என் மலர்tooltip icon

    விளையாட்டு

    நார்வே செஸ்: 5வது சுற்றில் நகமுராவை வீழ்த்தினார் எரிகைசி
    X

    நார்வே செஸ்: 5வது சுற்றில் நகமுராவை வீழ்த்தினார் எரிகைசி

    • நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது.
    • ஐந்தாவது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி வெற்றி பெற்றார்.

    ஸ்டாவஞ்சர்:

    நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான குகேஷ் (இந்தியா), 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் ஒவ்வொரு வீரரும், மற்றவர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும்.

    இதன் 5-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் 74-வது நகர்த்தலில் சீனாவின் வெய் யிவுடன் டிரா செய்தார். இதைத் தொடர்ந்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க நடந்த டைபிரேக்கரில் கருப்பு நிற காய்களுடன் ஆடிய குகேஷ் 56-வது நகர்த்தலில் தோல்வியை தழுவினார்.

    மற்றொரு இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி டைபிரேக்கரில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஹிகாரு நகமுராவுக்கு (அமெரிக்கா) அதிர்ச்சி அளித்தார்.

    5-வது சுற்று முடிவில் கார்ல்சென் 9½ புள்ளிகளுடன் முதலிடத்திலும், பாபியானோ கருனா (அமெரிக்கா) 8 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

    இந்திய வீரர்கள் அர்ஜூன் எரிகைசி 6 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், குகேஷ் 5½ புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் இருக்கின்றனர்.

    இதன் பெண்கள் பிரிவில் இந்தியாவின் கோனெரு ஹம்பி 8½ புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

    Next Story
    ×