அ.தி.மு.க. 52-வது ஆண்டு; பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்

அ.தி.மு.க. 52-வது ஆண்டு விழா பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது. அண்ணா எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகி யோர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பொதுமக்களுக்கு ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. இனிப்பு, அன்னதானம் வழங்கினார்.  உடன் இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் மரக்கடை முருகேசன் உள்பட பலர் உள்ளனர்.
பொதுமக்களுக்கு ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. இனிப்பு, அன்னதானம் வழங்கினார். உடன் இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் மரக்கடை முருகேசன் உள்பட பலர் உள்ளனர்.
Published on

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் பகுதியில் அ.தி.மு.க. வின் 52-வது ஆண்டு விழா கொண்டா டப்பட்டது. நிகழ்ச்சிக்கு இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் மரக்கடை முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளரும், மதுரை கிழக்கு மாவட்ட செயலா ளருமான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகி யோர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் 16 நாள் மண்டபத்தில் அ.தி.மு.க.வின் கட்சி கொடியை ஏற்றி பொது மக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் பெரிய புள்ளான் எம்.எல்.ஏ., பகுதி செயலாளர் பன்னீர் செல்வம், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், பொருளாளர் பாண்டுரங்கன், பகுதி துணை செயலாளர் செல்வகுமார், இளைஞர் அணி வேல்ராஜ், வட்ட செயலாளர்கள் பொன்.முருகன், பாலமுருகன், எம்.ஆர்.குமார், முத்து கிருஷ்ணன், நாகரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com