search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aggie"

    • 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 5-0 கணக்கில் வெற்றி பெற்று உள்ளனர்.
    • 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 2-வது இடத்தையும் பிடித்தனர்.

    அரவேணு,

    சி.ஐ.எஸ்சி. மண்டல அளவிலான ஆக்கி போட்டி நடந்தது. இதில் நீலகிரி மாவட்டம் குன்னூர் பிருந்தாவன் பள்ளி அபார வெற்றி பெற்றது.

    குறிப்பாக 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 5-0 கணக்கில் வெற்றி பெற்று உள்ளனர். 19 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும் வெற்றி கிடைத்து உள்ளது.

    மேலும் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 2-வது இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிருந்தாவன் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர். 

    • தென் மாநில அளவிலான ஆக்கி போட்டி நடந்தது.
    • 216 வீரர்- வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர்.

    ராமநாதபுரம்

    ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பில் தென் மாநில அளவிலான 18 வயதுக்குட்பட்டோருக்கான முதலாவது ஆக்கி சாம்பியன் ஷிப் போட்டி ராமநாதபுரம் வேலு மாணிக்கம் ஆக்கி விளையாட்டு அரங்கில் 19-ந் தேதி தொடங்கி நாளை (26-ந் தேதி) வரை நடக்கிறது.

    இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த 216 வீரர்- வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதுகுறித்து ஆக்கி இந்தியா அமைப்பின் செயலாளர் செந்தில் ராஜ்குமார் கூறியதாவது:-

    இந்திய ஆக்கி அணியில் விளையாட திறமையான வீரர்களை கண்டறிய முதல் முதல்முறையாக இந்திய அளவில் 4 மண்டலங்களாக பிரித்து 18 வயதிற்குட்பட்ட சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கிறது.

    ராமநாதபுரத்தில் தென்னிந்திய மண்டல அளவிலான போட்டி ஆண்கள், பெண்கள் தனித்தனியாக நடக்கிறது. சிறந்த வீரர்களை தேர்வு செய்து கால் இறுதி, அரையிறுதி, இறுதி போட்டிகள் நாளை (26-ந் தேதி) நடக்கிறது.தேர்வாளர் குழுவினர் 30 சிறந்த வீரர்களை அடையாளம் காணுவார்கள்.

    இவர்களுக்கு 4 மண்டல அணிகள், 2 அகாடமி அணிகள் மண்டலங்களுக்கு இடையிலான சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்படும். இதில்,ஆக்கி இந்தியா தேர்வாளர்கள் 45 திறமையான வீரர்களை தேர்வு செய்து,பல்வேறு போட்டிகளில் பங்கேற்க செய்து பயிற்சி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி நடந்தது.
    • வெற்றி பெற்ற அணிகளுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.

    விருதுநகர்

    இந்தியாவின் சிறந்த ஆக்கி வீரராக திகழ்ந்த தியான் சந்த்தைப் பெருமைப்படுத்தும் வகையில் அவரது பிறந்த நாளான ஆகஸ்டு 29-ந் தேதியை இந்திய தேசிய விளையாட்டு நாளாக கடைபிடிக்கிறது.

    அதனப்படையில், விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் 14-வயதிற்குட்பட்ட மாணவ-மாணவி களுக்கான மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி நடந்தது. இதை கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைத்தார்.

    இதில் விருதுநகர் சத்ரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி இந்து நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கல்லூரணி எஸ்.பி.கே. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் விருதுநகர் காமராஜர் அகாடமி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகளும், 14-வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான ஆக்கி போட்டியில், விருதுநகர் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி இந்து நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கல்லூரணி எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ராஜபாளையம் அகாடமி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டனர்.

    மாணவிகளுக்கான இறுதிப்போட்டியில் விருதுநகர் சத்ரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்றது. அந்த அணியை சேர்ந்த மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    தொடர்ந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி, ஆக்கி விளையாடியபடி சிவகாசி உழவர் சந்தை முதல் சாட்சியாபுரம் வரை சென்று நோபல் உலக சாதனை பெற்ற வி.எஸ்.கே.டி. பதின்ம மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 9 வயதான ஜியாஸ்ரீ கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வட்டார அளவிலான ஆக்கி போட்டி நடந்தது.
    • இதில் 5-0 என்ற கோல் கணக்கில் ஜஸ்டின் மெட்ரிக் பள்ளி அணி வெற்றி பெற்றது.

    சிவகங்கை

    சிவகங்கை வட்டார அளவிலான பள்ளிகளுக்கு இடையே 14 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான ஆக்கி போட்டி சிவகங்கை மாவட்ட திறந்தவெளி விளையாட்டரங்கில் நடந்தது. இறுதிப் போட்டியில் சிவகங்கை புனித ஜஸ்டின் மெட்ரிக் பள்ளி-சுவாமி விவேகானந்தா பள்ளி அணிகள் மோதின.

    இதில் 5-0 என்ற கோல் கணக்கில் ஜஸ்டின் மெட்ரிக் பள்ளி அணி வெற்றி பெற்றது. முதல்வர் புஷ்பம் மற்றும் ஆசிரியர்கள், வெற்றி பெற்ற வீராங்கனைகள், உடற்கல்வி ஆசிரியர் மோகன் ஆகியோரை பாராட்டினர்.

    ×