search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tournament"

    • மாநில அளவில் ஆண்கள், பெண்களுக்கான கைப்பந்து போட்டி கடந்த 4 நாட்களாக உடையாப்பட்டியில் நடைபெற்றது.
    • சேலம், சென்னை, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 26 ஆண்கள் அணிகளும், 10 பெண்கள் அணிகளும் கலந்து கொண்டு விளையாடின.

    சேலம்:

    சேலம் மாவட்ட கைப்பந்து கழகம், ராஜன் ஸ்போர்ட்ஸ் கிளப், இயற்கையை நேசி அமைப்பு ஆகியவை சார்பில் மாநில அளவில் ஆண்கள், பெண்களுக்கான கைப்பந்து போட்டி கடந்த 4 நாட்களாக உடையாப்பட்டியில் நடைபெற்றது. இதில் சேலம், சென்னை, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 26 ஆண்கள் அணிகளும், 10 பெண்கள் அணிகளும் கலந்து கொண்டு விளையாடின.

    இறுதியில் ஆண்கள் பிரிவில் ஏ.வி.எஸ். கல்லூரி அணி முதல் இடத்தை வென்றது. வி.வி.சி. அணி 2-வது இடமும், சாய்டிரைலர்ஸ் அணி 3-வது இடமும், ஓமலூர் கொங்குபட்டி அணி 4-வது இடமும் பிடித்தன. பெண்கள் பிரிவில் முதல் இடத்தை ஏ.என்.மங்கலம் செயின்ட் மேரிஸ் பள்ளி அணி வென்றது. சக்தி கைலாஷ் கல்லூரி அணி 2-வது இடத்தையும், ஆத்தூர் பாரதியார் பள்ளி அணி 3-வது இடத்தையும், சென்னை மினிஸ்போர்ட்ஸ் அணி 4-வது இடத்தையும் பெற்றன.

    பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதற்கு கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல் தலைமை தாங்கினார். ராஜன் ஸ்போர்ட்ஸ் கிளப் இயக்குனர் சீனிவாசன் வரவேற்று பேசினார். போலீஸ் உதவி கமிஷனர் லட்சுமி பிரியா கலந்து கொண்டு பரிசு மற்றும் கோப்பையை வழங்கினார்.

    • தென் மாநில அளவிலான ஆக்கி போட்டி நடந்தது.
    • 216 வீரர்- வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர்.

    ராமநாதபுரம்

    ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பில் தென் மாநில அளவிலான 18 வயதுக்குட்பட்டோருக்கான முதலாவது ஆக்கி சாம்பியன் ஷிப் போட்டி ராமநாதபுரம் வேலு மாணிக்கம் ஆக்கி விளையாட்டு அரங்கில் 19-ந் தேதி தொடங்கி நாளை (26-ந் தேதி) வரை நடக்கிறது.

    இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த 216 வீரர்- வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதுகுறித்து ஆக்கி இந்தியா அமைப்பின் செயலாளர் செந்தில் ராஜ்குமார் கூறியதாவது:-

    இந்திய ஆக்கி அணியில் விளையாட திறமையான வீரர்களை கண்டறிய முதல் முதல்முறையாக இந்திய அளவில் 4 மண்டலங்களாக பிரித்து 18 வயதிற்குட்பட்ட சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கிறது.

    ராமநாதபுரத்தில் தென்னிந்திய மண்டல அளவிலான போட்டி ஆண்கள், பெண்கள் தனித்தனியாக நடக்கிறது. சிறந்த வீரர்களை தேர்வு செய்து கால் இறுதி, அரையிறுதி, இறுதி போட்டிகள் நாளை (26-ந் தேதி) நடக்கிறது.தேர்வாளர் குழுவினர் 30 சிறந்த வீரர்களை அடையாளம் காணுவார்கள்.

