search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செஸ்"

    • செஸ் விளையாட்டில் வீரர்களுக்கு நிகராக வீராங்கனைகள் பாராட்டுகளை பெறுவதில்லை.
    • மாறாக எனது உடை, முடி, வார்த்தை உச்சரிப்பு உள்ளிட்ட பிற தேவையில்லா விஷயங்களை கவனிக்கின்றனர்.

    நெதர்லாந்தில் நடைபெற்ற செஸ் தொடரில் இந்திய இளம் வீராங்கனை திவ்யா தேஷ்முக் 12-ம் இடம் பிடித்தார். 18 வயதான அவர் இது போன்று வெற்றி பெறுவதை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவது வழக்காமக கொண்டிருந்தார்.

    இந்நிலையில் இதற்கு பலர் பாலியல் சார்ந்த சர்ச்சை கூறிய கருத்துக்களை பதிவிடுவதாக அவர் வருத்தத்துடன் கூறினார்.

    இது குறித்து திவ்யா தேஷ்முக் கூறியதாவது:-

    நான் விளையாடிய போட்டிகளில் சில முக்கிய நகர்வுகளை செய்தேன். இதனால் என்னைப்பற்றி நானே பெருமையும் பட்டேன். ஆனால் பார்வையாளர்கள் அதை பற்றி எந்த அக்கறையும் கொள்ளவில்லை.

    மாறாக எனது உடை, முடி, வார்த்தை உச்சரிப்பு உள்ளிட்ட பிற தேவையில்லா விஷயங்களை கவனிக்கின்றனர். தொடர்ந்து இது போன்ற கருத்துக்களை சந்தித்து வருகிறேன். இதனால் நான் மிகவும் வருத்தமடைந்தேன்.

    செஸ் விளையாட்டில் வீரர்களுக்கு நிகராக வீராங்கனைகள் பாராட்டுகளை பெறுவதில்லை. பெண்கள் சிறப்பாக செஸ் விளையாடினாலும், பார்வையாளர்கள் அவர்களின் திறமையை கவனிக்காமல் இருப்பது சோகமான உண்மையாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • சென்னையை சேர்ந்த 18 வயதான பிரக்ஞானந்தா தற்போது 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • செஸ் புகைப்பட கலைஞர் மரியா பிரக்ஞானந்தாவின் தாயாருக்கு சமூக வலைதள பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.

    பாகு:

    அஜர்பைஜான் தலைநகர் பாகு நகரில் நடந்த உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, 'நம்பர் ஒன்' வீரர் மாக்னஸ் கார்ல்செனிடம் (நார்வே) தோல்வியை தழுவினார். இதன் டைபிரேக்கரில் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற கார்ல்சென் அடுத்த ஆட்டத்தில் 'டிரா' செய்து உலக் கோப்பையில் மகுடம் சூடினார்.

    தோல்வி அடைந்தாலும் சர்வதேச செஸ் அரங்கில் ஜாம்பவனாக திகழும் கார்ல்செனுக்கு எதிராக பிரக்ஞானந்தா தைரியமாக போராடிய விதம் ரசிகர்களின் இதயங்களை தொட்டது. பாராட்டுகளும் குவிந்தன. விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு இந்த போட்டியில் இறுதி சுற்றை எட்டிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்ற பிரக்ஞானந்தாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

    சென்னையை சேர்ந்த 18 வயதான பிரக்ஞானந்தா தற்போது 12-ம் வகுப்பு படித்து வருகிறார். அவருடன் அவரது தாயார் நாகலட்சுமியும் உடன் சென்றுள்ளார். தந்தை மாற்றுத்திறனாளி என்பதால் பிரக்ஞானந்தாவை போட்டி நடக்கும் எல்லா இடங்களுக்கும் அழைத்து செல்வது அவரது தாயார் தான். அவர் இந்த நிலைக்கு உயர்ந்திருப்பதற்கு நாகலட்சுமியின் பங்களிப்பு அளப்பரியது.

     

    இந்நிலையில் செஸ் புகைப்பட கலைஞர் மரியா பிரக்ஞானந்தாவின் தாயாருக்கு சமூக வலைதள பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார். அந்த பதிவில் லெஜண்ட் மற்றும் அவரது மகனுடன் செல்பி எடுத்துக் கொண்டேன் என பதிவிட்டுள்ளார்.

