என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arjun Erigaisi"

    • ரேபிட் பிரிவில் இரு ஆட்டங்களும் டிராவில் முடிந்ததால் வெற்றியை தீர்மானிக்க டைபிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது.
    • அர்ஜூன் எரிகைசி 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் விசுவநாதன் ஆனந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

    ஜெருசலேம்:

    ஜெருசலேம் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி இஸ்ரேலில் நடந்தது.

    இதன் இறுதிபோட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் அர்ஜூன் எரிகைசி, 5 முறை உலக சாம்பியனான 55 வயது விசுவநாதன் ஆனந்தை (இந்தியா) எதிர்கொண்டார். இதில் ரேபிட் பிரிவில் இரு ஆட்டங்களும் டிராவில் முடிந்ததால் வெற்றியை தீர்மானிக்க டைபிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது.

    மிக துரிதமாக காய் நகர்த்தக்கூடிய 'பிளிட்ஸ்' முறையில் நடந்த முதல் ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய அர்ஜூன் எரிகைசி 45-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். 2-வது ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அர்ஜூன் எரிகைசி 36-வது நகர்த்தலில் டிரா செய்தார். இதனால் 22 வயதான அர்ஜூன் எரிகைசி 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் விசுவநாதன் ஆனந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

    சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கிய அர்ஜூன் எரிகைசிக்கு ரூ.49 லட்சமும், 2-வது இடம் பெற்ற ஆனந்துக்கு ரூ.31 லட்சமும் பரிசாக கிடைத்தது.

    • கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது.
    • இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி தோல்வி அடைந்தார்.

    பனாஜி:

    கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. அதன் ஐந்தாவது சுற்றுப் போட்டிகள் நடந்தன. முதல் சுற்றில் அர்ஜூன் ஏரிகைசி, அமெரிக்காவின் லெவான் அரோனியன் உடனான ஆட்டம் டிரா ஆனது. 2-வது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி, லெவான் அரோனியனை வீழ்த்தி காலிறுதிக்கு சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.

    இந்நிலையில், காலிறுதியில் சீனாவின் வெய் யீ, இந்தியாவின் அர்ஜூன் எரிகைசியை 2.5 -1.5 என்ற புள்ளியில் வென்றார். இதன்மூலம் இந்தியாவின் எரிகைசி தொடரில் இருந்து வெளியேறினார்.

    • கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது.
    • இந்தியாவின் அரி கிருஷ்ணா 5-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    பனாஜி:

    கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. அதன் ஐந்தாவது சுற்றுப் போட்டிகள் நடந்தன.

    நேற்று நடந்த முதல் சுற்றில் அர்ஜூன் ஏரிகைசி, அமெரிக்காவின் லெவான் அரோனியன் உடனான ஆட்டம் டிரா ஆனது.

    இந்நிலையில், இன்று நடந்த 5-வது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி, லெவான் அரோனியனை வீழ்த்தி காலிறுதிக்கு சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.

    • கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது.
    • இந்தியாவின் பிரக்ஞானந்தா இந்த தடவை 4-வது சுற்றுடன் நடையை கட்டியிருக்கிறார்.

    பனாஜி:

    கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. அதன் நான்காவது சுற்றுப் போட்டிகள் நேற்று நடந்தன.

    இந்நிலையில், 4வது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி டைபிரேக்கரில் 2 ஆட்டங்களிலும் ஹங்கேரியின் பீட்டர் லெகோவை பதம் பார்த்து (3-1) காலிறுதிக்கு முந்தைய 5-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.

    இதேபோல் இந்தியாவின் ஹரிகிருஷ்ணா சுவீடனின் நில்ஸ் கிரான்ட்லிசை வீழ்த்தினார்.

    மற்றொரு இந்திய வீரர் பிரக்ஞானந்தா 4வது சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • பிரீஸ்டைல் சர்வதேச செஸ் போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்து வருகிறது.
    • அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார் அர்ஜூன் எரிகைசி.

    லாஸ் வேகாஸ்:

    பிரீஸ்டைல் சர்வதேச செஸ் போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 வீரர்கள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக்கில் மோதினர். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களைப் பிடித்தவர்கள் காலிறுதிக்கு முன்னேறினர்.