    இவர்களுக்கு 4 மண்டல அணிகள், 2 அகாடமி அணிகள் மண்டலங்களுக்கு இடையிலான சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்படும். இதில்,ஆக்கி இந்தியா தேர்வாளர்கள் 45 திறமையான வீரர்களை தேர்வு செய்து,பல்வேறு போட்டிகளில் பங்கேற்க செய்து பயிற்சி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாமக்கல் மாவட்டம், ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் நவீன்குமார், சென்னையில் நடந்த மாநில அளவிலான இளையோர் செஸ் போட்டியில், முதலிடம் பெற்றார்.
    • 17 மாநிலங்களை சேர்ந்த, மாணவ, மாணவியர் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    நாமக்கல்:

    மாமல்லபுரத்தில் சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தி முடிக்கப்பட்ட பின்னர், தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மத்தியில் செஸ் போட்டி பற்றிய விழிப்புணர்வு அதிக அளவில் ஏற்பட்டு உள்ளது. பள்ளி மாணவர்கள் மாநில, தேசிய அளவில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்கள்.

    அந்த வகையில் நாமக்கல் மாவட்டம், ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் நவீன்குமார், சென்னையில் நடந்த மாநில அளவிலான இளையோர் செஸ் போட்டியில், முதலிடம் பெற்றார்.

    அதையடுத்து, மும்பையில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டார். அதில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், மகாராஸ்டிரா உள்பட, 17 மாநிலங்களை சேர்ந்த, மாணவ, மாணவியர் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    போட்டியில், செமி பைனலில், மகராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மாணவரை எதிர்த்து விளையாடிய நவீன்குமார் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். இறுதி போட்டியில், தமிழக மாணவரை எதிர்த்து விளையாடி, வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.

    தேசிய அளவில் சாதனை படைத்து, தமிழகத்துக்கும், நாமக்கல் மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்த மாணவர் நவீன்குமாரை, பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் குமார், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார்.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் ரவி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், பள்ளி தலைமை யாசிரியர் ஆன்ட்ரூஸ் உள்பட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    • கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் அகில இந்திய பெண்கள் கூடைப்பந்து போட்டி தொடங்கியது
    • கரூர் டி.எஸ்.பி. தேவராஜ் போட்டியை தொடங்கி வைத்தார்.

    கரூர்:

    கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம், கரூர் பிஎன்ஐ இணைந்து நடத்தும் அகில இந்திய அளவிலான பெண்கள் கூடைப்பந்து போட்டி கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் மின்னொளியில் தொடங்கியது. முதல்போட்டியில் சாய் ஸ்போர்ட்ஸ் சென்டர் சட்டீஸ்கர் அணியும், ரைசிங் ஸ்டார் சென்னை அணியும் மோதின. வீராங்கனைகளை அறிமுகத்திற்கு பின்னர் கரூர் டிஎஸ்பி தேவராஜ் போட்டியை தொடங்கி வைத்தார். மாவட்ட கூடைப்பந்து கழக சேர்மன் தனபதி, தலைவர் கார்த்தி, துணைத் தலைவர் குழந்தைவேல், செயலாளர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள், பிஎன்ஐ நிர்வாகிகள், கரூர் நகர பிரமுகர்கள், கூடைப் பந்து ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

    • புதுவை மாநில சைக்கிள் போலோ சங்கம் சார்பில் மாநில அளவிலான போட்டிகள் ஜீவானந்தம் பள்ளியில் நடந்தது.
    • போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் சுழற்கேடயம், சான்றிதழ்கள், பரிசுகளை வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில சைக்கிள் போலோ சங்கம் சார்பில் மாநில அளவிலான போட்டிகள் ஜீவானந்தம் பள்ளியில் நடந்தது.

    போட்டியில் 60-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. போட்டிகளை ரிச்சர்ட் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் சுழற்கேடயம், சான்றிதழ்கள், பரிசுகளை வழங்கினார்.

