கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கல்

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. 61 கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Published on

திருநாகேஸ்வரம்:

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர். அன்புமணி ராமதாஸின் 55-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை வடக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் நேற்று கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து, மாவட்ட செயலாளர் ம.க.ஸ்டாலின் தலைமையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ப்பட்டது. பின்னர் அவர் கூறுகையில்:-

இன்றும், நாளையும் 61 கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சங்கர், மாநகர செயலாளர் பாலகுரு, மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் வினோத் சுந்தரம், செபாஸ்டின் ராஜ், ரமேஷ், பெரியசாமி, ஆடுதுறை பாலு, சாமிநாதன், பகுதி செயலாளர் கணேஷன், சுப்புராமன், பழ.குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com