search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Cup 2019"

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விலை இங்கிலாந்தை விட இந்தியா மோதும் ஆட்டத்துக்கு தான் அதிகம் வசூலிக்கப்படுகிறது. #WorldCup2019
    லண்டன்:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது.

    கடைசியாக 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடந்தது. இதில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் பெற்றது.

    12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதிவரை இங்கிலாந்தில் நடக்கிறது.

    இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

    1992-ம் ஆண்டை போல இந்த உலக கோப்பையில் ஆட்ட முறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 1 முறை ரவுண்டு ராபின் முறையில் மோதும், ஒவ்வொரு அணிக்கும் 9 லீக் ஆட்டம் இருக்கும்.

    ‘லீக்‘ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

    விராட்கோலி தலைமையிலான இந்திய அணி மோதும் ஆட்டத்தை காண ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் உள்ளனர். அதன் காரணமாக இந்தியா மோதும் ஆட்டத்தின் டிக்கெட் விலையும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்து மோதும் ஆட்டத்தை விட இந்தியா விளையாடும் போட்டிக்கு டிக்கெட் விலை கூடுதலாக இருக்கிறது.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஜூன் 5-ந்தேதி தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. சவுத்தம்டனில் நடைபெறும் இந்தப் போட்டிக்கு ஹோட்டல் பாக்சுக்கு ஒரு டிக்கெட்டின் விலை ரூ.63,500 ஆகும். இதோடு வாட் வரியும் கூடுதலாகும்.

    இதே மைதானத்தில் இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் மோதும் ஆட்டத்துக்கு ஹோட்டல் பாக்சின் டிக்கெட் விலை ரூ.54,418 + வாட்வரி ஆகும். கிட்டத்தட்ட ரூ.10 ஆயிரம் வரை இந்தியா மோதும் போட்டிக்கு கூடுதல் விலையாகும்.

    இந்த ஸ்டேடியத்தில் உள்ள ரூப்டாப் ஹோமர் ஸ்டாண்டில் இந்தியா மோதும் ஆட்டத்துக்கு டிக்கெட் விலை ரூ.31 ஆயிரம் ஆகும். இங்கிலாந்து மோதும் போட்டிக்கு இதே டிக்கெட் விலை ரூ.27,159 ஆகும்.

    அதே போல இந்தியா- இலங்கை அணிகள் லீட்ஸ் மைதானத்தில் மோதும் ஆட்டத்துக்கும் டிக்கெட் விலை அதிகமாகும். ஹாஸ் பிட்டாலிடி பாக்ஸ் டிக்கெட் விலை ரூ.45 ஆயிரமும், இதே மைதானத்தில் இங்கிலாந்து மோதும் போட்டியின் ஹாஸ் பிட்டாலிடி பாக்ஸ் விலை ரூ.31 ஆயிரமாகும்.

    இந்தியா- பாகிஸ்தான் (ஜூன் 16) மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன. இந்திய அணி மோதும் மற்ற ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் பெரும்பாலும் விற்றுவிட்டன. 2 சதவீத டிக்கெட்டுகள் எஞ்சியுள்ளன. #WorldCup2019
    நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் டேவிட் வார்னர் டக்அவுட் ஆகிய நிலையில், ஸ்மித் சிறப்பாக விளையாடி 89 ரன்கள் விளாசினார். #CWC2019
    ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் ஸ்மித் மற்றும் வார்னர். இருவரும் தென்ஆப்பிரிக்கா தொடரின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைபெற்றனர். இந்தத்தடை தற்போது முடிவடைந்ததால், உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ளனர்.

    நேற்றுமுன்தினம் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்துக்கு எதிராக உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் மோதியது. இதில் இருவரும் களம் இறங்கினர். 3-வது வீரராக களம் இறங்கிய டேவிட் வார்னர் 39 ரன்கள் சேர்த்தார். அடுத்து களம் இறங்கிய ஸ்மித் 22 ரன்கள் சேர்த்தார்.

