search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ் என கூறி நூதன முறையில்   செல்போன் பறிக்கும் கொள்ளையன்  பொதுமக்கள் அச்சம்
    X

    கண்காணிப்பு காமிராவில் பதிவான கொள்ளையன் உருவம்.

    போலீஸ் என கூறி நூதன முறையில் செல்போன் பறிக்கும் கொள்ளையன் பொதுமக்கள் அச்சம்

    • போலீஸ் போல நடித்து இங்கு என்ன செய்கிறீர்கள், செல்போனை ஐயா வாங்கி வரச்சொல்கிறார் என மிரட்டி செல்போனை பறித்துவிடுகிறார்.
    • உடனே தனது மோட்டார்சைக்கிளில் மின்னல் வேகத்தில் பறந்து சென்றுவிடுகிறார்.

    காகாபாளையம்:

    இளம்பிள்ளை அருகே பிரசித்திபெற்ற கஞ்சமலை சித்தர்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் நுாற்றுக்கணக்கான பக்தர்களும் தினந்தோறும் ஏராளமானோரும் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்த கோவிலை சுற்றிலும் சாலையும் அடர்ந்த புதர்களும் காணப்படுகிறது.

    கடந்த சில வாரங்களாக சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் கோவில் அருகே உள்ள சாலையில் தனியாக செல்போனில் பேசியபடி செல்லும் இளைஞர்கள் மற்றும் பெண்களிடம் போலீஸ் போல நடித்து இங்கு என்ன செய்கிறீர்கள், செல்போனை ஐயா வாங்கி வரச்சொல்கிறார் என மிரட்டி செல்போனை பறித்துவிடுகிறார். உடனே தனது மோட்டார்சைக்கிளில் மின்னல் வேகத்தில் பறந்து சென்றுவிடுகிறார்.

    கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் 16 சி.சி.டி.வி. கேமராக்கள் இருந்தும் கோவில் எல்லை ஆரம்பிக்கும் முகப்பு சாலையில் கேமரா இல்லாத காரணத்தால் அந்த கொள்ளையனை அடையாளம் காண்பதில் சிக்கல் எழுந்துள்ளது. சித்தர்கோவில் அடிவார பகுதியில் கடந்த 2 ஆண்டுக்கு முன் கடைகாரர்கள் பங்களிப்புடன் 4 கேமராக்கள் பொருத்தப் பட்டன. ஆனால் அது தற்போது செயல்பாட்டில் இல்லை என்பது குறிப்பிடதக்கதாகும்.

    இது குறித்து கஞ்சமலை சித்தர்கோவில் செயல் அலுவலர் குமரவேல் கூறியதாவது:

    போலீசார் சி.சி.டி.வி. பதிவை எடுத்து சென்றுள்ளனர்.கோவில் வளாகத்தில் திருட்டு நடக்கவில்லை. கோவில் பின்புறம் உள்ள புதர் அடர்ந்த சாலையில் திருட்டு நடந்துள்ளது. குரங்குகள் தொந்தரவு அதிகமாக உள்ளதால் அங்கு கேமரா பொருத்தவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×