search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "harassment CBCID"

    பொள்ளாச்சி விவகாரத்தில் அண்மையில் வெளியான ஆடியோவின் உண்மைத் தன்மையை அறியும் பொருட்டு, அந்த ஆடியோவை பதிவு செய்தவரின் தகவலை பெறுவது தொடர்பாக யூ டியூப் நிறுவனத்திற்கு சிபிசிஐடி மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது. #PollachiCase #Youtube #CBCID
    கோவை:

    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி.போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே பாதிக்கப்பட்ட இளம்பெண்களின் வீடியோக்கள் பேஸ்புக், வாட்ஸ்-அப், யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவுவதை தடுக்க வேண்டும் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் யூ-டியூப், பேஸ்புக், வாட்ஸ் -அப் நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பினர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு யூ-டியூப்பில் மீண்டும் ஒரு ஆடியோ பரவியது. அதில் பொள்ளாச்சி கும்பலால் பாதிக்கப்பட்டவர் என கூறி ஒரு இளம்பெண் பேசினார்.




    அதில், பொள்ளாச்சி கும்பல் ஒரு சிறுமியை விடிய, விடிய பாலியல் பலாத்காரம் செய்ததில் சிறுமி இறந்து விட்டதாகவும், சிறுமியின் உடலை திருநாவுக்கரசு வீட்டின் பின்புறம் புதைத்து விட்டதாகவும் கூறி இருந்தார். இது இவ்வழக்கில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த ஆடியோவின் உண்மை தன்மை குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் யூ-டியூப் நிறுவனத்துக்கு மீண்டும் ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர். அதில், வழக்கில் சம்பந்தப்பட்ட ஆடியோவை யூ-டியூப்பில் பதிவு செய்தவர் பற்றிய தகவலை தெரிவிக்குமாறு கேட்டுள்ளனர்.

    ஏற்கனவே, பொள்ளாச்சி சம்பவம் தொடர்புள்ள வீடியோக்களை நீக்கக்கோரி கடிதம் அனுப்பியதில் 90 சதவீத வீடியோக்கள் நீக்கப்பட்டுவிட்டதாகவும், மார்பிங் செய்த ஒரு சில வீடியோக்கள் மட்டும் இருப்பதாக யூ-டியூப் நிறுவனம் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு விளக்கம் அளித்துள்ளது. #PollachiCase #Youtube #CBCID
    ×