    செஸ் விளையாடிய பிரக்ஞானந்தாவை அனைவரும் பாராட்டி வரும் நிலையில் அவரது அம்மாவுக்கு புகழாரம் சூட்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • உலக கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள பிரக்ஞானந்தாவுக்கு எனது வாழ்த்துக்கள்.
    • அவரின் பெருமைமிக்க தாய்க்கும் வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும்.

    உலகக்கோப்பை செஸ் போட்டி அசர்பைஜான் நாட்டின் பெக்கு நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 30-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இன்றுடம் முடிகிறது. இதில் 206 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருவானாவுடன் மோதினார்.

    முதல் ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 78-வது காய் நகர்த்தலில் டிரா செய்தார். அரையிறுதி சுற்றின் 2-வது ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் பிரக்ஞானந்தா ஆடினார். 47-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இந்த ஆட்டமும் 'டிரா' ஆனது.

    இரு ஆட்டங்களும் 'டிரா' ஆனதால் வெற்றியை தீர்மானிக்க டைபிரேக்கர் ஆட்டம் நடந்தது. இதில், உலகின் மூன்றாம் நிலை வீரரான பேபியானோ கருவானாவை அரை இறுதி போட்டியில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு பிரக்ஞானந்தா முன்னேறினார். இதனைத்தொடர்ந்து இறுதி போட்டியில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சென்னை எதிர்த்து பிரக்ஞானந்தா விளையாட உள்ளார்.

    இந்நிலையில் பிரக்ஞானந்தா தாய்க்கு வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும் என இந்தோனேசியா செஸ் வீராங்கனை ஐரின் சுகந்தர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உலக கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள பிரக்ஞானந்தாவுக்கு எனது வாழ்த்துக்கள். ஆனால் அவரின் பெருமைமிக்க தாய்க்கும் வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும். அவர் இல்லாமல் இது எதுவும் நடந்திருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாமக்கல் மாவட்டம், ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் நவீன்குமார், சென்னையில் நடந்த மாநில அளவிலான இளையோர் செஸ் போட்டியில், முதலிடம் பெற்றார்.
    • 17 மாநிலங்களை சேர்ந்த, மாணவ, மாணவியர் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    நாமக்கல்:

    மாமல்லபுரத்தில் சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தி முடிக்கப்பட்ட பின்னர், தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மத்தியில் செஸ் போட்டி பற்றிய விழிப்புணர்வு அதிக அளவில் ஏற்பட்டு உள்ளது. பள்ளி மாணவர்கள் மாநில, தேசிய அளவில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்கள்.

    அந்த வகையில் நாமக்கல் மாவட்டம், ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் நவீன்குமார், சென்னையில் நடந்த மாநில அளவிலான இளையோர் செஸ் போட்டியில், முதலிடம் பெற்றார்.

    அதையடுத்து, மும்பையில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டார். அதில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், மகாராஸ்டிரா உள்பட, 17 மாநிலங்களை சேர்ந்த, மாணவ, மாணவியர் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    போட்டியில், செமி பைனலில், மகராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மாணவரை எதிர்த்து விளையாடிய நவீன்குமார் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். இறுதி போட்டியில், தமிழக மாணவரை எதிர்த்து விளையாடி, வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.

    தேசிய அளவில் சாதனை படைத்து, தமிழகத்துக்கும், நாமக்கல் மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்த மாணவர் நவீன்குமாரை, பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் குமார், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார்.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் ரவி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், பள்ளி தலைமை யாசிரியர் ஆன்ட்ரூஸ் உள்பட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    • சிவகங்கை அருகே உள்ள தனியார் பள்ளியில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டி நடந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே உள்ள சுந்தரநடப்பு தனியார் பள்ளியில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டி நடந்தது. இதில் 234 மாணவ-மாணவிகள் பங்கேற்று விளையாடினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி மாணவ-மாணவிகளுக்கு பதக்கங்களை அணிவித்தார். முன்னதாக மாணவர்களுடன் கலெக்டரும் செஸ் விளையாடி உற்சாகப்படுத்தினார். இதில் முதல்வர் இக்னேஷியல்தாஸ், செயலாளர் கண்ணன், பிரகாஷ், மணிமாறன் மற்றும் மாவட்ட செஸ் வீரர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    • செஸ் போட்டி: 3ம் இடம் பிடித்த மதுரை மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது.
    • கல்வி அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    மேலூர்

    தமிழக அரசின்பள்ளி கல்வித்துறை சார்பில் 44-வது சதுரங்க ஒலிம்பி யாட்-2022 மாநில அளவிலான சதுரங்க போட்டி சென்னையில் உள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

    இப் போட்டியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் மற்றும் 2 இடங்களை பிடித்த 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கலந்து கொண்டு விளை யாடினர். மொத்தம் 6 சுற்றுகள் கொண்டதாக போட்டி நடைபெற்றது.

