஏ., பகுதி செயலாளர் பன்னீர் செல்வம், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், பொருளாளர் பாண்டுரங்கன், பகுதி துணை செயலாளர் செல்வகுமார், இளைஞர் அணி வேல்ராஜ், வட்ட செயலாளர்கள் பொன்.முருகன், பாலமுருகன், எம்.ஆர்.குமார், முத்து கிருஷ்ணன், நாகரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாளை டி.ஒச்சாத்தேவர் நினைவு நாள் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது.

    மதுரை

    மூவேந்தர் முன்னேற்ற கழக இணை தலைவர் டி.ஒச்சாத்தேவர் 10-ம் ஆண்டு நினைவு நாள் நாளை 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் டி.ஒச்சாத்தேவரின் நினைவு நாளன்று ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அவரது மனைவியும், மூவேந்தவர் முன்னேற்ற கழக மாநில மகளிரணி செயலாளருமான சுந்தரசெல்விஒச்சாத்தேவர் வழங்கி வருகிறார்.

    இந்த ஆண்டு டி.ஒச்சாத்தேவர் நினைவு நாளை முன்னிட்டு திருமங்க லத்தில் உள்ள மூவேந்தர் முன்னேற்றக்கழக அலுவ லகத்தில் ஒ.எஸ்.எம்.ஆர். டிரஸ்ட் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு தையல் எந்திரம், டிரை சைக்கிள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல், உணவு பொருட்கள், வேஷ்டி,சேலை உள்ளிட்டவைகளை சுந்தரசெல்விஒச்சாத்தேவர் வழங்குகிறார். தொடர்ந்து அன்னதானம் நடைபெறு கிறது.

    இந்த நிகழ்ச்சியில் ராகேஷ், மோனிகா, செல்வகுமார், தாரணி, ஹனிகா, கரிகால் சோழன், வேதாந்த், ஒ.எஸ்.எம்.ஆர். டிரஸ்ட் நிர்வாகிகள், குடும்பத்தினர் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    • அன்னதானம் வழங்கப்பட்டது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் ராமநாதீஸ்வரர் கோவில், கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவில்களில் நேற்று மாலை நந்திபகவானுக்கு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவில் விழாக்குழு தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
    • 61 கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்

    திருநாகேஸ்வரம்:

    பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர். அன்புமணி ராமதாஸின் 55-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை வடக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் நேற்று கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

    அதனை தொடர்ந்து, மாவட்ட செயலாளர் ம.க.ஸ்டாலின் தலைமையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ப்பட்டது. பின்னர் அவர் கூறுகையில்:-

    இன்றும், நாளையும் 61 கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சங்கர், மாநகர செயலாளர் பாலகுரு, மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் வினோத் சுந்தரம், செபாஸ்டின் ராஜ், ரமேஷ், பெரியசாமி, ஆடுதுறை பாலு, சாமிநாதன், பகுதி செயலாளர் கணேஷன், சுப்புராமன், பழ.குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
    • வேண்டுதலை நிறைவேற்ற அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை தானமாக வழங்கி வருகின்றனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகர் வி.எம்.வட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சாமி கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. எக்ஸெல் ஜி. குமரேசன் தலைமை தாங்கினார்.

    கோயம்புத்தூர் சென்னை ஆம்பூர் மற்றும் ஜோலார்பேட்டை, மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    மேலும் இதனை தொடர்ந்து கோவை தொழிலதிபர் ஏ.அன்பு அமுதா குடும்பத்தினர் தனது சொந்த செலவில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினர்.

    இன்று காலை 7 மணி முதல் அன்னதானம் தொடங்கியது. கோவை தொழில் அதிபர் கோவை அன்பு அமுதா குடும்பத்தினர் அன்னதானத்தை வழங்கி விழாவை துவக்கி வைத்தார்.

    ரைஸ் மில் ராஜா, மின்வாரிய அலுவலர் சுரேஷ், சென்னை மகேந்திரன், கவுன்சிலர் இனியன், வாழைப்பழம் மண்டி சதீஷ், ஹார்டுவேர்ஸ் ராஜேந்திரன், ரெயில்வே ஊழியர் தமிழ்வேந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து 5 சனிக்கி ழமைகளில் அன்னதானம் வழங்கப்படும் மேலும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை தானமாக வழங்கி வருகின்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • இது இங்கு மட்டும் நடைபெறும் நிகழ்ச்சியாகும்.
    • அருந்ததியர் வாத்தியங்களும் முழங்கும்.

