search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பீகாரில் ரெயில்வே யார்டுக்கு சுரங்கம் அமைத்து ரெயில் என்ஜினை திருடிய கும்பல்
    X

    கோப்பு படம்

    பீகாரில் ரெயில்வே யார்டுக்கு சுரங்கம் அமைத்து ரெயில் என்ஜினை திருடிய கும்பல்

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி 3 பேரை கைது செய்தனர்.
    • ரெயில்வே அதிகாரிகள் துணை புரிந்தார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தப்படுகிறது

    பாட்னா:

    பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் உள்ள ஒரு ஆக்கர் கடையில் இருந்து ஏராளமான இரும்பு பொருள்கள் திருடப்பட்டது.

    இது பற்றி ஆக்கர் கடை உரிமையாளர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அதே பகுதியை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரும்பு பொருட்கள் மீட்கப்பட்டன.

    மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அக்கும்பல் ரெயில் என்ஜினையே திருடிய அதிர்ச்சி சம்பவம் தெரியவந்தது. இதுபற்றிய விபரம் வருமாறு:-

    பூர்ணியா மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையத்தில் உள்ள யார்டில் பழுதான ரெயில் பெட்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும். இந்த யார்டுக்கு திருட்டு கும்பல் சுரங்க பாதை அமைத்து உள்ளது. அந்த பாதை வழியாக யார்டுக்கு வரும் ரெயில்களில் உள்ள இரும்பு பொருள்களை கொள்ளை கும்பல் திருடி சென்றுள்ளனர்.

    பல மாதங்களாக நடந்து வந்த இத்திருட்டை அதிகாரிகள் யாரும் கண்டுபிடிக்கவில்லை. இதன் உச்சக்கட்டமாக ரெயில் என்ஜினையே இக்கும்பல் திருடி சென்ற சம்பவமும் நடந்துள்ளது.

    பூர்ணியா மாவட்டத்தில் மக்கள் பார்வைக்காக டீசல் ரெயில் என்ஜின் ஒன்று காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. அந்த ரெயில் என்ஜினையே இக்கும்பல் திருடி சென்றுள்ளது.

    இதுபோல ரெயில் பாலத்தில் உள்ள இரும்பு போல்டு மற்றும் நட்டுக்களையும் இக்கும்பல் திருடி விற்றுள்ளனர்.

    இவை அனைத்தையும் கண்டுபிடித்த போலீசார் இவர்களுக்கு ரெயில்வே அதிகாரிகள் துணை புரிந்தார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×