என் மலர்

  நீங்கள் தேடியது "Panakudi"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • புன்னியவாளன்புரத்தில் உள்ள ஒரு கடையில் புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • பொன்ராஜ் என்பவரது கடையில் போலீசார் சோதனை செய்தனர்.

  நெல்லை:

  பணகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வதாஸ் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது புன்னியவாளன்புரத்தில் உள்ள ஒரு கடையில் புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

  அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பொன்ராஜ்(வயது 55) என்பவரது கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு 26 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கடை உரிமை–யாளரான பொன்ராஜை கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பணகுடி அருகே உள்ள சிதம்பராபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் காமராஜ் என்ற துரை. இவரது மனைவி லதா(வயது 41).
  • கணவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

  நெல்லை:

  பணகுடி அருகே உள்ள சிதம்பராபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் காமராஜ் என்ற துரை. இவரது மனைவி லதா(வயது 41).

  காமராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் தான் சம்பாதித்த பணத்தில் ரூ.12 லட்சத்திற்கு கார்கள் வாங்கி டிராவல்ஸ் நடத்தி வந்துள்ளார்.

  ஆனால் அதில் பெரிய அளவில் வருமானம் கிடைக்கவில்லை என்பதால் லதாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

  இதனால் மனம் உடைந்த லதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பழவூர் போலீசார் அங்கு விரைந்து சென்று லதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பணகுடி அருகே உள்ள தளவாய்புரம் பாரத் ஆங்கில வழிக்கல்வி பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது.
  • விழாவில் மாணவ - மாணவிகளின் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி நடைபெற்றது.

  பணகுடி:

  பணகுடி அருகே உள்ள தளவாய்புரம் பாரத் ஆங்கில வழிக்கல்வி பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது.

  மாணவர்களுக்கு விளக்கம்

  பள்ளியின் தாளாளர் லாரன்ஸ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பள்ளியின் நிர்வாகி ஜெயராஜ் கலந்து கொண்டார்.

  விழாவில் மாணவ - மாணவிகளின் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் லாரன்ஸ் பேசும்போது, ஆசிரியர் தினம் கொண்டாடுவதின் நோக்கம் குறித்தும், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதற்குரிய வழிமுறைகளை குறித்தும் எடுத்துக் கூறினார். பின்னர் மாணவ -மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

  விழாவில் பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் ஜெயபரமேஷ், துணை முதல்வர் சித்ரா மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள் செய்திருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பணகுடி அருகே உள்ள பழவூரை அடுத்த கொத்தன்குளத்தில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது.
  • ராஜசேகரை தாக்கி அவரிடம் இருந்து ரூ.5,800 பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றனர்

  நெல்லை:

  பணகுடி அருகே உள்ள பழவூரை அடுத்த கொத்தன்குளத்தில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடையின் பாரில் புதுமனை செட்டிகுளத்தை சேர்ந்த ராஜசேகர்(வயது 48) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

  பணம் பறிப்பு

  நேற்று முன்தினம் இரவு அவர் பணியில் இருந்தபோது அங்கு 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் ராஜசேகரை தாக்கி அவரிடம் இருந்து ரூ.5,800 பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றனர். இதுதொடர்பாக பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர்.

  அதில் கிடைத்த அடையாளங்களை வைத்து தேடி பார்த்ததில் குமரி மாவட்டம் மண்டைகாடு பாலன்விளையை சேர்ந்த வேல்முருகன்(36), லீபுரத்தை சேர்ந்த வைகுண்டராஜன்(32) ஆகியோர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

  கைது

  இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து பணம் மற்றும் செல்போனை மீட்டனர். கைதான வேல்முருகன் மீது குளச்சல், மண்டைகாடு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 30-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரோஸ்மியாபுரத்தை சேர்ந்த வைகுண்ட மணி என்பவர் நாங்குநேரி பகுதியை சேர்ந்த சுபேகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
  • கணவன்-மனைவியி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

  பணகுடி:

  பணகுடியை அடுத்த ரோஸ்மியாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிதம்பர வடிவு. இவரது மகன் வைகுண்ட மணி. இவர் நாங்குநேரி பகுதியை சேர்ந்த சுபேகா என்ற பெண்ணை கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

  கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவியி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வைகுண்ட மணி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இச்சம்பவம் குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சில வாரங் களுக்கு முன்பு பெற்றோர் வீட்டில் தங்கியிருக்கும் சுபேகாவிடம், தன்னுடைய குழந்தையை காட்டும்படி வைகுண்ட மணி கூறி உள்ளார்.

  ஆனால் சுபேகா குழந்தையை காட்ட மறுத்து விட்டதாக கூறப் படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்று விசாரித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காவல்கிணறு நெடுஞ்சாலையில் சென்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
  • விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

  பணகுடி:

  நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார்.

  அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

  இதில் அந்த நபர் சாலையில் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

  அவரை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

  அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார். இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ×