மங்கலம்பேட்டையில் கிணற்றில் தவறி விழுந்த இளம் பெண் மீட்பு

சந்தியா அதே பகுதியில் உள்ள சுமார் 40 அடி அழமுள்ள தரைக் கிணற்றில் தவறி விழுந்தார்.தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, இளம் பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர்.
மங்கலம்பேட்டையில் கிணற்றில் தவறி விழுந்த இளம் பெண் மீட்பு
Published on

கடலூர்:

விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை பழைய நெசவாளர் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் சந்தியா (வயது 17).இவர் அதே பகுதியில் உள்ள மகாலட்சுமி என்பருக்கு சொந்தமான சுமார் 40 அடி அழமுள்ள தரைக் கிணற்றில் தவறி விழுந்தார். இது குறித்த தகவலின் பேரில், மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, இளம் பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com