    இரு அணிகளுக்கு இடையிலான 2-வது பயிற்சி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



    முதல் ஆட்டத்தில் 39 ரன்கள் சேர்த்த டேவிட் வார்னர் டக்அவுட் ஆனார். ஆனால் ஸ்மித் சிறப்பாக விளையாடி 77 பந்தில் 89 ரன்கள் குவித்தார். உஸ்மான் கவாஜா 56 ரன்களும், மேக்ஸ்வெல் 52 ரன்களும் சேர்த்தனர்.

    காயம் குணமாகி அணிக்கு திரும்பிய மிட்செல் ஸ்டார்க் ஐந்து ஓவரில் 15 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வரும் டிவில்லியர்ஸ் உலக கோப்பை வெல்லப்போது யார்? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். #WorldCup2019 #ABdeVilliers
    புதுடெல்லி:

    12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மே மாதம் 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது.

    இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

    தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் உலககோப்பை போட்டியில் ஆடமாட்டார். சர்வதேச போட்டிகளில் இருந்து அவர் ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார். சிறந்த அதிரடி வீரரான அவர் இந்த உலககோப்பையில் இல்லாதது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமே.

    ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வரும் டிவில்லியர்ஸ் உலக கோப்பை வெல்லப்போது யார்? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நான் கடந்த ஆண்டு ஓய்வு முடிவை அறிவித்தேன். 100 சதவீத திருப்தியுடன் இந்த முடிவை எடுத்தேன்.

    உலககோப்பையில் மீண்டும் விளையாட ஆர்வமாகவே இருந்தேன். ஆனாலும் ஓய்வு முடிவு மகிழ்ச்சியானதே. ஓய்வு முடிவை எடுத்ததற்காக நான் வருத்தம் எதுவும் படவில்லை.

    உலககோப்பையை வெல்லப்போவது யார்? என்று கணிப்பது கடினம். ஏனென்றால் பல அணிகளும் திறமையுடன் உள்ளன.

    இந்தியா, பாகிஸ்தான் அணிகள் சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளார்கள். இங்கிலாந்து சொந்த மண்ணில் ஆடுகிறது. நியூசிலாந்து எப்போதுமே உலககோப்பையில் நன்றாக ஆடும். தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சு பலம் வாய்ந்து காணப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #WorldCup2019 #ABdeVilliers
    அடுத்த மாதம் தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. #westIndies #CWC2019
    பார்படோஸ்:

    10 அணிகள் இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான உத்தேச அணிகளின் பட்டியலை ஏப்ரல் 23-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கெடு விதித்து இருந்தது. இதன்படி நேற்று முன்தினம் கடைசி அணியாக வீரர்களின் பட்டியலை ஐ.சி.சி.யிடம் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் சமர்ப்பித்தது. ஆனால் அணியில் யார்-யார் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பது தெரிவிக்கப்படாமல் இருந்தது.

    இந்த நிலையில் ஒரு நாள் தாமதமாக உலக கோப்பை போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம் நேற்று வெளியிடப்பட்டது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கலக்கி வரும் ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸல் மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார். ஆனால் அதிரடி மன்னன் பொல்லார்ட், சாமுவேல்ஸ் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. விரலில் காயத்தால் அவதிப்படும் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைனும் ஓரங்கட்டப்பட்டார். 39 வயதான கிறிஸ் கெய்ல் தனது இடத்தை தக்க வைத்துள்ளார். இது அவருக்கு 5-வது உலக கோப்பை போட்டியாகும்.



    வெஸ்ட் இண்டீஸ் அணி வருமாறு:- ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), பாபியன் ஆலென், டேரன் பிராவோ, கார்லஸ் பிராத்வெய்ட், ஷெல்டன் காட்ரெல், ஷனோன் கேப்ரியல், கிறிஸ் கெய்ல், ஹெட்மயர், ஷாய் ஹோப், இவின் லீவிஸ், ஆஷ்லே நர்ஸ், நிகோலஸ் பூரன், கெமார் ரோச், ஆந்த்ரே ரஸ்செல், ஒஷானே தாமஸ். #westIndies #CWC2019
    டோனி இந்த முறையும் உலக கோப்பையை பெற்று தருவார் என்று இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #MSDhoni #KapilDev
    புதுடெல்லி:

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்திய கிரிக்கெட் அணிக்காக நிறைய சேவைகளை செய்தவர் டோனி. அவரை பற்றி நான் சொல்ல வேண்டியது இல்லை. அவர் எவ்வளவு காலம் விளையாட விரும்புகிறார் என்பது யாருக்கும் தெரியாது. உடல் தகுதியை பொறுத்து அவர் முடிவு செய்ய வேண்டிய வி‌ஷயம்.

