search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Youtube"

    • யூடியூப் சேனல் நீக்கப்பட்டது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • நாசவேலை காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    புதுடெல்லி :

    காங்கிரஸ் கட்சியின் யூ டியூப் சேனல் நேற்று திடீரென நீக்கப்பட்டது. இது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், இதற்கு நாசவேலை காரணமா என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது.

    இதுகுறித்து டுவிட்டரில் ஒரு பதிவிட்ட காங்கிரஸ் கட்சி, "இந்திய தேசிய காங்கிரஸ் என்னும் எங்களது யூ டியூப் சேனல் நீக்கப்பட்டுள்ளது. நாங்கள் அதை மீண்டும் கொண்டு வருவோம். இது தொடர்பாக கூகுள் மற்றும் யூ டியூப் குழுக்களுடன் தொடர்பில் உள்ளோம்" என குறிப்பிட்டுள்ளது.

    மேலும், "இதற்கு காரணம் தொழில் நுட்ப கோளாறா அல்லது நாசவேலையா என்பது குறித்து நாங்கள் விசாரணை நடத்துகிறோம். விரைவில் வருவோம் என்று நம்புகிறோம்" எனவும் குறிப்பிட்டுள்ளது.

    • யூடியூப்பில் செயல்படும் 78 செய்தி சேனல்கள் முடக்கப்பட்டன.
    • மேலும், 560 யூடியூப் இணையதளங்கள் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், நாட்டில் பல்வேறு யூ டியூப் சேனல்கள் முடக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

    இந்நிலையில், பாராளுமன்றத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

    அதன்படி யூ டியூப்பில் செயல்படும் 78 செய்தி சேனல்கள் மற்றும் 560 யூடியூப் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எந்த ஒரு உள் அடக்கத்தையும் தடை செய்ய தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-ன் படி மத்திய அரசுக்கு அனுமதி வழங்குகிறது என தெரிவித்துள்ளார்.

    • பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவின் கடைசி பாடல் யூ டியூப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
    • பதிவேற்றம் செய்யப்பட்டதிலிருந்து இந்தப் பாடல் 33 லட்சம் லைக்குகளைப் பெற்றுள்ளது.

    சண்டிகர்:

    பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான சித்து மூஸ் வாலா, அங்குள்ள மன்சா மாவட்டத்தில் கடந்த 29-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். கனடாவைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவர் கோல்டி பிரார் இந்த கொலை சம்பவத்துக்கு பொறுப்பேற்றாா். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சித்து மூஸ் வாலா சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு இசையமைத்த இந்த பாடல் சட்லஜ்-யமுனா இணைப்பு கால்வாயைப் பற்றிப் பேசுகிறது. இந்த இசை வீடியோ கடந்த ஜூன் 23 அன்று யூடியூப்பில் வெளியிடப்பட்டது.

    இந்நிலையில், பஞ்சாபி பாடகரான சித்து மூஸ் வாலாவின் கடைசி பாடலான பஞ்சாபின் தண்ணீர் பிரச்சினை குறித்து பேசும் எஸ்ஒய்எல் (SYL) என்ற பாடல் யூ டியூப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

    பதிவேற்றம் செய்யப்பட்டதிலிருந்து இந்தப் பாடல் தற்போது வரை 2.7 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது மற்றும் 33 லட்சம் லைக்குகளைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    யூடியூப் ஷார்ட்ஸ் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.

    கூகுள் ஃபார் இந்தியா 2021 நிகழ்வில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை கூகுள் வெளியிட்டது. கடந்த ஆண்டு யூடியூப் ஷார்ட்ஸ் பீட்டா வடிவில் வெளியிடப்பட்டது. தற்போது யூடியூப் ஷார்ட்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. 

     யூடியூப் ஷார்ட்ஸ்

    யூடியூப் ஷார்ட்ஸ் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் டிக்டாக் போன்றே செயல்படுகிறது. இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது முதல் பல்வேறு குறு வீடியோ உருவாக்கும் செயலிகளுக்கு கடும் வரவேற்பு கிடைத்து வருகிறது. டிக்டாக் தடையை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது. 