    நேற்று முன்தினம் நடந்த காலிறுதியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் அர்ஜூன் எரிகைசி வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியின் மூலம் அர்ஜூன் எரிகைசி பிரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி, அமெரிக்காவின் லெவன் அரோனியன் உடன் மோதினார். இதில் அர்ஜூன் எரிகைசி தோல்வி அடைந்தார்.

    • பிரீஸ்டைல் சர்வதேச செஸ் போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்து வருகிறது.
    • அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார் அர்ஜூன் எரிகைசி.

    லாஸ் வேகாஸ்:

    பிரீஸ்டைல் சர்வதேச செஸ் போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்து வருகிறது.

    இதில் பங்கேற்றுள்ள 16 வீரர்கள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக்கில் மோதினர். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களைப் பிடித்தவர்கள் காலலிறுதிக்கு முன்னேறினர்.

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் அர்ஜூன் எரிகைசி 1.5-0.5 என்ற புள்ளி கணக்கில் நோடிர்பெக் அப்துசத்தோரோவை (உஸ்பெகிஸ்தான்) வீழ்த்தி அரையிறுதியை எட்டினார்.

    முதல் ரேபிட் ஆட்டத்தில் வெற்றியும், 2-வது ஆட்டத்தில் டிராவும் செய்த அர்ஜூன் எரிகைசி பிரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

    • நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது.
    • ஐந்தாவது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி வெற்றி பெற்றார்.

    ஸ்டாவஞ்சர்:

    நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான குகேஷ் (இந்தியா), 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் ஒவ்வொரு வீரரும், மற்றவர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும்.

    இதன் 5-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் 74-வது நகர்த்தலில் சீனாவின் வெய் யிவுடன் டிரா செய்தார். இதைத் தொடர்ந்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க நடந்த டைபிரேக்கரில் கருப்பு நிற காய்களுடன் ஆடிய குகேஷ் 56-வது நகர்த்தலில் தோல்வியை தழுவினார்.

    மற்றொரு இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி டைபிரேக்கரில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஹிகாரு நகமுராவுக்கு (அமெரிக்கா) அதிர்ச்சி அளித்தார்.

    5-வது சுற்று முடிவில் கார்ல்சென் 9½ புள்ளிகளுடன் முதலிடத்திலும், பாபியானோ கருனா (அமெரிக்கா) 8 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

    இந்திய வீரர்கள் அர்ஜூன் எரிகைசி 6 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், குகேஷ் 5½ புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் இருக்கின்றனர்.

    இதன் பெண்கள் பிரிவில் இந்தியாவின் கோனெரு ஹம்பி 8½ புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

    • தமிழக வீரர்களாக குகேஷ் ஏழாவது இடத்திலும் பிரக்ஞானந்தா எட்டாம் இடத்திலும் உள்ளனர்.
    • அர்ஜூன் மற்றும் அரவிந்த் இருவரும் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.

    சர்வதேச செஸ் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய வரலாற்றில் முதல் முறையாக 3 இந்திய வீரர்கள் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளனர்.

    இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி நான்காம் இடத்திலும், தமிழக வீரர்களாக குகேஷ் ஏழாவது இடத்திலும் பிரக்ஞானந்தா எட்டாம் இடத்திலும் உள்ளனர்.

    பிரக்ஞானந்தா தனது மதிப்பீட்டை 10 புள்ளிகள் அதிகரித்து முதல் முறையாக உலகின் முதல் பத்து இடங்களுக்குள் நுழைந்துள்ளார்.

    தற்போது முதல் 11 இடங்களில் 4 இந்தியர்களும், 22 இடங்களில் 5 இந்தியர்களும், 29 இடங்களில் 6 இந்தியர்களும், 37 இடங்களில் 7 இந்தியர்களும், 46 இடங்களில் 8 பேரும் உள்ளனர்.

    அர்ஜூன் மற்றும் அரவிந்த் இருவரும் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.

    • குகேஷ் 2775.2 புள்ளிகளையும், எரிகைசி 2788.1 புள்ளிகளையும் பெற்றுள்ளார்.
    • மேக்னஸ் கார்ல்சன் 2832.3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

    வரலாற்றில் முதல் முறையாக நேரடி செஸ் தரவரிசையில் முதல் 5 இடங்களில் 2 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    இந்திய செஸ் வீரர்கள் அர்ஜுன் எரிகைசி மற்றும் குகேஷ் டி ஆகியோர் நேரடி செஸ் தரவரிசையில் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களைப் பெற்றுள்ளனர்.