    பன்னாரி மாரியம்மன் கோவில் அக்னி குண்ட விழா மிகவும் புகழ் பெற்றது.

    ஆயிரக்கணக்கானவர்கள் அக்னி குண்டம் இறங்குவர்.

    பங்கு மாத உத்திரத்திறகு முந்தின 15ம் நாள் இரவு பன்னாரி மாரியம்மனுக்கு பூச்சாற்று நடைபெறும்.

    மறுநாள் வன துர்க்கை அம்மன் புறப்பாடு நடக்கும்.

    இது ஒரு வித்தியாசமான ஊர்வலம். அப்போது சோலகர் என்ற மலைவாசிகளின் வாத்தியங்களும்,

    அருந்ததியர் வாத்தியங்களும் முழங்கும்.

    மலைவாழ் மக்களும் சுற்றியுள்ள வனப் பகுதி மக்களும் பெரிய தனக் காரர்களும் புடைசூழ வந்து நடத்துவர்.

    இந்த ஊர்வலம் 8ம் நாள் கோவிலுக்கு வந்துசேரும்.

    மறுநாள் இரவு அம்பிகை ஆராதனை செய்து அக்னி கம்பம் போடுவர்.

    பூச்சாற்றின் 15ம் நாள் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக மாட்டு வண்டி, பஸ், சைக்கிள், நடைப் பயணம் என பன்னாரிக்குப் புறப்படுவார்கள்.

    மலர் வகைகள் வந்து குவியும். தங்கக் கவசம் ஆடை, ஆபரணம் பூட்டி அம்மன் அலங்காரம் முடியும்.

    முக்கிய அம்சமான அக்னி குண்ட வழிபாடு நடக்கும்.

    இதில் விளை பொருட்களைக் காணிக்கையாகத் தருவார்கள்.

    இந்தக் கானகத் திருவிழா தமிழ்நாட்டிலேயே இங்கு மட்டும் தான் இவ்வளவு சிறப்பாக மக்கள் பெருமளவில் பங்கு பெற்று நடத்துவர்.

    அன்றிரவு சுமார் ஒரு மணிக்கு அம்மன் அழைப்பு நடைபெறும். தெப்பக்கிணற்று அருகே உள்ள அம்மனை அழைத்து வந்து அக்னி குண்டம் அருகே இருத்துவர். குண்டம் சமப்படுத்தப்படும்.

    மறுநாள் காலை, பூசாரி பூஜை செய்தபின் முதலில் குண்டம் இறங்குவார்.

    பிறகு வரிசையாய் ஆண்களும் பெண்களும் இறங்குவார்கள். கடைசியாக கால்நடைகளும் குண்டம் இறங்கும்.

    இது இங்கு மட்டும் நடைபெறும் நிகழ்ச்சியாகும்.

    • பங்குனி மாத 15ம் நாளன்று கொடியேற்றம் நடைபெறும்.
    • இரண்டாம் நாள் கற்பக விருட்சம். மூன்றாம் நாள் பூதவாகனம்,

    திருச்சி தாயுமானவர் ஆலயம் குழந்தைப்பேறு, சுகப்பிரசவ பிரார்த்தனை தலம்.

    தென்னகத் தலங்களுள் இத்தலத்தை தென் கயிலாயம் என்பர்.

    நில எல்லையில் இருந்து பார்த்தால் மூன்றடுக்கு உடையதாக இம்மலை தோற்றமளிக்கும்.

    மட்டுவார் குழலியம்மன் திருக்கோவில், தாயுமானவர் கோவில். உச்சிப் பிள்ளையார் கோவில் என அமைந்துள்ளது.

    மேற்கு பார்த்த மூர்த்தலிங்கம் தமிழகத்தின் நான்காவது பெரிய லிங்கம் ஆகும்.

    பங்குனி மாதம் இக்கோவிலில் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும்.

