search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thief"

    • பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையன் கைது செய்யப்பட்டான்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை பரவையை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி சசிகலா (வயது 46). இவர் சம்பவத்தன்று மதுரை-திண்டுக்கல் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர் சசிகலா அணிந்தி ருந்த தங்க செயினை பறித்தான்.

    அப்போது அவர் செயினை பிடித்துக் கொண்டதால் அது 2 துண்டானது. இதில் ஒரு பகுதியை மர்ம நபர் கொண்டு சென்று விட்டான். இதுபற்றி சசிகலா செல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.இதுபற்றி தகவலறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் சம்பந்தப் பட்ட குற்றவாளியை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகர வடக்கு துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில், செல்லூர் போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசார் நகைபறிப்பு சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி அவற்றில் இடம் பெற்று உள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் சசிகலாவிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் வந்த மோட்டார் சைக்கிளின் பதிவெண் தெரிய வந்தது.

    அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது செயின்பறிப்பில் ஈடுபட்டவர் மதுரை கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த விஜயகாந்த் என்பது தெரியவந்தது. வீட்டில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

    அவர் வேறு செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
    • கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்தனர்.

    தாராபுரம் :

    தாராபுரம், மூலனூர், கொளத்துபாபாளையம் பகுதிகளில் இரவு நேரங்களில் வீட்டின் பூட்டை உடைத்து திருடுவது, பெண்களை குறித்து நகை பறிப்பது போன்ற சம்பவம் நடைபெற்றது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்க ப்பட்டது.

    இந்த தனிப்படை போலீ சார் முதலில் கொள்ளை நடந்த வீட்டின் அருகில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்தனர். அப்போது கண்காணிப்பு கேமராவில் முகமூடி அணிந்த 3 டவுசர் கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து சந்தேகத்தின் பேரில் தேனி மாவட்டம் ஜங்கிள் பட்டியை சேர்ந்த முருகேசன் என்கிற மூசா (வயது 52) என்வரை போலீசார் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாணையில் அவர் உள்பட 3 பேர் முகமூடி அணிந்து, டவுசர் போட்டு கொள்ளையில் ஈடுபட்டதாக கூறினார். இதையடுத்து முருகேசனை போலீசார் கைது செய்தனர். மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • கொங்கரப்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர், இரு சக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி, ஆடு குறித்து விசாரணை செய்தார்.
    • இதனால் பயந்துபோன அந்த நபர், ஆட்டையும், இருசக்கர வாகனத்தையும் அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.

    கடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த கொங்கரப்பட்டி அம்மனேரி முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்தவர் குமார்

    (வயது 40). இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இவரது ஆட்டை திருடிய மர்மநபர், இரு சக்கர வாகனத்தில் அதை ஏற்றிக்கொண்டு சென்றார்.

    அப்போது கொங்கரப்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர், இரு சக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி, ஆடு குறித்து விசாரணை செய்தார். இதனால் பயந்துபோன அந்த நபர், ஆட்டையும், இருசக்கர வாகனத்தையும் அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.

    இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மர்ம நபர் விட்டு சென்ற இரு சக்கர வாகனத்தை வைத்து போலீசார் விசாரணை செய்ததில், ஆடு திருடியவர் பொம்மியம்பட்டி மேல்கோம்பை பகுதியை சேர்ந்த அசோக்குமார் என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண்ருட்டியில் மோட்டார் சைக்கிள் திருடன் கைது செய்யப்பட்டார்.
    • அவரைப் பிடித்து போலீசார் விசாரித்த ேபாது முன்னுக்கு பின் முரனாக கூறினார்.

    கடலூர்:

    புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் சாலையில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். அவரைப் பிடித்து போலீசார் விசாரித்த ேபாது முன்னுக்கு பின் முரனாக கூறினார். இதனால் அந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் பணப்பாக்கத்தைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 30) என்பது போலீசாருக்கு தெரிய வந்தது.

    மேலும், பண்ருட்டி-செஞ்சி சாலையில் வழிப்பறியில் ஈடுபட்டு செல்போன், மோட்டார் சைக்கிள் மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது. மேலும், தஞ்சாவூர் பகுதியிலும் இவர் வழிப்பறி, மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பாலமுருகனிடம் இருந்து செல்போன்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மேலும் 7 மோட்டார் சைக்கிளை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் கலைஞர் மு.கருணாநிதி புறவழி சாலையில், காரைக்கால் நகர போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீசார், நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்பொழுது சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்ததில், அவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் காரைக்காலில் அண்மையில் திருட்டு போன வாகனம் என்று தெரியவந்தது.

