என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Bjp demands"
- ராதாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பண்டார பெருங்குளம் கிட்டத்தட்ட 250 ஏக்கர் பாசன பகுதி பெறக்கூடிய குளமாகும்
- தற்போது வரை தண்ணீர் வழங்கப்படாமல் இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டுகின்றனர்.
பணகுடி:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பண்டார பெருங்குளம் கிட்டத்தட்ட 250 ஏக்கர் பாசன பகுதி பெறக்கூடிய குளமாகும். இந்த குளத்திற்கு கொடுமுடி அணையிலிருந்து கடந்த மாதம் தண்ணீர் திறந்து விடபட்டது. தற்போது வரை 27 நாள் ஆகியும் இதுவரை தண்ணீர் வரவில்லை. அதனால் இந்த குளத்தை நம்பி விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகள் விவசாயம் செய்ய வேண்டுமா? வேண்டாமா? என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்.
மேலும் இந்த தண்ணீர் முதல் குளமான பண்டாரப் பெருங்குளத்துக்கு தான் வழங்க வேண்டும். ஆனால் தற்போது வரை வழங்கப்படாமல் இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டுகின்றனர்.
மொத்தம் 52 குளங்கள் இருக்கிறது அந்த குளங்களுக்கு வழங்கிய பிறகு கடைசியாக தான் இந்த பண்டார பெருங்குளத்துக்கு தண்ணீர் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
இது குறித்து ராதாபுரம் தெற்கு ஒன்றிய பா.ஜ.க. ஊடக பிரிவு தலைவர் ராதை காமராஜ் கூறியதாவது :-
பண்டாரபெருங்குளம் ராதாபுரம் பகுதியில் மிகப்பெரிய குளம். இந்த குளத்தை நம்பி கிட்டத்தட்ட 250-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளது.
இந்த குளத்திற்காகவே கொடுமுடி அணையில் இருந்து வடமலையான் கால்வாய் என்ற தனி கால்வாய் வெட்டப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. நாளடைவில் இந்த குளம் புறக்கணிக்கப்பட்டு விட்டது.
மேலும் புதிதாக 20- க்கும் மேற்பட்ட குளங்கள் இந்த வடமலையான் கால்வாயில் சேர்க்கப்பட்டு அந்த குளங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதனால் பண்டார பெருங்கு ளத்திற்கு வரவேண்டிய தண்ணீர் வழங்கப்படாமல் கிட்டத்தட்ட 27 நாட்க ளாகிறது.
கடைமடை குளத்திற்கு தான் முதலில் தண்ணீர் வழங்க வேண்டும் என்பது முதல்-அமைச்சரின் உத்தரவு. தற்போது குளத்தில் தண்ணீர் இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் வழங்க கோரி மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை.
குளத்தின் மறுகால் மற்றும் மதகுகள் உடைந்து முட்புதர்கள் மண்டி கிடக்கிறது. பல ஆண்டுகளாக பராமரிப்பு பணிகளும் நடைபெறவில்லை. ஆகவே உடனடியாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குளத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை போர் கால அடிப்படையில் உடனடியாக வழங்க வேண்டும். உடைந்த மறுகால் மற்றும் மதகுகளை சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