    அதில் 9ம் நாள் அன்று பங்குனி உத்திரத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும்.

    10ம் நாள் தீர்த்தவாரி நடைபெறும். இத்தெப்பத்திற்கு தான் தாயுமானவர் தெப்பம் என பெயர்.

    பங்குனி மாத 15ம் நாளன்று கொடியேற்றம் நடைபெறும்.

    ஒன்பதாம் நாள் பங்குனி உத்திரமாக இருக்கும்படி தான் விழா ஏற்பாடு செய்வார்கள்.

    இரண்டாம் நாள் கற்பக விருட்சம். மூன்றாம் நாள் பூதவாகனம்,

    நான்காம் நாள் கைலாச பர்வதம், ஐந்தாம் நாள் வெள்ளை ரதம், ஆறாம் நாள் யானை வாகனம்,

    ஏழாம் நாள் நந்தி வாகனம், எட்டாம் நாள் தங்க குதிரை வாகனம், ஒன்பதாம் நாள் தெப்ப உற்சவம்,

    பத்தாம் நாள் தீர்த்தவாரியுடன் விழா இனிதே நடைபெற்று முடிவடையும்.

    • ஆலய பூசாரி பூஜை முடிப்பார். அப்போது அவருக்கு அருள் வரும்.
    • இரவில் வெந்த கொழுக்கட்டையை பூஜித்து படையல் போடுவார்கள்.

    திருநெல்வேலி மாவட்ட தென்கோடியில் தெற்கு கருங்குளம் என்ற கிராமத்தில் பூ அய்யப்பன் ஆலயம் அமைந்துள்ளது.

    இங்கு பங்குனி உத்திரத்தன்று மெகா கொழுக்கட்டை வழிபாடு செய்கின்றனர்.

    இது முழுக்க முழுக்க ஆண்களே செய்யும் வேலை.

    விரதம் இருந்து, எச்சில் படாமல் இருக்க வாயில் துணி கட்டிக் கொண்டு செய்வர்.

    ஒரு கோட்டை நெல்லில் இருந்து பெறப்படும் பச்சரிசி 42 படி இருக்கும்.

    இது கிலோ கணக்கில் பார்த்தால் 63 கிலோ வரும் இந்தப் பச்சரிசியை ஆண்களே இடித்து மாவாக்குவார்கள்.

    மாவில் நீர் விட்டுப் பிசைந்து உருட்டித் தட்டுவார்கள்.

    இதை காட்டுக் கொடி நிரவி, அதன் மீது இலைகளை பரப்பி உருட்டித் தட்டிய அரிசி மாவை அடுக்குவார்கள்.

    அதன் மீது சிறுபயறு, தேங்காய்த் துருவல் கலந்து பூரணத்தையும் வைப்பர்.

    இப்படி மாவு, பூரணம் என மாறி மாறி அடுக்கியபின் காட்டு இலையை பரப்பி மூடி,

    காட்டுக்கொடியால் உருண்டை வடிவில் கட்டிவிடுவார்கள்.

    மெகா கொழுக்கட்டை உருவாகி விட்டது.

    இதற்கு முன்பே கட்டைகள் எடுத்து தணல் உருவாக்கி இருப்பார்கள்.

    ஆலய பூசாரி பூஜை முடிப்பார். அப்போது அவருக்கு அருள் வரும்.

    சாமி ஆடியப்படியே ஐந்தாறு பேர் சேர்ந்து தூக்கும் கொழுக்கட்டையை இவர் ஒருவரே அனாயசமாகத் தூக்கி தணல் நடுவே போடுவார்.

    யாராலும் நெருங்க முடியாத தணலில் அங்கிருந்து கொழுக்கட்டையை உருட்டிப் புரட்டி வேக வைத்து விடுவார்.

    இரவில் வெந்த கொழுக்கட்டையை பூஜித்து படையல் போடுவார்கள்.

    ஆயிரக்கணக்கானோர் இவ்வழிபாட்டை தரிசிப்பார்கள்.

    பின் மறுநாள் கொழுக்கடையை பிரித்து ஊரில் உள்ள எல்லா வீடுகளுக்கும் பிரசாதமாக கொடுப்பார்கள்.

    ×