    குகேஷ் 2775.2 புள்ளிகளையும், எரிகைசி 2788.1 புள்ளிகளையும் பெற்றுள்ளார். நேரடி செஸ் தரவரிசையில் இரண்டு இந்தியர்கள் முதல் ஐந்து இடங்களுக்குள் இருப்பது வரலாற்றில் இதுவே முதல் முறை. மேக்னஸ் கார்ல்சன் 2832.3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்

    • நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென் (2,831 புள்ளி) முதலிடத்தில் தொடருகிறார்.
    • 3-வது சுற்றில் இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி 39-வது காய் நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

    சென்னை:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2-வது சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்து வருகிறது. 7 சுற்று கொண்ட இந்த போட்டியில் நேற்று 3-வது சுற்று நடந்தது.

    இதன் மாஸ்டர்ஸ் பிரிவில், கருப்பு நிற காய்களுடன் ஆடிய இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி 39-வது காய் நகர்த்தலில் அலெக்சி சாரனாவை (செர்பியா) தோற்கடித்தார். இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம்- விதித் குஜராத்தி இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.

    மற்ற ஆட்டங்களில் ஈரானின் அமீன் தபதாபேயி, பிரான்சின் மேக்சிம் வாச்சியர் லாக்ரேவையும், அமெரிக்காவின் லெவோன் ஆரோனியன், ஈரானின் பர்ஹாம் மக்சூட்லூவையும் 'செக்' வைத்து மடக்கினர். 3-வது சுற்று முடிவில் அர்ஜூன் எரிகைசி, தபதாபேயி தலா 2½ புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர். இன்று 4-வது சுற்று நடைபெறும்.

    இதற்கிடையே 3-வது சுற்றில் கிடைத்த வெற்றியின் மூலம் அர்ஜூன் எரிகைசி, லைவ் ரேட்டிங் தரவரிசையில் (2,805.8 புள்ளி) இரு இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென் (2,831 புள்ளி) முதலிடத்தில் தொடருகிறார்.

    சேலஞ்சர்ஸ் பிரிவில் இந்திய வீரர் பிரனேஷ் 46-வது நகர்த்தலில் தமிழக வீராங்கனை வைஷாலியையும், தமிழக வீரர் பிரணவ் 69-வது காய் நகர்த்தலில் கார்த்திகேயன் முரளியையும் வீழ்த்தினர். சத்வானி- லியோன் மென்டோன்கோ, ஹரிகா- அபிமன்யு ஆகியோர் இடையிலான மோதல்கள் 'டிரா' ஆனது. இந்த பிரிவில் 3 புள்ளிகளுடன் பிரணவ் முதலிடத்தில் உள்ளார்.

    • அர்ஜூன் எரிகைசி அரை இறுதியில் வியட்நாம் நாட்டை சேர்ந்த லயம் குவாங் லியை தோற்கடித்தார்
    • இறுதி போட்டியின் தொடக்க சுற்றில் முதல் 2 ஆட்டங்களில் கார்ல்சென் வெற்றி பெற்றார்.

    நியூயார்க்:

    ஜூலியஸ் பேர் ஜெனரேசன் கோப்பை ரேபிட் செஸ் போட்டி ஆன் லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசி அரை இறுதியில் வியட்நாம் நாட்டை சேர்ந்த லயம் குவாங் லியை தோற்கடித்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு அரை இறுதியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல் செனை (நார்வே) ஜெர்மனியின் வின்சென்ட் நெய்மரை வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் இன்று கார்ல்சென்-அர்ஜூன் எரிகைசி மோதினர்.

    இறுதி போட்டியின் தொடக்க சுற்றில் முதல் 2 ஆட்டங்களில் கார்ல்சென் வெற்றி பெற்றார். 3-வது ஆட்டம் டிரா ஆனது. இதன் மூலம் கார்ல்சென் 2.5-0.5 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் உள்ளார்.

    இறுதி போட்டியை டை பிரேக்கருக்கு கொண்டு செல்ல இந்திய வீரர் அர்ஜூன் இறுதி போட்டியின் 2-வது சுற்றில் ( 4 ஆட்டம்) வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

    ×