பணகுடி அருகே டாஸ்மாக் காவலாளியை தாக்கி பணம் பறித்த 2 பேர் கைது

பணகுடி அருகே உள்ள பழவூரை அடுத்த கொத்தன்குளத்தில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது.ராஜசேகரை தாக்கி அவரிடம் இருந்து ரூ.5,800 பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றனர்
பணகுடி அருகே டாஸ்மாக் காவலாளியை தாக்கி பணம் பறித்த 2 பேர் கைது
Published on

நெல்லை:

பணகுடி அருகே உள்ள பழவூரை அடுத்த கொத்தன்குளத்தில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடையின் பாரில் புதுமனை செட்டிகுளத்தை சேர்ந்த ராஜசேகர்(வயது 48) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

பணம் பறிப்பு

நேற்று முன்தினம் இரவு அவர் பணியில் இருந்தபோது அங்கு 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் ராஜசேகரை தாக்கி அவரிடம் இருந்து ரூ.5,800 பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றனர். இதுதொடர்பாக பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர்.

அதில் கிடைத்த அடையாளங்களை வைத்து தேடி பார்த்ததில் குமரி மாவட்டம் மண்டைகாடு பாலன்விளையை சேர்ந்த வேல்முருகன்(36), லீபுரத்தை சேர்ந்த வைகுண்டராஜன்(32) ஆகியோர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

கைது

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து பணம் மற்றும் செல்போனை மீட்டனர். கைதான வேல்முருகன் மீது குளச்சல், மண்டைகாடு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 30-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. 

X

Maalai Malar
www.maalaimalar.com