    உலகளவில் யூடியூப் ஷார்ட்ஸ் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் பிடித்து இருக்கிறது. இந்தியாவில் 1500 கோடிக்கும் அதிக பார்வையாளர்களை யூடியூப் ஷார்ட்ஸ் பெற்று வருகிறது. வரும் நாட்களில் யூடியூப் ஷார்ட்ஸ் பல்வேறு புது அம்சங்களை பெற இருக்கிறது. 
    பிரசார் பாரதி மற்றும் கூகுள் இணைந்து தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை யூடியூபில் நேரலை செய்ய இருக்கிறது.



    பிரசார் பாரதி மற்றும் கூகுள் இணைந்து 2019 பொது தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை யூடியூப் தளத்தில் நேரலை செய்ய இருக்கின்றன. நேரலையில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் நேரலை செய்யப்படுகின்றன.

    கூகுள் மற்றும் பிரசார் பாரதி ஜனநாயகத்தின் மிகப்பெரும் திருவிழாவினை மே 23 ஆம் தேதி கொண்டாட இருக்கின்றன. கொண்டாட்டத்தின் அங்கமாக 2019 பொது தேர்தல் முடிவுகளை யூடியூபில் நேரலை செய்ய இருப்பதாக பிரசார் பாரதி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இந்தியா முழுக்க யூடியூப் தளத்தை எங்கிருந்து இயக்கினாலும் வலைதள பக்கத்தின் முகப்பு பகுதியில் டி.டி. நியூஸ் வழங்கும் தேர்தல் முடிவுகள் இடம்பெறும். தேர்தல் முடிவுகள் யூடியூப் தளம் மற்றும் மொபைல் செயலி என இரண்டிலும் நேரலை செய்யப்படும் என பிரசார் பாரதியின் சஷி சேகர் வெம்பதி தெரிவித்தார். 



    கூகுள், செயலி மற்றும் வலைதளத்தில் தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி?

    யூடியூப் தளத்தில் முகப்பு பகுதியில் தோன்றும் இணைய ஆப்ஷனை க்ளிக் செய்ததும், டி.டி. நியூஸ் யூடியூப் சேனல் திறக்கும். இதுதவிர டி.டி. சேவை கிடைக்கும் 14 இதர மொழிகளில் நேரலையை பார்க்க முடியும். 

    இவ்வாறு செய்யும் போது வாக்குப்பதிவு எண்ணிக்கை சார்ந்த விவரங்களை வெவ்வேறு மொழிகளில் டிஜிட்டல் முறையில் வழங்க முடியும். இத்துடன் விவரங்கள் அனைத்தும் ஆக்கப்பூர்வமாக இருக்கும். மேலும் கூகுள் மற்றும் பிரசார் பாரதி இணைந்து செயல்பட இருப்பது இதுவே முதல் முறை ஆகும் என சஷி சேகர் வெம்பதி தெரிவித்தார்.
    பொள்ளாச்சி விவகாரத்தில் அண்மையில் வெளியான ஆடியோவின் உண்மைத் தன்மையை அறியும் பொருட்டு, அந்த ஆடியோவை பதிவு செய்தவரின் தகவலை பெறுவது தொடர்பாக யூ டியூப் நிறுவனத்திற்கு சிபிசிஐடி மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது. #PollachiCase #Youtube #CBCID
    கோவை:

    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி.போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே பாதிக்கப்பட்ட இளம்பெண்களின் வீடியோக்கள் பேஸ்புக், வாட்ஸ்-அப், யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவுவதை தடுக்க வேண்டும் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் யூ-டியூப், பேஸ்புக், வாட்ஸ் -அப் நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பினர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு யூ-டியூப்பில் மீண்டும் ஒரு ஆடியோ பரவியது. அதில் பொள்ளாச்சி கும்பலால் பாதிக்கப்பட்டவர் என கூறி ஒரு இளம்பெண் பேசினார்.




    அதில், பொள்ளாச்சி கும்பல் ஒரு சிறுமியை விடிய, விடிய பாலியல் பலாத்காரம் செய்ததில் சிறுமி இறந்து விட்டதாகவும், சிறுமியின் உடலை திருநாவுக்கரசு வீட்டின் பின்புறம் புதைத்து விட்டதாகவும் கூறி இருந்தார். இது இவ்வழக்கில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த ஆடியோவின் உண்மை தன்மை குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் யூ-டியூப் நிறுவனத்துக்கு மீண்டும் ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர். அதில், வழக்கில் சம்பந்தப்பட்ட ஆடியோவை யூ-டியூப்பில் பதிவு செய்தவர் பற்றிய தகவலை தெரிவிக்குமாறு கேட்டுள்ளனர்.