    இப்போட்டியின் முடிவில் மதுரை மேலூர் ஒன்றியம், அ.வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி அ.சோலையம்மாள் 5 சுற்றுகளில் வெற்றி பெற்று, 3-ம் இடம் பெற்றார்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பள்ளிக்கல்வி துறை கமிஷனர் நந்தகுமார், இணை இயக்குனர் அமுதவல்லி ஆகியோர் பதக்கமும், சான்றிதழும், ரூ.3 ஆயிரம் ரொக்க பரிசும் வழங்கினர்.

    ஏற்கனவே மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகளில் முதலிடம் பெற்று வெற்றி பெற்ற அ.வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பி.பிரதீப், தேவ்நாத், .கலைச்செல்வி ஆகிய 3 பேர் 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொண்டு வெளிநாட்டு வீரர்களை அழைத்து வந்து அறிமுகம் செய்யும் வாய்ப்பும், விமானத்தில் செல்லும் வாய்ப்பும், செஸ் ஒலிம்பியாட் போட்டியை நேரடியாக காணும் வாய்ப்பும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செங்கதிர், மேலூர் மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், மேலூர் வட்டார கல்வி அலுவலர்கள் மீனா, குளோரி, அ.வல்லா ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயசீலன், அ.செட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தலைமை ஆசிரியை மணிமேகலை, இம்மாணவிக்கு சதுரங்க பயிற்சி அளித்தவரும், அ.செட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் இடைநிலை ஆசிரியருமான செந்தில்குமார், அ.வல்லா ளப்பட்டி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கண்ணன், சேர்மன் குமரன், உதவித் தலைமை ஆசிரியர்

    வாசிமலை, உடற்கல்வி ஆசிரியர்கள் சேதுபதி ராஜா, அறிவரசன், கல்வி அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    • மதுைர விளாங்குடி ராயல் வித்யாலயா பள்ளியில் செஸ் விழிப்புணர்வு போட்டி நடந்தது.
    • 6400 சதுர அடி பரப்பளவில் மிக பிரமாண்டமாக சதுரங்க பலகை வரையப்பட்டு இருந்தது.

    மதுரை

    மதுரை விளாங்குடி ராயல் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி-பெத்தானியாபுரம் இராயல் பப்ளிக் மெட்ரிக் பள்ளிஇணைந்து 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலபடு த்தவும் மற்றும் மாணவ, மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல வித போட்டிகள் மற்றும் கண்காட்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.

    அதன் ஒரு கட்டமாக மிக பிரமாண்டமாக சதுரங்க விளையாட்டின் நுணுக்கங்களையும் நகர்வுகளையும் மாணவ மாணவியர் அறியும் வண்ணம் மெகா சதுரங்க போட்டி நடைபெற்றது.

    6400 சதுர அடி பரப்பளவில் மிக பிரமாண்டமாக சதுரங்க பலகை வரையப்பட்டு மாணவ மாணவிகள் சதுரங்க காய்களை போல் வேடமணிந்து.

    அந்த சதுரங்க காய்களின் பண்புகளையும் நகர்வுகளயும் மிக துல்லியமாக மாணவ மாணவியர் ஆர்வத்துடன் அறியும் வண்ணம் சதுரங்க விளையாட்டு விளையாடப்பட்டது.

    சதுரங்க போட்டியில் பள்ளி நிறுவனர் ராஜாராம், தாளாளர் ஷகிலா தேவி ராஜாராம், நிர்வாக இயக்குனர்கள் தீபிகாபிரேம்குமார், கெவின் குமார், மகிமா விக்னேஷ் மற்றும் ஆசிரியர்கள்மற்றும் மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • கீழக்கரையில் நடந்த செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • இந்த ேபாட்டியில் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசி யேஷன் சார்பில் 9 வயதிற்கு ட்பட்டோர் பொது மற்றும் குழந்தைகள் செஸ் போட்டி கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியில் நடந்தது.

    34-வது தமிழ்நாடு மாநில அளவிலாள இந்த ேபாட்டியில் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். பரிசளிப்பு விழாவிற்கு செஸ் அசோசியேஷன் மாவட்ட துணை தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார். மாவட்டத்த லைவர் சுந்தரம் வர வேற்றார்.