    விழா ஏற்பாடுகளை சைக்கிள் போலோ சங்க தலைவர் சத்தியராஜ், சங்க நிறுவனர் பாஸ்கரன், செயலாளர்கள் ஸ்டாலின், ஜெயராஜ், பொருளாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிக்கு புதுக்கோட்டை கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்
    • விளையாட்டு வீரர்கள் பதிவு செய்வதற்கான கால அவகாசம் 29ம்தேதி (ஞாயிற்று கிழமை) வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.தமிழக முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட, மண்டல, மாநில அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி பொதுப்பிரிவில் (15 வயது முதல் 35 வயது வரை) உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மாவட்ட அளவில் கபாடி, சிலம்பம், தடகளம், இறகுபந்து, கையுந்துபந்து, கிரிக்கெட் போன்ற போட்டிகள் நடத்தப்படும்.

    பள்ளி (12 வயது முதல் 19 வயது வரை) மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு (17 வயது முதல் 25 வயது வரை) மாவட்ட அளவில் கபாடி, சிலம்பம், தடகளம், கூடைபந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கையுந்துப்பந்து மற்றும் மேசைப்பந்து, கிரிக்கெட் போட்டிகளும், மண்டல அளவில் டென்னிஸ், பளுதூக்குதல், கடற்கரை கையுந்துபந்து போட்டிகள் ஐந்து பிரிவுகளின் கீழ் நடத்தப்படும்.

    புதுக்கோட்டை மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளின் பதிவுகளை அதிகரிக்கும் பொருட்டு, விளையாட்டு வீரர்கள் பதிவு செய்வதற் கான கால அவகாசம் வரும் 29-ந் தேதி (ஞாயிற்று கிழமை) வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணையதளத்தில் பதிவு மேற்கொள்ள கேட்டுக்கொள்ள ப்படுகிறது. நேரடியாக போட்டிகளில் பங்குபெற அனுமதி இல்லை. கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703498 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.


    • இளைஞர்‌ காங்கிரஸ் சார்பில் மாநில கால்பந்து போட்டி நடந்தது.
    • 4-க்கு 3 என்ற கோல் கணக்கில் திருச்சி யுனைடெட் அணியினர் வெற்றி பெற்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் இந்திய ஒற்றுமை பயணத்தை முன்னிட்டு மாநில அளவிலான கால்பந்து போட்டி நடந்தது.

    இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் செங்கை.எஸ்.விக்னேசுவரன் ஏற்பாட்டில் ராஜா பள்ளி மைதானத்தில் இந்த போட்டி நடந்தது. இதில்பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 22 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

    திருச்சி அணியும், சென்னை அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. பரபரப்பாக நடந்த இறுதி ஆட்டத்தில் பெனால்டி கிக்கில் 4-க்கு 3 என்ற கோல் கணக்கில் திருச்சி யுனைடெட் அணியினர் வெற்றி பெற்றனர்.

    இதன் பரிசளிப்பு விழாவில் கிருஷ்ணகிரி எம்.பி. டாக்டர். செல்லக்குமார், ராமநாதபுரம் ராஜா நாகேந்திர சேதுபதி ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினர். மாநில ஆராய்ச்சி குழு தலைவர் மாணிக்கவாசகம், மாவட்ட பொறுப்பு குழு தலைவர் மலேசியா பாண்டியன், மாவட்ட பொறுப்பாளர்கள், நகர் மன்ற உறுப்பினர் ராஜாராம் பாண்டியன், ரமேஷ்பாபு, தெய்வேந்திரன், கோட்டை முத்து, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் வேலுச்சாமி, சோ.பா. ரங்கநாதன், ஆனந்தகுமார், ஜோதி பாலன், துல்கிப், கிருஷ்ணராஜ், வட்டார தலைவர்கள் சேதுபாண்டியன், காருகுடி சேகர், செல்லச்சாமி, அன்வர், அல்அமின், ஒன்றிய கவுன்சிலர் திருமுருகன், கபிர், வாணி செய்யது இப்ராகிம் ஆகியோர் கலந்து கொண்டனர். நகர் தலைவர் கோபி நன்றி கூறினார்.