    தொடர்ந்து, போலீசார் அவரை கைது செய்து விசாரித்ததில், அவர் நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார்(வயது38) என்றும், இதேபோல் காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மேலும் 7 மோட்டார் சைக்கிளை திருடியதையும் ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    இதனை அடுத்து போலீசார் அவரிடம் இருந்த 8 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து, காரைக்கால் கோர்ட்டில் ஆஜர் படுத்தி, புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி 3 பேரை கைது செய்தனர்.
    • ரெயில்வே அதிகாரிகள் துணை புரிந்தார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தப்படுகிறது

    பாட்னா:

    பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் உள்ள ஒரு ஆக்கர் கடையில் இருந்து ஏராளமான இரும்பு பொருள்கள் திருடப்பட்டது.

    இது பற்றி ஆக்கர் கடை உரிமையாளர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அதே பகுதியை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரும்பு பொருட்கள் மீட்கப்பட்டன.

    மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அக்கும்பல் ரெயில் என்ஜினையே திருடிய அதிர்ச்சி சம்பவம் தெரியவந்தது. இதுபற்றிய விபரம் வருமாறு:-

    பூர்ணியா மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையத்தில் உள்ள யார்டில் பழுதான ரெயில் பெட்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும். இந்த யார்டுக்கு திருட்டு கும்பல் சுரங்க பாதை அமைத்து உள்ளது. அந்த பாதை வழியாக யார்டுக்கு வரும் ரெயில்களில் உள்ள இரும்பு பொருள்களை கொள்ளை கும்பல் திருடி சென்றுள்ளனர்.

    பல மாதங்களாக நடந்து வந்த இத்திருட்டை அதிகாரிகள் யாரும் கண்டுபிடிக்கவில்லை. இதன் உச்சக்கட்டமாக ரெயில் என்ஜினையே இக்கும்பல் திருடி சென்ற சம்பவமும் நடந்துள்ளது.

    பூர்ணியா மாவட்டத்தில் மக்கள் பார்வைக்காக டீசல் ரெயில் என்ஜின் ஒன்று காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. அந்த ரெயில் என்ஜினையே இக்கும்பல் திருடி சென்றுள்ளது.

    இதுபோல ரெயில் பாலத்தில் உள்ள இரும்பு போல்டு மற்றும் நட்டுக்களையும் இக்கும்பல் திருடி விற்றுள்ளனர்.

    இவை அனைத்தையும் கண்டுபிடித்த போலீசார் இவர்களுக்கு ரெயில்வே அதிகாரிகள் துணை புரிந்தார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கண்டாபுரத்தை சேர்ந்த அருண்பிரகாஷ் (37) என்பதும், மோட்டார்சைக்கி ளை திருடியது இவர் தான் என்பதும் தெரியவந்தது.
    • இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார்சைக்கிளை மீட்டு, அருண்பிரகாஷ்-ஐ ைகது செய்தனர்.

    குமாராபாளையம்:

    குமார பாளையம் காளியண்ணன் நகர் பகுதியில் வசிப்பவர் மணிகண்டன் (வயது 32). இவர் சிமெண்ட் கடை வைத்து தொழில் செய்து வருபவர். கடந்த 3-ந்தேதி மாலை 6 மணியளவில் ராஜம் தியேட்டர் அருகே ஓட்டல் கடையில் டிபன் வாங்கி கொண்டு திரும்ப வந்து பார்க்கும் போது, ஓட்டல் முன்பு நிறுத்தி விட்டு சென்ற மோட்டார் சைக்கிளை காணவில்லை.

    இதே போல் குமார பாளையம் அருகே கத்தேரி, சாமியம்பாளையம் பகுதி யில் வசிப்பவர் கார்த்தி (26). எலெக்ட்ரிசியன்.

    கடந்த மாதம் 10-ந்தேதி சேலம் சாலை ரெயின்போ கேபிள் அலுவலகத்தின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, உள்ளே சென்று வேலையை முடித்து விட்டு வெளியில் வந்து பார்க்கும் போது, வாகனத்தை காணவில்லை.

    இது குறித்து குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் காவிரி நகர் புதிய பாலம் அருகே ரோந்து சென்ற போது, அவ்வழியே மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாத்தனர்.

    விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த அருண்பிரகாஷ் (37) என்பதும், மோட்டார்சைக்கி ளை திருடியது இவர் தான் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார்சைக்கிளை மீட்டு, அருண்பிரகாஷ்-ஐ ைகது செய்தனர்.

