காடையாம்பட்டி அருகே ஆடு திருடியவர் கைது

கொங்கரப்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர், இரு சக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி, ஆடு குறித்து விசாரணை செய்தார்.இதனால் பயந்துபோன அந்த நபர், ஆட்டையும், இருசக்கர வாகனத்தையும் அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.
காடையாம்பட்டி அருகே ஆடு திருடியவர் கைது
Published on

கடையாம்பட்டி:

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த கொங்கரப்பட்டி அம்மனேரி முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்தவர் குமார்

(வயது 40). இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இவரது ஆட்டை திருடிய மர்மநபர், இரு சக்கர வாகனத்தில் அதை ஏற்றிக்கொண்டு சென்றார்.

அப்போது கொங்கரப்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர், இரு சக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி, ஆடு குறித்து விசாரணை செய்தார். இதனால் பயந்துபோன அந்த நபர், ஆட்டையும், இருசக்கர வாகனத்தையும் அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மர்ம நபர் விட்டு சென்ற இரு சக்கர வாகனத்தை வைத்து போலீசார் விசாரணை செய்ததில், ஆடு திருடியவர் பொம்மியம்பட்டி மேல்கோம்பை பகுதியை சேர்ந்த அசோக்குமார் என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com