    ஆனால் டோனி அளவுக்கு நாட்டுக்காக சிறப்பாக செயல்பட்ட இன்னொரு கிரிக்கெட் வீரர் இல்லை என்றே சொல்வேன். அவரை மதிக்க வேண்டும். அதோடு அவரை வாழ்த்தவும் வேண்டும்.

    டோனி இந்த முறையும் உலக கோப்பையை பெற்று தருவார் என்று நம்புகிறேன். தற்போது உள்ள இந்திய அணி நல்ல நிலையில் உள்ளது. ஆனால் உலககோப்பையை வெல்வது எளிதல்ல. அணியாக ஆடவேண்டும். காயம் ஏற்பட்டால் பார்த்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் அதிர்ஷ்டம் கை கொடுத்தால் நிச்சயம் இந்த அணி உலககோப்பையை வெல்லும்.

    உலககோப்பை போட்டிக்கான இந்திய வீரர்களை தேர்வு செய்யும் பணியை தேர்வு குழுவினர் செய்து உள்ளனர். நாம் அதனை மதிக்க வேண்டும். ரி‌ஷப் பந்துக்கு பதிலாக அவர்கள் தினேஷ் கார்த்திக்கை எடுத்துள்ளார்கள். அப்படியென்றால் அது சரியாகத்தான் இருக்கும். நாம் தேர்வு குழுவினரின் சிறந்த பணியை நம்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்திய அணிக்கு கபில்தேவ் தான் முதல் உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தார். 1983-ம் ஆண்டு அவரது தலைமையிலான அணி வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி கோப்பையை வென்றது.

    28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி 2-வது உலககோப்பையை பெற்றுக் கொடுத்தார். 2011-ம் ஆண்டு அவரது தலைமையிலான இந்திய அணி இலங்கையை வீழ்த்தி பட்டம் வென்றது.

    தற்போது விராட்கோலி தலைமையில் இந்திய அணி 3-வது முறையாக உலக கோப்பையை வெல்லுமா? என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. டோனி ஆட்டத்தை நிறைவு செய்வதில் தொடர்ந்து வல்லவராக இருப்பதால் அவர் மீதான எதிர்பார்ப்பு இருக்கிறது.

    12-வது உலககோப்பை போட்டி மே மாதம் 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. #MSDhoni #KapilDev
    உலக கோப்பையில் விளையாடும் இந்திய அணியில் ரிஷப் பந்தை தேர்வு குழுவினர் நிராகரித்தது சரியானதுதானா? என்ற கேள்வி எழுந்துள்ளது. #DineshKarthik #RishabhPant #CWC2019
    12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது.

    உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழு நேற்று அறிவித்தது.

    தமிழகத்தை சேர்ந்த 33 வயதான தினேஷ் கார்த்திக், 28 வயதான விஜய் சங்கர் ஆகியோர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    தினேஷ் கார்த்திக் 2-வது முறையாக உலக கோப்பை அணியில் இடம் பெற்றுள்ளார். இதற்கு முன்பு 2007 போட்டியில் ஆடினார். வெஸ்ட் இண்டீசில் நடந்த இந்த உலக கோப்பையில் இந்தியா முதல் சுற்றிலேயே வெளியேறியது. விஜய்சங்கர் உலக கோப்பையில் அறிமுகமாகிறார்.

    இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக டோனி இருக்கிறார். 2-வது விக்கெட் கீப்பராக யார் தேர்வு செய்யப்படுவார் என்பதில் இளம் வீரரான ரி‌ஷப் பந்த், அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக் இடையே கடும் போட்டி நிலவியது.

    அதிரடி பேட்ஸ்மேனான ரி‌ஷப் பந்த் தேர்வு செய்யப்படுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்வு குழுவினர் அவரை நிராகரித்துவிட்டு தினேஷ் கார்த்திகை தேர்வு செய்தனர்.

    உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இருந்து ரி‌ஷப் பந்தை புறக்கணித்த தேர்வு குழுவின் முடிவு தவறானவை என்ற எண்ணம் எதிரொலிக்கிறது.

    ரி‌ஷப் பந்தை தேர்வு செய்யாதது தனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வல்லவருமான கவாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

    பெரும்பாலான தேர்வு குழுவினர் ரிஷப் பந்தை சேர்ப்பதாகவே இருந்தனர். உலக கோப்பை போட்டி மிகப்பெரியது என்பதால் திறமைக்கு பதிலாக அனுபவத்துக்கு அணி நிர்வாகம் முன்னுரிமை கொடுத்தது. தினேஷ் கார்த்திகை தேர்வு செய்தது. 90 நிமிடம் நடந்த விவாதத்துக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    இந்தியாவின் 4-வது வரிசை இன்னும் நிரப்பப்படாமல் இருக்கிறது. இந்த வரிசைக்கு ரி‌ஷப் பந்தை அனுப்பி இடத்தை நிரப்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. தேர்வு குழுவினர் இதை செய்ய தவறிவிட்டனர்.

    இங்கிலாந்து போன்ற ஆடுகளத்தில் ரி‌ஷப் பந்த் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் கண்டிப்பாக தேவை. 2-வது விக்கெட் கீப்பர் என்ற முறையில் இல்லாமல் அவரை 4-வது வரிசைக்கு தேர்வு செய்து இருக்கலாம்.

    ஏனென்றால் ரிசப் பந்த் விக்கெட் கீப்பிங்கில் இன்னும் முதிரிச்சி அடையவில்லை. ஒரு பேட்ஸ்மேனாக அவரை தேர்வு செய்வது அவசியமானது.

    எதிர்கால இந்திய அணிக்கு அவரை போன்ற அதிரடி பேட்ஸ்மேன் தேவை. இதனால் தேர்வு குழுவினர் அவரை நிராகரித்த முடிவு சரியானதுதானா? என்ற கேள்வி எழுகிறது.

    தினேஷ் கார்த்திகை பொறுத்தவரை 20 ஓவர் போட்டியில்தான் நன்றாக ஆடி வருகிறார். இதனால் உலக கோப்பை அணியில் அவரது தேர்வு பல்வேறு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ‘டெத் ஓவர்’ என்று அழைக்கப்படும் ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் விளையாடுவதில் ரி‌ஷப் பந்த் கெட்டிக்காரர். இளம் வீரராக கருதப்படும் அவருக்கு அணி நிர்வாகம் முன்னுரிமை கொடுத்து தேர்வு செய்து இருக்கலாம்.

    தேர்வு குழுவின் இந்த முடிவானது கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகந்த ஏமாற்றம் அடைந்தனர். #DineshKarthik #RishabhPant
    உலக கோப்பை போட்டியில் 4-வது வரிசையில் விளையாடக்கூடிய திறமை தன்னிடம் இருப்பதாக தமிழக வீரர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #dineshkarthik
    உலக கோப்பை அணிக்கு தேர்வாகி இருப்பது குறித்து தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-

    உலக கோப்பை மிகப்பெரிய போட்டி. இதற்கான அணியில் இடம் பெறுவதை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தேன். உலக கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

    அனைத்து போட்டிகளிலும் டோனிதான் விக்கெட் கீப்பராக இருப்பார். புகைப்படத்தில் மட்டுமே எனது படம் வரும். அவர் காயம் அடைந்தால் வாய்ப்பு வரும். சிறந்த பேட்ஸ்மேனாக வாய்ப்பு அளிக்கப்படும். 4-வது வரிசையில் விளையாடக்கூடிய திறமை என்னிடம் இருக்கிறது. பின்வரிசையில் ஆடினாலும் என்னால் ஆட்டத்தை நிறைவு செய்ய முடியும்.



