என் மலர்
நீங்கள் தேடியது "கோனேரு ஹம்பி"
- உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் திவ்யா தேஷ்முக்- கோனெரு ஹம்பி மோதுகின்றனர்.
- இதன்மூலம் பெண்கள் உலகக் கோப்பையை இந்தியா முதல்முறையாக வெல்வது உறுதியாகி விட்டது.
பதுமி:
'பிடே' பெண்கள் உலகக் கோப்பை செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் கோனெரு ஹம்பி, சீனாவின் லீ டிங்ஜி இடையிலான அரைஇறுதியின் முதல் இரு ஆட்டங்களும் டிராவில் முடிந்தன. இருவரும் தலா 1 புள்ளியுடன் சமநிலை வகித்தனர். இதைத் தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் சுற்று நேற்று நடந்தது.
டைபிரேக்கரிலும் முதல் இரு ஆட்டங்கள் 'டிரா' ஆனது. அடுத்த இரு ஆட்டங்களில் இருவரும் தலா ஒன்றில் வெற்றி பெற்றனர். இதனால் மேலும் இரு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதிவேகமாக காய்களை நகர்த்தக்கூடிய இதன் முதலாவது ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய கோனெரு ஹம்பி 70-வது நகர்த்தலில் வெற்றியை வசப்படுத்தினார். இதன் 2-வது ஆட்டத்தில் கருப்புநிற காய்களுடன் ஆடிய ஹம்பி எதிராளியை மிரட்டினார். 33-வது நகர்த்தலில் ராஜா, ராணி இரண்டுக்கும் குதிரை மூலம் 'செக்' வைத்தார். அத்துடன் தோல்வியை லீ டிங்ஜி ஒப்புக் கொண்டார்.
மொத்தம் 8 ஆட்டங்கள் நீடித்த இந்த அரைஇறுதியில் கோனெரு ஹம்பி 5-3 என்ற புள்ளி கணக்கில் டிங்ஜியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தார். 38 வயதான ஹம்பி உலக செஸ் போட்டியில் இறுதிப்போட்டியை எட்டுவது இதுவே முதல் முறையாகும். மேலும் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கும் தகுதி பெற்றார்.
இறுதி ஆட்டத்தில் கோனெரு ஹம்பி, சக நாட்டவரான திவ்யா தேஷ்முக்கை சந்திக்கிறார். இதன் மூலம் பெண்கள் உலகக் கோப்பையை இந்தியா முதல்முறையாக வெல்வது உறுதியாகி விட்டது. இறுதிசுற்று இரு ஆட்டங்களை கொண்டது. இதன் முதலாவது ஆட்டம் நாளை நடக்கிறது.
- அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் சீனாவின் டான் ஜாங்கியுடன் மோதினார்.
- இந்த போட்டியில் 1.5 - 0.5 என்ற கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு திவ்யா முன்னேறினார்.
FIDE உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் சீனாவின் டான் ஜாங்கியுடன் மோதினார். இந்த போட்டியில் 1.5 - 0.5 என்ற கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு திவ்யா முன்னேறினார்.
இதன்மூலம் மகளிர் செஸ் உலகக் கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை திவ்யா தேஷ்முக் பெற்றார். மேலும், இதன் மூலம் Candidates தொடருக்கும் திவ்யா தேர்வாகி உள்ளார்
மற்றொரு அரையிறுதி போட்டியில் கோனேரு ஹம்பி, சீனாவின் டிங்ஜி லீயுடன் மோதினார். இந்த போட்டி டிராவில் முடிந்தது. அதனால் இறுதிப்போட்டிக்கு முன்னேற ஹம்பி இப்போது டை-பிரேக்கரில் டிங்ஜி லீயை எதிர்கொள்வார்.
- கொனேரு ஹம்பி கால் இறுதியில் சீனாவை சேர்ந்த சாங்கை எதிர் கொண்டார்.
- இப்போட்டியில் ஹம்பி வெற்றி பெற்றார்.
பீடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. இதன் கால் இறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கியது.
முதல் முறையாக கொனேரு ஹம்பி, வைஷாலி , திவ்யா, ஹரிகா ஆகிய 4 இந்திய வீராங்கனைகள் காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.
இந்தியாவின் முன்னணி வீராங்கனையான கொனேரு ஹம்பி கால் இறுதியில் சீனாவை சேர்ந்த சாங்கை எதிர் கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹம்பி தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக செயல்பட்டார். 53-வது நகர்த்தலின் போது யுக்சின் தோல்வியை ஒப்புக் கொண்டார். இதனால் ஹம்பி வெற்றி பெற்றார்.
இதனையடுத்து அவர் விளையாடிய 2 ஆவது காலிறுதி போட்டி டிராவில் முடிந்தது. இதன் காரணமாக மகளிர் செஸ் உலக கோப்பை அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை ஆந்திராவைச் சேர்ந்த கோனேரு ஹம்பி பெற்றார்
சென்னை கிராண்ட்மாஸ்டரான வைஷாலி சீன வீராங்கனையும், முன்னாள் சாம்பியனுமான டான் ஜோங்கியை சந்தித்தார். முதல் போட்டி 'டிரா' ஆனது. 2-வது போட்டியில் வைஷாலி தோல்வியை தழுவி வெளியேறினார்.
