என் மலர்
உள்ளூர் செய்திகள்

தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் காசோலையினை வழங்கிய காட்சி.
மூளை காசநோயினால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் சிகிச்சைக்கு நிதி உதவி
- பெற்றோர்கள் தமிழ்நாடு முதலமைச்சரிடம் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
- காசோலையினை தமிழக செய்தித்துறை அமைச்சர் இல்லத்திற்கே நேரில் சென்று வழங்கினார்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி சாமுண்டி நகர் ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த இருதய லட்சுமி என்பவர் மூளைக் காசநோயினால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து தொடர் சிகிச்சை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க சமூக பங்களிப்பு நிதியிலிருந்து நிதி உதவியாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையினை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இல்லத்திற்கே நேரில் சென்று வழங்கினார்.
இது குறித்து அமைச்சர் தெரிவித்ததாவது, திருப்பூர் மாநகராட்சி சாமுண்டி நகர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன், ராஜேஸ்வரி தம்பதியரின் மகள்இருதய லட்சுமி(வயது 28) மூளைக் காசநோயினால் பாதிக்கப்பட்டு உடல் செயல் இழந்து 8ஆண்டுகளாக பேசவும் முடியாமல், நடக்கவும் முடியாமல் இருந்து வந்த நிலையில் அவரின் பெற்றோர்கள் தமிழ்நாடு முதலமைச்சரிடம் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து சிகிச்சை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள்சங்க சமூக பங்களிப்பு நிதியிலிருந்து நிதி உதவியாக ரூ.5 லட்சத்திற்கான காசோலை பெற்றோர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அவரது உடல் நலம் வெகு விரைவில் பூரண குணமடைந்து அவரது லட்சியமான விஞ்ஞானியாக வேண்டும் என்கிற கனவு நிறைவேற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். அப்போது மேயர் தினேஷ்குமார், கலெக்டர் கிறிஸ்துராஜ், துணை மேயர் பாலசுப்பிரமணியன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கவுரவ தலைவர் சக்திவேல் மற்றும் சங்கத்தலைவர்சுப்பிரமணியன், இணை செயலாளர் குமார் துரைசாமி ஆகியோர் உடனிருந்தனர்.






