மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாததால் இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

சேலம் சூரமங்கலம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாசாமி. கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி நளினி என்ற மனைவி உள்ளார். அய்யாசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் மனவேதனையில் இருந்த நளினி இன்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாததால் இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

சேலம்:

சேலம் சூரமங்கலம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாசாமி. கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி நளினி (வயது 37) என்ற மனைவி உள்ளார். அய்யாசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் கணவரை, நளினி கண்டித்துள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லை. இந்த நிலையில் நளினிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து தனது கணவரிடம் தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளார். ஆனால் அய்யாச்சாமி, நளினியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அலட்சியாக இருந்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த நளினி இன்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நளினியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com