search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன்"

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • 235 வகையான அரசு திட்டங்கள் ஆன்லைன் மூலம் செயல்படுத்தப்படுகிறது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் போலீஸ் துறையையும், ஆஸ்பத்திரிகளையும் இணைக்கும் வகையில் மெடிக்கோ லீகல் கேஸ் இன்டிமேஷன் சிஸ்டம் என்ற புதிய செல்போன் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த செயலியின் அறிமுக விழா நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் முன்னிலை வகித்தார்.

    விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்று புதிய செயலியை அறிமுகப்படுத்தி வைத்தார். பின்னர் அவர் பேசியபோது கூறியதாவது:-

    தகவல் தொழில்நுட்பம் தற்போது விவசாயிகள், சாதாரண மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. தமிழகத்தில் 235 வகையான அரசு திட்டங்கள் ஆன்லைன் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டு 16 ஆயிரம் இ-சேவை மையங்கள் தொடங்கப்பட உள்ளன. இ-ஆபீஸ் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்தில் பைலட் திட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த மெடிக்கல் லீகல் கேஸ் இண்டிமேஷன் சிஸ்டம் மாநில அளவில் கொண்டு செல்லப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக ஆசாரிபள் ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, தக்கலை அரசு ஆஸ்பத்திரி மற்றும் 4 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு டேப் லெட்டை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கி னார்.

    விழாவில் பத்மநாபபுரம் உதவி கலெக்டர் கவுசிக், மாவட்ட வன அதிகாரி இளையராஜா, மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையர் ஆனந்த் மோகன், ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டீன் டாக்டர் பிரின்ஸ் பயஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போலீஸ் போல நடித்து இங்கு என்ன செய்கிறீர்கள், செல்போனை ஐயா வாங்கி வரச்சொல்கிறார் என மிரட்டி செல்போனை பறித்துவிடுகிறார்.
    • உடனே தனது மோட்டார்சைக்கிளில் மின்னல் வேகத்தில் பறந்து சென்றுவிடுகிறார்.

    காகாபாளையம்:

    இளம்பிள்ளை அருகே பிரசித்திபெற்ற கஞ்சமலை சித்தர்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் நுாற்றுக்கணக்கான பக்தர்களும் தினந்தோறும் ஏராளமானோரும் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்த கோவிலை சுற்றிலும் சாலையும் அடர்ந்த புதர்களும் காணப்படுகிறது.

    கடந்த சில வாரங்களாக சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் கோவில் அருகே உள்ள சாலையில் தனியாக செல்போனில் பேசியபடி செல்லும் இளைஞர்கள் மற்றும் பெண்களிடம் போலீஸ் போல நடித்து இங்கு என்ன செய்கிறீர்கள், செல்போனை ஐயா வாங்கி வரச்சொல்கிறார் என மிரட்டி செல்போனை பறித்துவிடுகிறார். உடனே தனது மோட்டார்சைக்கிளில் மின்னல் வேகத்தில் பறந்து சென்றுவிடுகிறார்.

    கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் 16 சி.சி.டி.வி. கேமராக்கள் இருந்தும் கோவில் எல்லை ஆரம்பிக்கும் முகப்பு சாலையில் கேமரா இல்லாத காரணத்தால் அந்த கொள்ளையனை அடையாளம் காண்பதில் சிக்கல் எழுந்துள்ளது. சித்தர்கோவில் அடிவார பகுதியில் கடந்த 2 ஆண்டுக்கு முன் கடைகாரர்கள் பங்களிப்புடன் 4 கேமராக்கள் பொருத்தப் பட்டன. ஆனால் அது தற்போது செயல்பாட்டில் இல்லை என்பது குறிப்பிடதக்கதாகும்.

    இது குறித்து கஞ்சமலை சித்தர்கோவில் செயல் அலுவலர் குமரவேல் கூறியதாவது:

    போலீசார் சி.சி.டி.வி. பதிவை எடுத்து சென்றுள்ளனர்.கோவில் வளாகத்தில் திருட்டு நடக்கவில்லை. கோவில் பின்புறம் உள்ள புதர் அடர்ந்த சாலையில் திருட்டு நடந்துள்ளது. குரங்குகள் தொந்தரவு அதிகமாக உள்ளதால் அங்கு கேமரா பொருத்தவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×