search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumbabishek ceremony"

    • விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு மண்டபம், சத்திரம் மற்றும் வாகனங்கள் மூலமாக பல்வேறு அமைப்புகளும் தனியார் நிறுவனங்களும் அன்னதானம் வழங்குவார்கள்.
    • அன்னதானம் வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை பயன்படுத்தாமல் பாக்கு மட்டைத் தட்டுகள், வாழை இலை ஆகிய பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 30, 31-ந் தேதி மற்றும் நவம்பர் 1-ந் தேதி ஆகிய 3 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த 3 நாட்களிலும் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு மண்டபம், சத்திரம் மற்றும் வாகனங்கள் மூலமாக பல்வேறு அமைப்புகளும் தனியார் நிறுவனங்களும் அன்னதானம் வழங்குவார்கள். அப்படி உணவு வழங்குபவர்கள் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டவிதிகளின்படி உணவு தயாரிப்பதற்கான பதிவு சான்று பெற வேண்டும். அதன் பின்னரே அன்னதானம் வழங்க வேண்டும்.

    மேலும் அன்னதானம் வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை பயன்படுத்தாமல் பாக்கு மட்டைத் தட்டுகள், வாழை இலை ஆகிய பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    உணவு பாதுகாப்பு துறையின் பதிவு சான்று பெற 04286-299429 தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    ×