மற்றொரு கால் இறுதியில் இந்திய வீராங்கனைகளான ஹரிகா-திவ்யா தேஷ்முக் மோதினார்கள். முதல் போட்டி 'டிரா' ஆனது. 2-வது ஆட்டமும் 60-வது நகர்த்தலின் போது 'டிரா' வில் முடிந்தது. இருவரும் தலா 1 புள்ளியுடன் சம நிலையில் உள்ளனர். இன்று 'நடைபெறும் டை பிரேக்கரில் வெற்றி பெறும் வீராங்கனை அரை இறுதிக்கு முன்னேறுவார்.
இன்னொரு கால் இறுதி யில் லீடிங்பி (சீனா) 2-0 என்ற கணக்கில் டிஜாக் னிட்ஜியை (ஜார்ஜியா) தோற்கடித்தார். ஹம்பி அரை இறுதியில் லீடிங்சியை எதிர்கொள்கிறார்.
- இந்தியாவின் முன்னணி வீராங்கனையான கொனேரு ஹம்பி சீனாவை சேர்ந்த சாங்கை எதிர் கொண்டார்.
- இன்று 2-வது போட்டியை ‘டிரா’ செய்தாலே ஹம்பி அரையிறுதிக்கு தகுதி பெறுவார்.
பீடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. இதன் கால் இறுதி ஆட் டங்கள் நேற்று தொடங்கியது. முதல் முறையாக 4 இந்திய வீராங்கனைகள் கால்இறுதிக்கு தகுதி பெற்று இருந்தனர்.
இந்தியாவின் முன்னணி வீராங்கனையான கொனேரு ஹம்பி கால் இறுதியில் சீனாவை சேர்ந்த சாங்கை எதிர் கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹம்பி தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக செயல்பட்டார். 53-வது நகர்த்தலின் போது யுக்சின் தோல்வியை ஒப்புக் கொண்டார். இதனால் ஹம்பி வெற்றி பெற்றார். அவர் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளார். இன்று 2-வது போட்டியை 'டிரா' செய்தாலே ஹம்பி அரையிறுதிக்கு தகுதி பெறுவார்.
சென்னை கிராண்ட்மாஸ் டரான வைஷாலி சீன வீராங்கனையும், முன்னாள் சாம்பியனுமான டான் ஜோங்கியை சந்தித்தார்.இந்த ஆட்டம் 72-வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.
மற்றொரு கால்இறுதியில் இந்திய வீராங்கனைகள் திவ்யா-ஹரிகா மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய திவ்யா, தொடக்கத்தில் முந்தினார். பின்னர் 31-வது நகர்த்தலில் போட்டி 'டிரா' ஆனது. இருவரும் 0.5-0.5 என சம நிலையில் இருந்தனர்.
- பிடே பெண்கள் கிராண்ட்பிரி செஸ் போட்டி மகாராஷ்டிராவின் புனேயில் நடந்தது.
- இந்தியாவின் கோனேரு ஹம்பி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
மும்பை:
பிடே பெண்கள் கிராண்ட்பிரி செஸ் போட்டி மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடந்து வந்தது. இதன் 9-வது மற்றும் கடைசி சுற்று போட்டி நேற்று நடந்தது.
வெள்ளை நிற காய்களுடன் களம் இறங்கிய இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி, 84-வது நகர்த்தலில் நுர்குல் சலிமோவாவை (பல்கேரியா) தோற்கடித்தார். மற்ற இந்திய வீராங்கனைகள் வைஷாலி, ஹரிகா, திவ்யா தேஷ்முக் தங்களது ஆட்டங்களில் டிரா கண்டனர்.
ஒரு தோல்வியும் சந்திக்காத ஆந்திராவைச் சேர்ந்த 38 வயதான கோனேரு ஹம்பி 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தைச் சொந்தமாக்கினார்.
சீனாவின் ஜூ ஜினெரும் 7 புள்ளிகளுடன் அவருடன் சமநிலையில் இருந்தார். ஆனால் போட்டி விதிப்படி கருப்பு நிற காயுடன் (5 முறை) விளையாடுகையில் சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் ஹம்பி மகுடம் சூடினார். ஜினெர் 2-வது இடம் பெற்றார்.
இந்தியாவின் திவ்யா தேஷ்முக் 5½ புள்ளிகளுடன் 3-வது இடத்தைப் பிடித்தார். தமிழகத்தின் வைஷாலி 4 புள்ளிகளுடன் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
- ஆண்கள் பிரிவில் இந்திய வீரர்கள் ஹரி கிருஷ்ணன், நிஹல் சரின், அதிபன் உள்ளிட்டோர் டாப்-10 இடத்திற்குள் கூட வரவில்லை.
- நம்பர் ஒன் வீரர் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) 16 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து 6-வது முறையாக மகுடம் சூடினார்.
அல்மாட்டி:
உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் உள்ள அல்மாட்டியில் நடந்தது. இதில் பெண்கள் பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி கடைசி நாளான நேற்று 8 கேம்களில் 7.5 புள்ளிகளை பெற்று அசத்தினார். 17-வதுமற்றும் கடைசி சுற்று முடிவில் ஹம்பி 12.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை தட்டி சென்றார்.
இதன் மூலம் உலக பிளிட்ஸ் சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார். கஜகஸ்தானின் பிபிசரா பாலபயேவா 13 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீராங்கனை ஹரிகா 10.5 புள்ளிகளுடன் 13-வது இடத்தை பெற்றார்.
இதன் ஆண்கள் பிரிவில் 'நம்பர் ஒன்' வீரர் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) 16 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து 6-வது முறையாக மகுடம் சூடினார். இந்திய வீரர்கள் ஹரி கிருஷ்ணன், நிஹல் சரின், அதிபன் உள்ளிட்டோர் டாப்-10 இடத்திற்குள் கூட வரவில்லை.






