பணகுடி அருகே குடும்ப தகராறில் பெண் தற்கொலை

பணகுடி அருகே உள்ள சிதம்பராபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் காமராஜ் என்ற துரை. இவரது மனைவி லதா(வயது 41). கணவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
பணகுடி அருகே குடும்ப தகராறில் பெண் தற்கொலை
Published on

நெல்லை:

பணகுடி அருகே உள்ள சிதம்பராபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் காமராஜ் என்ற துரை. இவரது மனைவி லதா(வயது 41).

காமராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் தான் சம்பாதித்த பணத்தில் ரூ.12 லட்சத்திற்கு கார்கள் வாங்கி டிராவல்ஸ் நடத்தி வந்துள்ளார்.

ஆனால் அதில் பெரிய அளவில் வருமானம் கிடைக்கவில்லை என்பதால் லதாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனம் உடைந்த லதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பழவூர் போலீசார் அங்கு விரைந்து சென்று லதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com