search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young woman"

    • கிணற்றில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் பிணம் மிதப்பதாக கடையநல்லூர் போலீசாருக்கு அப்பகுதினர் தகவல் தெரிவித்தனர்.
    • கொன்று வீசியவர்கள் யார்? என்பது குறித்து கடையநல்லூர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே வலசை கிராமம் உள்ளது. அதன் அருகில் சேர்ந்தமரம் சாலையில் கண்டமான் குளம் என்னும் குளத்துகரை அருகில் பயன்பாடு இல்லாத கிணறு உள்ளது.

    அந்த கிணற்றில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் பிணம் மிதப்பதாக கடையநல்லூர் போலீசாருக்கு அப்பகுதினர் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணன், கருப்பசாமி ஆகியோர் விரைந்து வந்தனர்.

    தொடர்ந்து கடையநல்லூர் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக அங்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் வீசப்பட்ட மூட்டையை வெளியில் எடுத்து கொண்டு வந்தனர். அதனை பிரித்து பார்த்த போது அதில் இருப்பது இளம் பெண்ணின் சடலம் என தெரியவந்தது. அந்த இளம்பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை கொன்று வீசியவர்கள் யார்? என்பது குறித்து கடையநல்லூர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சந்தியா அதே பகுதியில் உள்ள சுமார் 40 அடி அழமுள்ள தரைக் கிணற்றில் தவறி விழுந்தார்.
    • தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, இளம் பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை பழைய நெசவாளர் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் சந்தியா (வயது 17).இவர் அதே பகுதியில் உள்ள மகாலட்சுமி என்பருக்கு சொந்தமான சுமார் 40 அடி அழமுள்ள தரைக் கிணற்றில் தவறி விழுந்தார். இது குறித்த தகவலின் பேரில், மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, இளம் பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர்.

    • சேலம் சூரமங்கலம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாசாமி. கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி நளினி என்ற மனைவி உள்ளார்.
    • அய்யாசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் மனவேதனையில் இருந்த நளினி இன்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாசாமி. கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி நளினி (வயது 37) என்ற மனைவி உள்ளார். அய்யாசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் கணவரை, நளினி கண்டித்துள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லை. இந்த நிலையில் நளினிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து தனது கணவரிடம் தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளார். ஆனால் அய்யாச்சாமி, நளினியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அலட்சியாக இருந்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த நளினி இன்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நளினியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கிளாடிக்கும், பொன்னம்மாளுக்கும் அடிக்கடி தகராறு வருவது வழக்கம்.
    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பொன்னம்மாள் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அமலிநகரை சேர்ந்தவர் கிளாடி. இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

    இவரது மனைவி பொன்னம்மாள் (வயது 38). இவர்களுக்கு சுமார் 13 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். கிளாடிக்கும், பொன்னம்மாளுக்கும் அடிக்கடி தகராறு வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலையில் மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    சிறிது நேரத்தில் கிளாடி அங்கிருந்து கறிக்கடைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பொன்னம்மாள் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அருகில் இருந்தவர்கள் பொன்னமாளை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலையில் பொன்னம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குழந்தையுடன் இளம்பெண் மாயமானார்.
    • குழந்தையுடன் மாயமான பெண்ணை தேடி வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் மாட சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பொன் லட்சுமி (வயது 25). இவருக்கும், கணவர் முருகானந்தத்திற்கும் அடிக்கடி குடும்ப பிரச்சனை இருந்து வந்தது. இதனால் அவ்வப்போது இவர்களுக்குள் சண்டையும் ஏற்பட்டு வந்தது. இதனால் மனம் உடைந்த பொன் லட்சுமி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் அவர் தனது 4-வயது மகள் கவிபாரதியுடன் மாயமானார். இதுகுறித்து சேத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி குழந்தையுடன் மாயமான பெண்ணை தேடி வருகிறார்.

    • இளம்பெண்ணுக்கு அதே ஓட்டலில் வேலை பார்த்து வந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
    • இளம்பெண்ணின் கணவர் மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி கோமங்கலம் போலீசில் புகார் செய்தார்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம்புதூரை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி 7 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு இளம்பெண் ஊஞ்சவேலம்பட்டியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வேலைக்கு சென்றார். அப்போது இளம்பெண்ணுக்கு அதே ஓட்டலில் வேலை பார்த்து வந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வரவே அவர் தனது மனைவியை கண்டித்தார். இதன் கார ணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    மேலும் இளம்பெண்ணை அவரது கணவர் வேலையை விட்டும் நிறுத்தினார். சம்பவத்தன்று இளம்பெண்ணின் கணவர் வேலை சம்பந்தமாக வெளியூருக்கு சென்று இருந்தார்.

    அப்போது வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய இளம்பெண்ணின் கணவர் தனது மனைவி வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரை அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை.

    இது குறித்து இளம்பெண்ணின் கணவர் மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி கோமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    • பெற்றோர்கள் தமிழ்நாடு முதலமைச்சரிடம் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
    • காசோலையினை தமிழக செய்தித்துறை அமைச்சர் இல்லத்திற்கே நேரில் சென்று வழங்கினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி சாமுண்டி நகர் ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த இருதய லட்சுமி என்பவர் மூளைக் காசநோயினால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து தொடர் சிகிச்சை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க சமூக பங்களிப்பு நிதியிலிருந்து நிதி உதவியாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையினை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இல்லத்திற்கே நேரில் சென்று வழங்கினார்.

    இது குறித்து அமைச்சர் தெரிவித்ததாவது, திருப்பூர் மாநகராட்சி சாமுண்டி நகர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன், ராஜேஸ்வரி தம்பதியரின் மகள்இருதய லட்சுமி(வயது 28) மூளைக் காசநோயினால் பாதிக்கப்பட்டு உடல் செயல் இழந்து 8ஆண்டுகளாக பேசவும் முடியாமல், நடக்கவும் முடியாமல் இருந்து வந்த நிலையில் அவரின் பெற்றோர்கள் தமிழ்நாடு முதலமைச்சரிடம் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து சிகிச்சை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள்சங்க சமூக பங்களிப்பு நிதியிலிருந்து நிதி உதவியாக ரூ.5 லட்சத்திற்கான காசோலை பெற்றோர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் அவரது உடல் நலம் வெகு விரைவில் பூரண குணமடைந்து அவரது லட்சியமான விஞ்ஞானியாக வேண்டும் என்கிற கனவு நிறைவேற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். அப்போது மேயர் தினேஷ்குமார், கலெக்டர் கிறிஸ்துராஜ், துணை மேயர் பாலசுப்பிரமணியன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கவுரவ தலைவர் சக்திவேல் மற்றும் சங்கத்தலைவர்சுப்பிரமணியன், இணை செயலாளர் குமார் துரைசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

    • கோவில்பட்டியில் இளம்பெண் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
    • வீட்டில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எஸ்.எஸ்.நகரை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி கார்த்திகா (24). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இன்று காலை இவர்களது வீட்டில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அங்கு கார்த்திகா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

    உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் தங்கராஜ் மற்றும் அவரது 2 குழந்தைகளும் இல்லை. அவர்கள் எங்கே சென்றார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இளம்பெண் மரண வழக்கில் பல்வேறு மர்மங்கள் உள்ளதால் நவநீதனை காவலில் எடுத்து விசாரிக்க கோவை ஆர்.எஸ்.புரம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    கோவை:

    கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் நவநீதன் (வயது 50). தொழில் அதிபரான இவர் கோவை மட்டுமல்லாமல் ஈரோட்டிலும் டைல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    ஈரோட்டில் உள்ள நிறுவனத்தில் பவானியைச் சேர்ந்த 37 வயது பெண் வேலை பார்த்து வந்தார். கணவரை பிரிந்து வாழ்ந்த அந்த பெண், நீண்ட நாட்களாக நவநீதனின் நிறுவனத்தில் வேலை பார்த்தார்.

    சம்பவத்தன்று அந்த பெண், கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நவநீதனின் வீட்டுக்கு வந்தார். அதன்பின் தீக்காயங்களுடன் அந்த பெண் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    நவநீதன் தரப்பில் மருத்துவச் செலவுக்கு அந்த பெண் பணம் கேட்டு வந்ததாகவும், பணம் கொடுக்க மறுத்ததால் அந்த பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்பட்டது.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண்ணிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். அப்போது அந்த பெண் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.

    கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த தன்னை தொழில் அதிபர் நவநீதன் ஆசைவார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் நான் தொடர்ந்து 6 முறை கர்ப்பம் ஆனேன். 6 முறையும் மிரட்டியே எனது கர்ப்பத்தை கலைக்கச் செய்தார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட நான் மருத்துவ உதவிக்காக பணம் கேட்டுச் சென்றேன். அங்கு நவநீதனும், அவரது மனைவி அகிலாவும் சேர்ந்து என் மீது தீவைத்து எரித்தனர் என தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றினர். தொழில் அதிபர் நவநீதன், அவரது மனைவி அகிலா ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்து.

    போலீசார் அவர்களை தேடிச் சென்றபோது 2 பேரும் தலைமறைவாகி இருந்தனர். அவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அவர்கள் 2 பேரையும் பல்வேறு இடங்களுக்கு சென்று தேடி வந்தனர்.

    இந்தநிலையில் கரூர் மாவட்டம் குளித்தலை கோர்ட்டில் நேற்று தொழில் அதிபர் நவநீதன் சரண் அடைந்தார். அவரை திருச்சி மத்திய ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் திருச்சி ஜெயிலில் நவநீதன் அடைக்கப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து இளம்பெண் மரண வழக்கில் பல்வேறு மர்மங்கள் உள்ளதால் நவநீதனை காவலில் எடுத்து விசாரிக்க கோவை ஆர்.எஸ்.புரம் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக கோவை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.

    நவநீதனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனவும், அவரை திருச்சி ஜெயிலில் இருந்து கோவை மத்திய ஜெயிலுக்கு மாற்ற வேண்டும் எனவும் மனு செய்கிறார்கள்.

    இந்த மனு வருகிற 6-ந் தேதி விசாரணைக்கு வரும் என தெரிகிறது. அப்போது நவநீதனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கிடைக்கும் என போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.

    இதற்கிடையே நவநீதனின் மனைவி எங்கு தலைமறைவாகி உள்ளார் எனவும் விசாரணை நடக்கிறது. அவரை பிடிக்க போலீசார் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

    பெண் ஊழியர் கொலை தொடர்பாக தொழில் அதிபர் நவநீதன் மற்றும் அவரது மனைவி அகிலா ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    கோவை:

    ஈரோடு மாவட்டம் பவானி பகுதியைச் சேர்ந்தவர் 37 வயது பெண். இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்தார்.

    அந்த பெண் ஈரோட்டில் உள்ள டைல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். டைல்ஸ் நிறுவனத்தை கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் நவநீதன் (வயது 50) என்பவர் நடத்தி வருகிறார்.

    இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பெண் ஈரோட்டில் இருந்து கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நவநீதன் வீட்டுக்கு வந்தார். அதன்பிறகு உடல் கருகிய நிலையில் அந்த பெண் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுதொடர்பாக தொழில் அதிபர் தரப்பில் அந்த பெண், சிகிச்சைக்காக தன்னிடம் பணம் கேட்டு வந்ததாகவும், பணம் கொடுக்க மறுத்ததால் தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்ததாகவும் போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அந்த பெண்ணை சந்தித்து வாக்குமூலம் பெற்றனர். அப்போது அந்த பெண் திடுக்கிடும் பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.

    கணவரை பிரிந்து வாழ்ந்த என்னுடன் தொழில் அதிபர் நவநீதன் நெருங்கி பழகினார். எனக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் நான் கர்ப்பம் அடைந்தேன். உடனே நவநீதன் கர்ப்பத்தை கலைக்கும்படி கூறினார். நானும் கர்ப்பத்தை கலைத்தேன். இப்படியே 6 முறை நான் கர்ப்பமாகி கருவை கலைத்துள்ளேன். இதில் நான் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டேன். இந்த விவரங்கள் அவரது மனைவி அகிலாவுக்கும் தெரியும்.

    உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நான் மருத்துவ செலவுக்கு பணம் கேட்டு நவநீதன் வீட்டுக்கு சென்றேன். அங்கு குளியல் அறைக்கு அழைத்துச் சென்று நவநீதனும், அவரது மனைவியும் சேர்ந்து என் மீது மண்எண்ணெயை ஊற்றி தீவைத்தனர். இதில் நான் படுகாயம் அடைந்தேன்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருந்தார்.

    இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஊழியர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் தற்கொலைக்கு முயன்றதாக பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை, பெண்ணின் வாக்குமூலத்தின் பேரில் கொலை வழக்காக ஆர்.எஸ்.புரம் போலீசார் பதிவு செய்தனர். நவநீதன் மற்றும் அவரது மனைவி அகிலா ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    அவர்கள் 2 பேரையும் போலீசார் தேடிச் சென்றபோது அவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் 2 பேரையும் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் 2 பேரையும் பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.


    தொழில் அதிபர் நவநீதன், அவரது மனைவி அகிலா மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காமாபுரத்தை சேர்ந்த 37 வயது பெண். இவருக்கு திருமணமாகி விட்டது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தாயார் வீட்டில் வாழ்ந்து வந்தார். மேலும் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த நவநீதன் ஆவார்.

    சம்பவத்தன்று இளம்பெண் தான் வேலைபார்க்கும் டைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரிடம் மருத்துவ செலவுக்கு பணம் வாங்குவதற்காக கோவை ஆர்.எஸ்.புரத்தில், உள்ள அவரது வீட்டிற்கு வந்தார். அங்கு அவரிடம், தனக்கு உடல்நிலை சரியில்லை. மருத்துவ செலவுக்கு பணம் வேண்டும் என கேட்டார்.

    ஆனால் உரிமையாளர் கொடுக்க மறுக்கவே வேதனை அடைந்த இளம்பெண் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். உடனடியாக ஆர்.எஸ்.புரம் போலீசார் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் கணவரை பிரிந்து எனது தாயார் வீட்டில் வசித்து வந்தேன். மேலும் அந்த பகுதியில் உள்ள டைல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அப்போது அந்த நிறுவனத்தின் உரிமையாளர் நவநீதன் எனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.

    மேலும் பல முறை என்னை பலாத்காரம் செய்தார். இதனால் நான் கர்ப்பமானேன். இதுகுறித்து அவரிடம் தெரிவித்தபோது கருவை கலைக்க சொன்னார். இதுபோன்று 6 முறை கர்ப்பத்தை கலைத்துள்ளேன். இந்த விஷயம் அனைத்து நான் வேலைபார்த்த நிறுவனத்தின் உரிமையாளரின் மனைவி அகிலாவுக்கு தெரியும்.

    ஆனால் அவரும் அதனை கண்டு கொள்ளவில்லை. நான் 6 முறை கர்ப்பத்தை கலைத்ததால் எனக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதற்கு மருத்துவ செலவுக்கு பணம் கேட்பதற்காக கோவையில் உள்ள நவநீதன் வீட்டிற்கு வந்தேன். அப்போது அவரும், அவரது மனைவியும் என்னை தனியாக வீட்டிற்குள் அழைத்து சென்றனர்.

    அங்குள்ள குளியலறையில் வைத்து என் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டனர்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இது தொடர்பாக போலீசார் நவநீதன், அவரது மனைவி அகிலா மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையடுத்து ஆர்.எஸ்.புரம் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்தனர். தங்களை போலீஸ் தேடுவதை அறிந்த 2 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே பெண்ணின் சாவுக்கு நீதி கேட்டு அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.
    பணகுடி அருகே கணவரால் தீ வைக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    பணகுடி:

     நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள நெருஞ்சி காலனியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி பவளஜோதி (வயது 30). கணவன்-மனைவிக்கிடையே குடும்பத்தகராறு காரணமாக அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

    கடந்த 4-ந்தேதி அவர்க–ளுக்கிடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த சுரேஷ் மண்எண்ணையை எடுத்து பவளஜோதி மீது ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் உடல் முழுவதும் தீப்பிடித்து அலறித்துடித்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இதைத்தொடர்ந்து பணகுடி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பவளஜோதி பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கை  கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×