    உலக கோப்பை போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அணி திறமை வாய்ந்தது. நாங்கள் சிறப்பாக ஆடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உலக கோப்பை அணிக்கு தேர்வாகி இருப்பதன் மூலம் எங்களது கனவு நனவாகி இருக்கிறது என்று மற்றொரு தமிழக வீரர் விஜய் சங்கர் கூறி உள்ளார். #dineshkarthik
    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. #CWC19 #WorldCup2019 #Australia
    சிட்னி:

    12-வது உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களின் விவரம் வருமாறு:

    ஆரோன் பின்ஞ் (கேப்டன்), ஜேசன் பெஹ்ரெண்டாப், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), நாதன் கோல்டர்-நைல், பேட் கம்மின்ஸ், உஸ்மான் கவாஜா, நாதன் லயான், ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஜி ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிச்செல் ஸ்டார்க், மார்க்ஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் சம்பா.



    உலக கோப்பை அணியில் இடம்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசில்வுட் அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியும் இன்று அறிவிக்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு கூட்டம் மும்பையில் இன்று பிற்பகல் நடக்கிறது. தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையில் தேர்வாளர்கள் கூடி ஆலோசித்து அணியை தேர்வு செய்து அறிவிக்கிறார்கள். #CWC19 #WorldCup2019 #Australia

    மே மாதம் நடக்கவுள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் விவரம் வருகிற 15-ந்தேதி மும்பையில் அறிவிக்கப்படுகிறது. #WorldCup2019 #BCCI
    புதுடெல்லி:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மே மாதம் 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது.

    இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி வருகிற 15-ந்தேதி மும்பையில் அறிவிக்கப்படுகிறது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழு 15 வீரர்களை தேர்வு செய்து அறிவிக்கிறது.

    4-வது வீரர் வரிசை, ஆல்ரவுண்டர்கள், சுழற்பந்து வீரர்கள், 2-வது விக்கெட் கீப்பர் ஆகியவை தேர்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஜூன் 5-ந்தேதி தென்ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. #WorldCup2019
    ஐ.பி.எல். போட்டி உலக கோப்பை தேர்வில் முக்கிய பங்கு வகிக்கும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #BCCI #IPL2019
    புதுடெல்லி:

    12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மே மாதம் 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதிவரை இங்கிலாந்தில் நடக்கிறது.

    இந்தப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை ஏப்ரல் 20-ந்தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும். 15-ந்தேதி முதல் 20-ந்தேதிக்குள் வீரர்களை தேர்வு செய்ய கிரிக்கெட் வாரியமும், தேர்வு குழுவும் தீவிரமாக இருக்கிறது.

    உலக கோப்பை போட்டிக்கு முன்பு ஐ.பி.எல். ஆட்டங்கள் வருகிற 23-ந்தேதி தொடங்கி மே 2-வது வாரம் வரை நடைபெறும்.

    இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை சொந்த மண்ணில் 2-3 என்ற கணக்கில் இழந்தது. அப்போது கேப்டன் விராட் கோலி கூறும் போது “ஐ.பி.எல். போட்டியில் வீரர்களின் செயல்பாடு உலக கோப்பை அணி தேர்வில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று கூறி இருந்தார்.

    ஆனால் இதற்கு மாறாக ஐ.பி.எல். போட்டி உலக கோப்பை தேர்வில் முக்கிய பங்கு வகிக்கும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    4-வது நிலை பேட்ஸ்மேன், 2-வது விக்கெட் கீப்பர் இடங்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்படுத்தி உள்ளது.

    4-வது வரிசை பேட்ஸ்மேன் இடத்துக்கு ரகானே, அம்பதி ராயுடு, ஷிரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் ஆகியோர் போட்டியில் உள்ளனர். ஐ.பி.எல்.லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர் 4-வது வரிசைக்கு தேர்வு செய்யபடுவார்.

    ஆஸ்திரேலிய தொடரிலும் இந்த வரிசையை நிரப்ப முடியவில்லை.

