என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பணகுடியில் காதல் மனைவி பிரிந்ததால் வாலிபர் தற்கொலை
  X

  பணகுடியில் காதல் மனைவி பிரிந்ததால் வாலிபர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரோஸ்மியாபுரத்தை சேர்ந்த வைகுண்ட மணி என்பவர் நாங்குநேரி பகுதியை சேர்ந்த சுபேகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
  • கணவன்-மனைவியி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

  பணகுடி:

  பணகுடியை அடுத்த ரோஸ்மியாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிதம்பர வடிவு. இவரது மகன் வைகுண்ட மணி. இவர் நாங்குநேரி பகுதியை சேர்ந்த சுபேகா என்ற பெண்ணை கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

  கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவியி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வைகுண்ட மணி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இச்சம்பவம் குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சில வாரங் களுக்கு முன்பு பெற்றோர் வீட்டில் தங்கியிருக்கும் சுபேகாவிடம், தன்னுடைய குழந்தையை காட்டும்படி வைகுண்ட மணி கூறி உள்ளார்.

  ஆனால் சுபேகா குழந்தையை காட்ட மறுத்து விட்டதாக கூறப் படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்று விசாரித்து வருகின்றனர்.

  Next Story
  ×