    • கொள்ளையன் வீட்டின் எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் கொண்ட கதவை உடைத்து உள்ளே நுழைந்து பீரோக்களை உடைத்து. கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளான்.
    • இரவு ரோந்து சென்ற காவல்துறை வாகனம் சைரன் சத்தம் கேட்டு முயற்சியை கைவிட்டு தப்பி ஓடிவிட்டான்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே சேந்தங்குடி கூட்டுறவு நகரை சேர்ந்தவர் ஜான் விக்டர் (64).தனியார் பாரா மெடிக்கல் கல்லூரி நடத்தி வருகிறார். இவரது மகன் சார்லஸ் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று ஜான் விக்டர் அவரது மனைவி ரோஸ்மேரி மற்றும் மருமகள் அரசி பேரக்குழந்தைகள் ஆகியோருடன் பட்டுக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர்

    இந்நிலையில் கொள்ளையன் பூட்டி இருந்த வீட்டின் எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் கொண்ட கதவை உடைத்து வீட்டின் உள்ளே நுழைந்து பீரோக்களை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளான்.

    இந்நிலையில், இரவு ரோந்து சென்ற காவல்துறை வாகனம் சைரன் சத்தம் கேட்டு முயற்சியை கைவிட்டு தப்பி ஓடிவிட்டான்.

    மதியம் வீட்டிற்கு வந்த பணியாட்கள் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து ஜான் விக்டருக்கு தகவல் அளித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் சிறப்பு பிரிவு போலீசார் ஜான் விக்டர் வீட்டுக்கு உடனடியாக சென்று விசாரணையில் ஈடுப்பட்டனர்.

    இதனிடையே வெளியூர் சென்றிருந்த ஜான் விக்டரும் உடனடியாக புறப்பட்டு தனது வீட்டிற்கு வந்தார்.

    அதிர்ச்சியுடன் வீட்டின் உள்ளே சென்று நகை பணம் கொள்ளை போகியுள்ளதா என்று பார்த்தபோது இரண்டு அறைகளை உடைத்து இருந்த திருடன் நகை பணம் உள்ள அறையினை உடைக்காமல் சென்றது தெரிய வந்தது.

    அந்த அறைகளில் சுமார் 70 பவுன் தங்க நகை மற்றும் ரொக்க பணம் இருந்தது என ஜான் விக்டர் தெரிவித்தார்.

    கொள்ளையன் மாஸ்க் மற்றும் கையுறைகள் அணிந்து வீட்டில் நுழையும் காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது இதனை கைப்பற்றி சீர்காழி போலீசார் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.

    • விசாரணைக்கு ஆஜராகாததால் நீதிபதி கண்ணன் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தார்.
    • வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் கண்ணனை தேடி வந்தனர்

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 2017 ம் ஆண்டு வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட வந்த வெள்ளகோவில், திருவள்ளூர் நகர் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் கண்ணன் (40) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த மார்ச் 14ந்தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாததால் நீதிபதி கண்ணன் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தார்.

    அதன் பேரில் காங்கயம் போலீஸ் துணை சூப்பிரெண்ட் பார்த்திபன் உத்தரவின் பேரில் வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட கண்ணனை தேடி வந்தனர். இந்நிலையில் கொளைளயன் கண்ணனை நேற்று மூலனூர் அருகே போலீசார் கைது செய்து காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    • போலீஸ் போல நடித்து இங்கு என்ன செய்கிறீர்கள், செல்போனை ஐயா வாங்கி வரச்சொல்கிறார் என மிரட்டி செல்போனை பறித்துவிடுகிறார்.
    • உடனே தனது மோட்டார்சைக்கிளில் மின்னல் வேகத்தில் பறந்து சென்றுவிடுகிறார்.

    காகாபாளையம்:

    இளம்பிள்ளை அருகே பிரசித்திபெற்ற கஞ்சமலை சித்தர்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் நுாற்றுக்கணக்கான பக்தர்களும் தினந்தோறும் ஏராளமானோரும் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்த கோவிலை சுற்றிலும் சாலையும் அடர்ந்த புதர்களும் காணப்படுகிறது.

    கடந்த சில வாரங்களாக சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் கோவில் அருகே உள்ள சாலையில் தனியாக செல்போனில் பேசியபடி செல்லும் இளைஞர்கள் மற்றும் பெண்களிடம் போலீஸ் போல நடித்து இங்கு என்ன செய்கிறீர்கள், செல்போனை ஐயா வாங்கி வரச்சொல்கிறார் என மிரட்டி செல்போனை பறித்துவிடுகிறார். உடனே தனது மோட்டார்சைக்கிளில் மின்னல் வேகத்தில் பறந்து சென்றுவிடுகிறார்.

    கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் 16 சி.சி.டி.வி. கேமராக்கள் இருந்தும் கோவில் எல்லை ஆரம்பிக்கும் முகப்பு சாலையில் கேமரா இல்லாத காரணத்தால் அந்த கொள்ளையனை அடையாளம் காண்பதில் சிக்கல் எழுந்துள்ளது. சித்தர்கோவில் அடிவார பகுதியில் கடந்த 2 ஆண்டுக்கு முன் கடைகாரர்கள் பங்களிப்புடன் 4 கேமராக்கள் பொருத்தப் பட்டன. ஆனால் அது தற்போது செயல்பாட்டில் இல்லை என்பது குறிப்பிடதக்கதாகும்.

    இது குறித்து கஞ்சமலை சித்தர்கோவில் செயல் அலுவலர் குமரவேல் கூறியதாவது:

    போலீசார் சி.சி.டி.வி. பதிவை எடுத்து சென்றுள்ளனர்.கோவில் வளாகத்தில் திருட்டு நடக்கவில்லை. கோவில் பின்புறம் உள்ள புதர் அடர்ந்த சாலையில் திருட்டு நடந்துள்ளது. குரங்குகள் தொந்தரவு அதிகமாக உள்ளதால் அங்கு கேமரா பொருத்தவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி ஆகியவற்றை திருடி சென்றனர்.
    • பொதுமக்கள் சத்தம் போடவே கொள்ளையன் அங்கிருந்து ஓடி விட்டான் .

    தாராபுரம் :

    தாராபுரம் எல்லிஸ் நகர் டி.எஸ். எம். நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 67), பால் வியாபாரி. இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களது மகன் கார்த்திக். இன்று காலை விஜயன் பால் வியாபாரம் செய்ய வீட்டிலிருந்து சென்று விட்டார். விஜயலட்சுமி உழவர் சந்தைக்கும் கார்த்திகேயன் வாக்கிங் சென்று விட்டனர்.

    இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து அரை பவுன் கம்மல் மற்றும் 60 கிராம் மதிப்புள்ள வெள்ளி பிரேஸ்லெட் ஆகியவற்றை திருடி சென்றனர். மேலும் அதே பகுதி பத்மாவதி நகரில் நிதி நிறுவனம் நடத்தி வரும் நாச்சிமுத்து என்பவரது வீட்டில் கிரில் கேட்டை உடைத்து திருட முயற்சி செய்து உள்ளனர். பொதுமக்கள் சத்தம் போடவே கொள்ளையன் அங்கிருந்து ஓடி விட்டான் .

    தாராபுரம் ஆர் .கே .ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் . இவரது மனைவி தேவிகா . இவர்களது வீட்டில் கதவை உடைக்கும் முயன்ற போது தேவிகா கையை வைத்து தடுத்துள்ளார். ஆத்திரமடைந்த கொள்ளையன் கதவை உடைக்காமல் அவரது கையை கத்தியால் கீறி விட்டு தப்பி ஓடி விட்டான். தாராபுரத்தில் அடுத்தடுத்து 3 இடங்களில் நடந்த திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

    • திருச்சியில் ஸ்டேஷனரி கடையில் திருட வந்த வாலிபர், உரிமையாளர் வந்துவிட்டதால் மொபட்ைட விட்டு விட்டு தப்பிச்சென்றார்
    • வாசுதேவன் கோட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி:

    திருச்சி சங்கரன் பிள்ளை சாலை பகுதியில் வசித்து வருபவர் வாசுதேவன் (வயது 52). இவர ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார். கடந்த 29-ந்தேதி இரவு வாசுதேவன் கடையை பூட்டிவிட்டு அருகாமையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

    பின்னர் பூட்டிய கடைக்குள் விளக்கு எரிவதை பார்த்த வாசுதேவன் உடனடியாக கடைக்கு திரும்பினார்.

    அப்போது கடைக்குள் திருடன் இருப்பதை கண்டு திடுக்கிட்டார். பின்னர் அவர் திருடன்..., திருடன்... என கூச்சல் போட்டார்.

    உடனே கொள்ளையன் கடையில் இருந்த செல்போன் மற்றும் ரூ.9800 ரொக்க பணம் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றார்.

    கடை உரிமையாளர் வந்துவிட்டதால் தான் ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தை போட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

    இதுகுறித்து வாசுதேவன் கோட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×