    தமிழகத்தை சேர்ந்த ஆல் ரவுண்டர் விஜய்சங்கரை உலக கோப்பையில் 4-வது வீரர் வரிசைக்கு பயன்படுத்தும் திட்டத்தையும் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்ய இருக்கிறது. ஐ.பி.எல்.லில் முதல் 3 வாரம் நடைபெறும் போட்டியின் முடிவில் இது குறித்து தீர்மானிக்கப்படும்.

    டோனிக்கு அடுத்து 2-வது விக்கெட் கீப்பருக்கான போட்டியில் ரி‌ஷப்பந்த், தினேஷ் கார்த்திக் உள்ளனர்.

    தினேஷ்கார்த்தி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் நீக்கப்பட்டார். இதனால் அவருக்கான வாய்ப்பு குறைவே. ரிசப்பந்த் உலக கோப்பையில் தேர்வு செய்யப்படுவார். அவரை உலக கோப்பை 4-வது வீரர் வரிசையில் களம் இறக்கலாம் என்று கங்குலி, ரிக்கி பாண்டிங் ஆகியோர் யோசனை தெரிவித்துள்ளனர். #BCCI #IPL2019
    உலக கோப்பையை கருத்தில் கொண்டு ஐ.பி.எல். போட்டியின் போது இந்திய வீரர்கள் உடற் தகுதியில் கவனம் செலுத்த வேண்டும் என்று விராட்கோலி அறிவுரை வழங்கியுள்ளார். #ViratKohli
    பெங்களூர்:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மே மாதம் 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறுகிறது.

    உலககோப்பை போட்டிக்கு முன்பு ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா நடக்கிறது. இந்தப்போட்டி வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. முடியும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. மே மாதம் 12-ந்தேதி முடிவடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உலக கோப்பை நேரத்தில் இந்திய வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவது குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஐ.பி.எல்.லில் காயம் அடைந்தால் வீரர்கள் உலக கோப்பையில் விளையாட இயலாது.

    இந்திய வீரர்கள் ஐ,.பி.எல்.லில் ஆடுவது குறித்து கிரிக்கெட் வாரியமும், தேர்வு குழுவும் முடிவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியின் போது இந்திய வீரர்கள் உடற் தகுதியில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேப்டன் விராட்கோலி அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஐ.பி.எல். போட்டிகளில் வீரர்கள் விளையாடுவது குறித்து அணி உரிமையாளர்களுக்கு எந்தவித அறிவுறுத்தலும் கொடுக்கப்படவில்லை. ஐ.பி.எல். போட்டியில் விளையாடினாலும், உலக கோப்பையை கருத்தில் கொண்டு இந்திய அணி வீரர்கள் தங்களது உடல் தகுதியில் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு வீரரும் அவர்களது உடல் நிலைக்கு ஏற்றவாறு போட்டிகளில் விளையாட வேண்டும்.

    ஏனென்றால் என்னுடைய உடல் தகுதிக்கு நான் 10 முதல் 12 போட்டிகளில் விளையாட முடியும். மற்றவர்கள் தங்களது உடல் நிலைக்கு ஏற்ப ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.

    மேலும் ஐ.பி.எல்.லில் வீரர்கள் நன்றாக விளையாடினால் அந்த மனபலத்தை உலக கோப்பைக்கு கொண்டு செல்ல முடியும்.

    இவ்வாறு விராட்கோலி கூறியுள்ளார்.

    உலக கோப்பை போட்டி காரணமாக ஐ.பி.எல். போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. #ViratKohli
    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியினர் உள்பட அனைவருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. #WorldCup2019
    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைமை செயற்குழு கூட்டம் துபாயில் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, ‘இங்கிலாந்தில் மே 30-ந் தேதி தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியினர், போட்டி அதிகாரிகள் மற்றும் இந்திய ரசிகர்களுக்கு உயரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதற்கு ஐ.சி.சி.யின் தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் பதில் அளிக்கையில், ‘இந்திய அணியினர் உள்பட அனைவருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்’ என்று உறுதி அளித்தார்.
    ×