    முன்னதாக மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா படத்திற்கு டாக்டர். செல்லக்குமார் எம்.பி. தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    • அழகப்பா கல்வி குழும முன்னாள் மாணவர்கள் கிரிக்கெட் போட்டி நடந்தது..
    • முதல் பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் கேடயத்தை கானாடுகாத்தான் சேவாக் அணி வென்றது.

    காரைக்குடி

    அழகப்பா கல்வி அறக்கட்டளை மற்றும் உலகளாவிய அழகப்பா முன்னாள் மாணவர் கூட்டமைப்பு இணைந்து 75-வது வருட கொண்டாட்டத்தின் நிகழ்வாக அழகப்பா முன்னாள் மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியை பாவ்நகர் விளையாட்டு அரங்கில் நடத்தியது.

    அழகப்பா கல்விக் குழுமத்தின் தலைவர் ராமநாதன் வைரவன் வழிகாட்டுதலின்படி போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.போட்டியை மாங்குடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    36 அணிகள் கலந்து கொண்டன. இதன் பரிசளிப்பு விழாவிற்கு அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.ரவி தலைமை தாங்கினார்.காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    முதல் பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் கேடயத்தை கானாடுகாத்தான் சேவாக் அணி வென்றது. 2-ம் பரிசு ரூ. 5ஆயிரம் மற்றும் கேடயத்தை அழகப்பா கலை கல்லூரி அணியும், 3-ம் பரிசு ரூ. 2,500 மற்றும் கேடயத்தை பாண்டியன் மெமோரியல் அணியும் வென்றன.

    சிறந்த பேட்ஸ்மேனாக கானாடுகாத்தான் சேவாக் அணியின் கார்த்திக், சிறந்த பந்து வீச்சாளராக பாண்டியன் மெமோரியல் அணியின் தினேஷ், தொடர் நாயகனாக அழகப்பா கலை கல்லூரி அணியின் பாலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை அழகப்பா கல்விக் குழுமத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளின் முதல்வர்கள் செய்திருந்தனர். கல்வி குழும மேலாளர் காசிவிஸ்வநாதன் நன்றி கூறினார்.

    • முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு விண்ணப்பிக்க வருகிற 17-ந்தேதி கடைசி நாளாகும்.
    • மேலும் விவரங்களுக்கு 7401703493 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

    கரூர்

    விளையாட்டு போட்டிகள் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கரூர் மாவட்டம் சார்பாக, பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய 5 பிரிவுகளில் ஆண்-பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்பட உள்ளது. இவற்றில் பங்கேற்க www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பதிவு செய்ய வேண்டும்.

    இதற்கான கடைசி நாள் வருகிற 17-ந்தேதி ஆகும். எனவே மேற்கண்ட அமைப்புகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் உடனடியாக தங்களது பெயர்களை இணையதளத்தில் பதிவுசெய்திட வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டால் மட்டுமே இப்போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். இணையதளத்தில் பதிவு செய்வது தொடர்பாக ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் உடனடியாக கரூர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தினை தொடர்பு கொள்ளுங்கள்.

    பல பயன்கள் உள்ளது தேவையான தங்களது ஆவணங்களுடன் மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு வருகை தர வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். எனவே பதிவுகள் மேற்கொள்ளாமல் விட்டு விடாதீர்கள். இப்போட்டியில் வெற்றி பெற்றால் இதன் மூலம் பல பயன்கள் உள்ளது. எனவே தனி நபர் மற்றும் குழு விளையாட்டு வீரர்கள் அனைத்து விவரங்களை மேற்கண்ட இணையதள முகவரியில் பதிவு செய்திடவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 7401703493 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.





