எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டி கிடாய் வெட்டி அன்னதானம்

எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டி கோவிலில் கிடாய் வெட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ. வழங்கினார்
எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டி கிடாய் வெட்டி அன்னதானம்
Published on

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வாவிடைமருதூர், பெருமாள்பட்டி பகுதியில் நல்லதங்காள், பெரியையன், சின்னையன் சுவாமி கோவில் உள்ளது. இங்க 48-ம் நாள் மண்டல பூஜை நடைபெற்றது. வான வேடிக்கை முழங்க தேங்காய், பழக்கூடை தட்டு, வண்ண மாலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, பின் கோவில் முன்பாக வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வேண்டி முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பையா சார்பில் கிடாய் வெட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பங்காளிகள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com