    ஏற்கனவே, பொள்ளாச்சி சம்பவம் தொடர்புள்ள வீடியோக்களை நீக்கக்கோரி கடிதம் அனுப்பியதில் 90 சதவீத வீடியோக்கள் நீக்கப்பட்டுவிட்டதாகவும், மார்பிங் செய்த ஒரு சில வீடியோக்கள் மட்டும் இருப்பதாக யூ-டியூப் நிறுவனம் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு விளக்கம் அளித்துள்ளது. #PollachiCase #Youtube #CBCID
    யூடியூப் நிறுவனம் இந்தியாவில் யூடியூப் மியூசிக் ஸ்டிரீமிங் சேவையை துவங்கியுள்ளது. முன்னதாக இந்த சேவை கடந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. #YouTubeMusic



    யூடியூப் நிறுவனம் யூடியூப் மியூசிக் ஸ்டிரீமிங் சேவையை இந்தியாவில் வெளியிட்டது. முன்னதாக இந்த சேவை கடந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் கூகுள் தனது பிளே மியூசிக் சேவையை 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது.

    புதிய யூடியூப் மியூசிக் சேவையில் அதிகாரப்பூர்வ பாடல்கள், ஆல்பம்கள், ஆயிரக்கணக்கான பிளே லிஸ்ட்கள், ஆர்டிஸ்ட் ரேடியோ மற்றும் யூடியூபின் பிரத்யேக ரீமிக்ஸ், நேரலை நிகழ்ச்சிகள், கவர்கள் மற்றும் மியூசிக் வீடியோக்களை பார்த்து ரசிக்கலாம். இவை அனைத்தும் மிக எளிமையாக காட்சியளிப்பதோடு தனிப்பட்ட முறையில் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

    யூடியூப் மியூசிக் சேவை இலவசமாகவும் கிடைக்கிறது. எனினும், இலவச சேவையை பயன்படுத்தும் போது இடையிடையே விளம்பரங்கள் வரும். யூடியூப் மியூசிக் பிரீமியம் சேவையில் பாடல்கள் மற்றும் வீடியோக்களை ஸ்மார்ட்போன் லாக் செய்யப்பட்ட நிலையிலும், பேக்கிரவுண்டில் இயக்க முடியும்.



    யூடியூப் பிரீமியம் சேவையில் ஆஃப்லைன் டவுன்லோடு வசதி வழங்கப்பட்டுள்ளது. எவ்வித விளம்பரங்களும் இன்றி யூடியூப் மியூசிக் பிரீமியம் சேவையை ரூ.99 மற்றும் குடும்ப சந்தாவுக்கு மாதம் ரூ.149 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குடும்ப சந்தாவில் தனிநபர் மற்றும் ஐந்து குடும்ப உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ள முடியும்.

    சிறப்பு அறிமுக சலுகையின் பேரில் யூடியூப் மியூசிக் சேவைக்கான பிரீமியம் சந்தா முதல் மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு பின் பயனர்களது கட்டண சந்தா அமலாகும். கூகுள் பிளே மியூசிக் பயனர்களுக்கு யூடியூப் மியூசிக் பிரீமியம் சந்தாவும் சேர்த்து வழங்கப்படும்.



    யூடியூப் நிறுவனம் யூடியூப் பிரீமியம் சேவையை மாதம் ரூ.129 கட்டணத்தில் வழங்குகிறது. யூடியூப் பிரீமியம் சேவையில் பயனர்களுக்கு விளம்பரங்கள் இல்லா அனுபவம், பேக்கிரவுண்டு பிளே மற்றும் ஆஃப்லைன் வீடியோக்களை இயக்கும் வசதி வழங்கப்படுகிறது. 

    சாம்சங் கேலக்ஸி எஸ்10 பயன்படுத்துவோருக்கு யூடியூப் பிரீமியம் சேவை நான்கு மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் யூடியூப் மியூசிக் சேவையும் அடங்கும். மற்ற பயனர்களுக்கு மூன்று மாதம் வரை இலவச பிரீமியம் சேவை வழங்கப்படுகிறது. கூடுதலாக ரூ.60 செலுத்தும் பயனர்களுக்கு யூடியூப் பிரீமியம் குடும்ப சந்தா வழங்கப்படுகிறது. இதில் கூடுதலாக ஐந்து குடும்ப உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ள முடியும்.
    இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் தொடர்பான வீடியோக்களை நீக்கவேண்டும் என யூ டியூப் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. #Abhinandhan #Youtube
    புதுடெல்லி:

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாமை இந்திய விமானப்படை தாக்கி அழித்ததற்கு பதிலடியாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படையும் பதிலடி கொடுத்தது.