    • நெல்லை மாவட்டத்தில் இருந்து போட்டியை பார்வையிட செல்லும் வீரர்களை தேர்வு செய்வதற்கான போட்டி இன்று பாளை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்றது.
    • இதில் முதல் 25 இடங்களை பிடிக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்படும்.

    நெல்லை:

    44-வது ஒலிம்பியாட் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த போட்டியில் 180 நாட்டை சேர்ந்த சுமார் 1,800 போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    இந்த போட்டியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தின் சார்பாக 15 வயதுக்கு உட்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு தனி தனியாக போட்டிகள் நடத்தி அதில் முதல் இடம் பெறும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் போட்டியை கண்டு களிக்கவும் மற்றும் அங்கு வீரர்களுடன் கலந்துரையாடவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது .

    அதன்படி நெல்லை மாவட்டத்தில் இருந்து ஒலிம்பியாட் சதுரங்க போட்டியை பார்வையிட செல்லும் வீரர்களை தேர்வு செய்வதற்கான போட்டி இன்று பாளை வ.உ.சி. மைதானத்தில் உள்ள பல்நோக்கு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. அனைத்து இந்திய சதுரங்க பெடரேஷன் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு சதுரங்க கழகத்தின் அனுமதியோடு நடைபெற்ற இந்த போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டு விளையாடினர். நாளையும் போட்டி நடைபெறுகிறது. இதில் முதல் 25 இடங்களை பிடிக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்படும். நுழைவு கட்டணம் கிடையாது. 

    • தி.மு.க. இளைஞரணி சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.
    • பல்லடம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 40 அணிகள் கலந்து கொண்டன.

    பல்லடம்:

    பல்லடம் அருகே தி.மு.க. இளைஞரணி சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி சார்பில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டது .இந்த போட்டியில் பல்லடம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 40 அணிகள் கலந்து கொண்டன. அதில் இறுதி போட்டியில் கரைப்புதூர் சி.ஆர்.அணி வெற்றி பெற்றது. இதன் பரிசளிப்பு விழாவில்,கிழக்கு ஒன்றிய கழக இளைஞரணி அமைப்பாளரும் பல்லடம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவருமான பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.வெற்றி பெற்ற அணிகளுக்கு கருணாநிதி பிறந்த நாள் நினைவு கோப்பையை திருப்பூர் வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் இல.பத்மநாபன் வழங்கினார். சான்றிதழ்கள் மற்றும் பரிசு தொகையை பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் சோமசுந்தரம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க நிர்வாகிகள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி நடந்தது.
    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி  திருத்துறைப்பூண்டி ஸ்போர்ட்ஸ் அகடெமி சார்பில் 2 நாட்கள் நடைப்பெற்றது. அதன் நிறைவு விழா நிகழ்ச்சிக்கு  ராஜநாராயணன்   வரவேற்றார். 

    வெற்றி  பெற்றவர்களுக்கு நகர்மன்றத் தலைவர் கவிதா பாண்டியன் பரிசளித்து வாழ்த்தினார்.பாரதமாதா எடையூர் மணிமாறன், ராய் டிரஸ்ட் நிறுவனத்தலைவர்  நா.துரை ராயப்பன், ஆடிட்டர் ஜவகர், வழக்கறிஞர் நாகராஜன், கமல் மற்றும் ஸ்போர்ட்ஸ் அகாடெமி செயலாளர்  விஜயகுமார், ராஜசேகர், மாரிமுத்து, ஆனந்தன், இளையராஜா, பார்த்திபன், ரமேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

    முதல் பரிசை கடலூர் அணியும், இரண்டாம் பரிசை திருச்சி  அணியும், 3வது பரிசை பொதக்குடி அணியும், நான்காம் பரிசை  மன்னார்குடி அணிக்கும் வழங்கப்பட்டது. முடிவில் நல்நூலகர். ஆசைத்தம்பி  நன்றியுரை கூறினார்.

    ×