    கீழக்கரை நகராட்சி தலைவர் செஹானாஸ் ஆபிதா, துணைத் தலைவர் ஹமீது சுல்தான் ஆகியோர் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கினர். புரவலர்கள் தேவி உலகுராஜ், சண்முகசுந்தரம், செஸ் அசோசியேஷன் துணை செயலாளர் ஜீவா, கீழக்கரை முஹமது சதக் பொறியியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் சுரேஷ் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

    அதிக புள்ளிகள் அடிப்ப டையில் வீரர்கள் சென்னை நிஜேஷ், ஆரவ் (தலா 8 புள்ளிகள்), வேலூர் மிதுன் பிரனவ் (7.5 புள்ளிகள்), சென்னை அஷ்வ சண்முகம், விஷ்ருத், செங்கல்பட்டு பிரிதிவ் ஆரோக்யதாஸ் (தலா 7 புள்ளிகள்), ஈரோடு குரு பிரனவ், ஜெய் தட்ஷின், திருப்பூர் ரித்திக், செங்கல்பட்டு அரிக்ஸாண்டர் ஜானி (தலா 6.5 புள்ளிகள்), திருச்சி பவித்ரா, செங்கல்பட்டு ஸ்ரீநிகா, அரியலூர் ஷர்வானிகா (தலா 7.5 புள்ளிகள்), சென்னை பூஜா ஸ்ரீ (7 புள்ளிகள்), திருவள்ளூர் ஹர்ஷிதா, மதுரை தீப்தாஸ்ரீ ரவி கணேஷ், சென்னை சனா (தலா 6.5 புள்ளிகள்), சென்னை அருஷி தினேஷ், ஆயுஷி தினேஷ், கன்னியாகுமரி பெசிலிகா பியான்ஸ் (தலா 6 புள்ளிகள்) பெற்றனர்.

    சர்வதேச ஆர்பிட்டர் பழனியப்பன், மாநில ஆர்பிட்டர் அதுலன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் வீரர், வீராங்க னைகள் சுற்றுவாரியாக பெற்ற புள்ளி அடிப்ப டையில் பரிசுக்கு உரியோரை தேர்வு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை செய்த செஸ் அசோசியேஷன் மாவட்ட செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

    3வது வெற்றியை பதிவு செய்த ஆனந்த், புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.
    நார்வே:

    நார்வேயில் நடைபெற்று வரும் பிலிட்ஸ் சென்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்றுள்ளார். 

    இத்தொடரில் 10 வீரர்கள் மோதும் கிளாசிக்கல் சுற்றில் விளையாடி வரும் விஸ்வநாதன் ஆனந்த், முதல் இரண்டு சுற்றுக்களில் பிரான்ஸ் வீரர் மாக்சிம் வச்சியர்-லாக்ரேவ் மற்றும் வெசெலின் டோபலோவ் (பல்கேரியா) ஆகியோரை தோற்கடித்தார். இந்நிலையில்   இன்று நடைபெற்ற கிளாசிக்கல் பிரிவில் மூன்றாவது சுற்றில் சீனாவின் வாங் ஹாவை ஆனந்த் வீழ்த்தினார்.

    இதன்மூலம் 3வது வெற்றியை பதிவு செய்த ஆனந்த், புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.
    கடைசியாக ஆனந்த், 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில்தான் கார்ல்சனை வீழ்த்தி இருந்தார்.
    ஓஸ்லோ:

    செஸ் உலகில் ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் விஸ்வநாதன் ஆனந்த். இவர் 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர். இவர் கடைசியாக தன்னுடைய உலக சாம்பியன் பட்டத்தை மேக்னஸ் கார்ல்சனிடம் இழந்தார். அதன்பின்னர் கார்ல்சன் தொடர்ந்து உலக சாம்பியனாக இருந்து வருகிறார். 

    இந்நிலையில் நார்வேயில் தற்போது நடைபெற்றும் பிலிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 52 வயது விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்றுள்ளார். இவர் இந்த தொடரின் 7-வது சுற்றில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்ஸனை எதிர்கொண்டார். போட்டியின் 43வது நகர்வின் போது கார்ல்சன் விஸ்வநாதன் ஆனந்திடம் வீழ்ந்தார்.

    இதையடுத்து கார்ல்சனை வீழ்த்திய ஆனந்த், நார்வே செஸ் பிளிட்ஸ் போட்டித் தொடரில் 4-வது இடம் பிடித்தார். 