    இந்த தாக்குதலின்போது இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதில் இருந்த விமானப்படை விங் கமாண்டர் அபினந்தனை பாகிஸ்தான் கைது செய்தது. இந்திய வீரர் தங்கள் வசம் இருப்பதாக பாகிஸ்தான் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளது. அதில் அவர் காயங்களிடன் தோற்றம் அளிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

    இந்த வீடியோ உலகம் முழுவதிலும் சமூக வலைத்தளங்களில் நேற்று முதல் வைரலாக பரவியது.
     
    அபினந்தன் காயமடைந்த வீடியோ காட்சியை வெளியிட்ட பாகிஸ்தானுக்கு இந்திய வெளியுறவு துறை கடும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன், பாகிஸ்தான் கைது செய்துள்ள அபினந்தனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியது.

    இந்நிலையில், இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் தொடர்பான வீடியோக்களை நீக்கவேண்டும் என யூ டியூப் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. #Abhinandhan #Youtube
    வாட்ஸ்அப் செயலியில் சமீபத்தில் வழங்கப்பட்ட பி.ஐ.பி. மோட் வசதி வாட்ஸ்அப் வெப் பதிப்பிலும் சேர்க்கப்பட்டுள்ளது. #WhatsApp #Apps



    வாட்ஸ்அப் வெப் பதிப்பில் 0.3.2041 அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த அப்டேட் சில புதிய வசதிகளையும், பாதுகாப்பு குறைபாடுகளும் சரி செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்கதாக பி.ஐ.பி. மோட் பார்க்கப்படுகிறது.

    அந்த வகையில் வாட்ஸ்அப் வெப் பதிப்பில் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்டிரீமபிள் போன்ற சேவைகளுக்கு பி.ஐ.பி. (பிக்சர் இன் பிக்சர்) மோட் வசதி நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக வாட்ஸ்அப் வெப் 0.3.1846 பதிப்பில் பி.ஐ.பி. மோட் வசதி வழங்கப்பட்டது.

    இந்த அம்சத்தினை சோதனை செய்ய வீடியோ லின்க் ஒன்றை நீங்கள் அனுப்ப வேண்டும். அல்லது உங்களுக்கு எவரேனும் அனுப்பியிருக்க வேண்டும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் வீடியோ லின்க் உடன் வீடியோ பிரீவியூ வாட்ஸ்அப் சாட் திரையில் தோன்றும். இதனை க்ளிக் செய்யும் போது வீடியோ சாட் ஸ்கிரீனுள் ஓடத்துவங்கும்.



    இதனுடன் பி.ஐ.பி. திரையை மூடாமல் சாட் ஸ்கிரீனை மாற்றிக் கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. ஒருவேளை பி.ஐ.பி. மோட் உங்களுக்கு இயங்காத பட்சத்தில் நீங்கள் வாட்ஸ்அப் வெப் பழைய பதிப்பை பயன்படுத்தி வருகின்றீர்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

    அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் வெப் பயன்படுத்த உங்களது பிரவுசரின் கேச்சிக்களை அழித்து விட்டு பின் பிரவுசரை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தபின் உங்களது வாட்ஸ்அப் வெப் அப்டேட் ஆகியிருக்கும். இந்த நிலையில் பி.ஐ.பி. மோட் சீராக இயங்கும். #WhatsApp #Apps
    ஆசிரியர் நடத்தும் பாடத்தை யூடிப் மூலம் மீண்டும் படிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை மாணவர்கள் செல்போன் வழியாக மீண்டும் படிக்க முடியும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பதில் வருமாறு:-

    இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு புத்தகங்கள் வாங்குவதற்கும் பதிப்பகங்களை ஊக்குவிப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக 11 பேர் கொண்ட கல்வியாளர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா நூலகத்தை மேலும் நவீனப்படுத்த ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    தற்போது புதிய பாடத்திட்டங்களை மாணவர்கள் படிப்பதற்காக பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. சிறந்த ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை காணொலி காட்சி மூலம் 1000 பள்ளிகளில் ஒரே நேரத்தில் பார்த்து படிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஆசிரியர் நடத்தும் பாடத்தை யூடிப் மூலம் மீண்டும் படிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை மாணவர்கள் செல்போன் வழியாக மீண்டும் படிக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் பிரபல வலைத்தளமான யூடியூபில் அதிகம் பேர் டிஸ்லைக் செய்த வீடியோ பற்றிய விவரங்களை பார்ப்போம். #YouTubeRewind2018



    யூடியூப் வலைதளத்தில் டிசம்பர் 6ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்ட யூடியூப் ரீவைன்ட் 2018 வீடியோ, யூடியூப் வரலாற்றில் இதுவரை அதிகம் பேர் டிஸ்லைக் செய்த வீடியோவாகி இருக்கிறது. 

    இதுவரை சுமார் 12.7 கோடி பேர் பார்த்துள்ள யூடியூப் ரீவைன்ட் 2018 வீடியோவினை 22 லட்சம் பேர் லைக் செய்துள்ள நிலையில், சுமார் 1.1 கோடி பேர் டிஸ்லைக் செய்துள்ளனர். முன்னதாக யூடியூபில் அதிக டிஸ்லைக் பெற்ற வீடியோவாக ஜஸ்டின் பீபர் பதிவேற்றம் செய்த பேபி மியூசிக் வீடியோ இருந்தது.

    யூடியூப் சார்பில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவே அதிக டிஸ்லைக் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. ரெடிட் பயன்படுத்துவோர், யூடியூப் ரீவைன்ட் வீடியோ பற்றி மீம்களை பதிவேற்றம் செய்து, இதனை டிஸ்லைக் செய்யக் கோரி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 



    யூடியூப் வெளியிட்டதிலேயே மிகவும் மோசமான வருடாந்திர வீடியோவாக அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. வீடியோவில் தேர்வு செய்யப்பட்டுள்ள தலைப்புகள் மீது பெரும்பாலானோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இத்துடன் வீடியோவின் தீம் அதிகளவு செயற்கையாக இருக்கிறது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    யூடியூபில் பிரபலங்களாக பார்க்கப்படும் மார்கியூஸ் பிரவுன்லீ, டெக்னிக்கல் குருஜி மற்றும் நடிகர் வில் ஸ்மித் ஆகியோர் வீடியோவின் துவக்கத்தில் தோன்றுகின்றனர். அந்த வகையில் வீடியோவில் மேலும் சில பிரபலங்கள் இடம்பெறவில்லை என பலர் குற்றஞ்சாட்டி இருக்கின்றனர்.

    யூடியூப் ரீவைன்ட் 2018 வீடியோ பெற்றிருக்கும் விமர்சனங்களை எதிர்கொள்ளும் வகையில், யூடியூப் தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கிறது. ஒற்றை வரியில் பதிவிடப்பட்டு இருக்கும் ட்விட் யூடியூபில் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளதை நகைச்சுவையாக தெரிவித்திருக்கிறது. #YouTubeRewind2018
    உலகம் முழுவதும் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக முடங்கிக் கிடந்த யூடியூப் இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கியது. #YouTubeDOWN #YouTube
    தொழில்நுட்ப குறைபாடு காரணமாக கடந்த ஒரு மணிநேரத்திற்கும் மேலாக முடங்கிக் கிடந்த யூடியூப் இணையதளம் மீண்டும் செயல்படத் துவங்கியது.

    சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் உலகம் முழுவதும் யூடியூப் சேவை முடங்கிய நிலையில், தொழில்நுட்ப வல்லுநர்களின் முயற்சியை அடுத்து பழுது சரி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து யூடியூப் இணையதளம் மீண்டும் இயங்கத் தொடங்கியதாக யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து யூடியூப் அதன் ட்விட்டர் பக்கத்தில், நாங்கள் மீண்டும் வந்துவிட்டோம். பொறுமையுடன் காத்திருந்த அனைவருக்கும் நன்றி.  எவருக்கேனும் பிரச்சனை இருப்பின் தயைகூர்ந்து எங்களிடம் தெரிவிக்கவும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. #YouTubeDOWN #YouTube

    ×