பணகுடியில் கடையில் விற்பனைக்கு வைத்திருந்த 26 கிலோ புகையிலை பறிமுதல்

புன்னியவாளன்புரத்தில் உள்ள ஒரு கடையில் புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.பொன்ராஜ் என்பவரது கடையில் போலீசார் சோதனை செய்தனர்.
பணகுடியில் கடையில் விற்பனைக்கு வைத்திருந்த 26 கிலோ புகையிலை பறிமுதல்
Published on

நெல்லை:

பணகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வதாஸ் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது புன்னியவாளன்புரத்தில் உள்ள ஒரு கடையில் புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பொன்ராஜ்(வயது 55) என்பவரது கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு 26 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கடை உரிமை–யாளரான பொன்ராஜை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com