    இந்தத் தோல்வியினால் கார்ல்சன் 2-வது இடத்துக்குச் சென்றார். 5-வது சுற்றில் அனிஷ் கிரியிடமும், 9-வது சுற்றில் பிரான்ஸின் மாக்சிம் வச்சியர்-லாக்ரேவிடமும் தோல்வியடைந்ததால், ஆனந்த் 5 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார். 

    அமெரிக்க கிராண்ட்மாஸ்டரான வெஸ்லி சோ, 6.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். நெதர்லாந்து கிராண்ட்மாஸ்டர் அனிஷ் கிரி மூன்றாவது இடத்தை பிடித்தார்.

    5 ஆண்டுகளுக்கு பிறகு உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை விஸ்வநாதன் ஆனந்த் வீழ்த்தியுள்ளார். கடைசியாக ஆனந்த், 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில்தான் கார்ல்சனை வீழ்த்தி இருந்தார்.
    உலகின் முன்னணி செஸ் வீரர்களை வீழ்த்தி செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் தொடரில் பிரக்ஞானந்தா 2வது இடத்தை பிடித்தார்.
    புது டெல்லி:

    உலக அளவில் சிறந்த 16 வீரர்கள் பங்கேற்ற செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வந்தது. இந்த தொடரில் பங்கேற்ற சென்னையை சேர்ந்த 16 வயது இளம் வீரர் பிரக்ஞானந்தா 2-வது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார்.

    பின் காலிறுதியில் சீனாவின் வெய் யி, அரையிறுதியில் நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை வீழ்த்திய பிரக்ஞானந்தா, இறுதி போட்டியில் சீன வீரர் திங் லிரனுடன் மோதி தோல்வியை தழுவினார். வெற்றி பெற வாய்ப்பு இருந்தும், அவரது சிறிய தவறினால் தோல்வியுற்று 2வது இடத்தை பிடித்தார்.

    இந்த நிலையில் உலகின் முன்னணி செஸ் வீரர்களை வீழ்த்தி செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் தொடரில் 2வது இடம் பிடித்த இந்திய இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 

    இப்போது 16 வயதாகும் பிரக்ஞானந்தா பணிக்கால அடிப்படையில் தனது 18 வது வயதில் பணியில் சேர்வார் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    தற்போது பிளஸ் 1 வகுப்பு படித்து வரும் பிரக்ஞானந்தா, பொதுத்தேர்வு எழுதி வருவது குறிப்பிடத்தக்கது.
    இறுதி போட்டிக்கு பிரக்ஞானந்தா தகுதி பெற்றதனால், சாம்பியன்ஸ் செஸ் டூர் போட்டிகளில் முதன்முறையாக பங்கேற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
    சென்னை:

    உலக அளவில் சிறந்த 16 வீரர்கள் பங்கேற்ற செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்த போட்டியில் சென்னையை சேர்ந்த 16 வயது இளம் வீரர் பிரக்ஞானந்தாவும் பங்கேற்றார். இதில் கால் இறுதி சுற்றில், பிரக்ஞானநந்தா 2.5-1.5 என்ற கணக்கில் சீனாவின் வெய் யியை வீழ்த்தினார். அரையிறுதி சுற்றில் நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை டை பிரேக்கர் சுற்றில் 1.5 - 0.5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார்.

    இதை தொடர்ந்து இறுதி போட்டிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா சீன வீரர் டிங் லிரனை சந்தித்தார். இந்த போட்டியில் முதல் செட்டை சீன வீரர் திங் லிரன் கைப்பற்றினார். ஆனால் 2வது செட்டுக்கான போட்டியில் அவர் திறமையாக விளையாடி வெற்றி பெற்றார். இதனால், 1-1 என்ற செட் கணக்கில் போட்டி சமன் அடைந்தது. 

    இதை தொடர்ந்து டை பிரேக்கர் சுற்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தும் சிறிய தவறினால் சீன வீரர் திங் லிரனிடம் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார். இருப்பினும், இறுதி போட்டிக்கு பிரக்ஞானந்தா தகுதி பெற்றதனால், சாம்பியன்ஸ் செஸ் டூர் போட்டிகளில் முதன்முறையாக பங்கேற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    இதையடுத்து சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28ந்தேதி தொடங்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும் பிரக்ஞானந்தா பங்கேற்கவுள்ளார். இந்த போட்டியில் 160க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 303 அணிகள் பதிவு செய்துள்ளன. 
    ×