நாளை டி.ஒச்சாத்தேவர் நினைவு நாளையொட்டி ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்

நாளை டி.ஒச்சாத்தேவர் நினைவு நாள் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது.
நாளை டி.ஒச்சாத்தேவர் நினைவு நாளையொட்டி ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்
Published on

மதுரை

மூவேந்தர் முன்னேற்ற கழக இணை தலைவர் டி.ஒச்சாத்தேவர் 10-ம் ஆண்டு நினைவு நாள் நாளை 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் டி.ஒச்சாத்தேவரின் நினைவு நாளன்று ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அவரது மனைவியும், மூவேந்தவர் முன்னேற்ற கழக மாநில மகளிரணி செயலாளருமான சுந்தரசெல்விஒச்சாத்தேவர் வழங்கி வருகிறார்.

இந்த ஆண்டு டி.ஒச்சாத்தேவர் நினைவு நாளை முன்னிட்டு திருமங்க லத்தில் உள்ள மூவேந்தர் முன்னேற்றக்கழக அலுவ லகத்தில் ஒ.எஸ்.எம்.ஆர். டிரஸ்ட் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு தையல் எந்திரம், டிரை சைக்கிள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல், உணவு பொருட்கள், வேஷ்டி,சேலை உள்ளிட்டவைகளை சுந்தரசெல்விஒச்சாத்தேவர் வழங்குகிறார். தொடர்ந்து அன்னதானம் நடைபெறு கிறது.

இந்த நிகழ்ச்சியில் ராகேஷ், மோனிகா, செல்வகுமார், தாரணி, ஹனிகா, கரிகால் சோழன், வேதாந்த், ஒ.எஸ்.எம்.ஆர். டிரஸ்ட் நிர்வாகிகள், குடும்பத்தினர் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com