search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மொபட்"

    • முயற்சியில் பல கட்ட இடர்பாடுகளை சந்தித்து சந்தித்து நிறைவாக அவர் எட்டியுள்ளதுதான் சாதனை.
    • 2 மணி நேரம் 'சார்ஜ்' செய்தால் 14 கிலோமீட்டர் தொலைவிற்கு பயணிக்க முடிகிறது.

    ஆறுமுகநேரி:

    தமிழக அரசின் விலையில்லா சைக்கிளை பெறக்கூடிய 10-ம் வகுப்பு மாணவர்தான் அவர். ஆனால் தனது திறமையினால் சாதாரண சைக்கிள் ஒன்றை அதிக விலை மதிப்புள்ள சைக்கிளாக மாற்றி அசத்தியது தான் இங்கு ஆச்சரியமானது.

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் குத்துக்கல் தெருவை சேர்ந்த காதர் ஷாமுனா என்பவரின் மகன் சுல்தான் அப்துல்காதர் (வயது16). இவர் காயல்பட்டினம் சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் சிறு வயது முதலே பொம்மை கார்கள் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களையும், சிறு சிறு மின் கருவிகளையும் 'அக்கு வேறு ஆணி வேறாக' பிரித்துப் போட்டு ஆராய்ந்து மீண்டும் அதனை பொருத்தி வைத்து இயக்கி பார்ப்பதில் அலாதி ஆனந்தம் காண்பவராக இருந்துள்ளார்.

    இந்த வகையில்தான் சுல்தான் அப்துல்காதரின் கவனம் தனது சைக்கிள் மீதும் ஏற்பட்டுள்ளது. குறைந்த செலவில் அந்த சைக்கிளை பேட்டரியில் இயங்கும் மொபட் போல மாற்ற வேண்டும் என்ற ஆசை அவருக்கு தோன்றியுள்ளது. அவ்வப்போது தனது பெற்றோரிடம் இருந்து கிடைக்கும் பணத்தை சேமித்து தனது கனவு சைக்கிளுக்காக தேவைப்படும் பேட்டரி, மோட்டார் மற்றும் உதிரி பாகங்களை வாங்கி சேர்த்துள்ளார். பின்னர் அவற்றையெல்லாம் சைக்கிளில் பொருத்திப் பார்த்து அவ்வப்போது பரிசோதனையை நிகழ்த்தி வந்துள்ளார்.

    இந்த முயற்சியில் பல கட்ட இடர்பாடுகளை சந்தித்து சந்தித்து நிறைவாக அவர் எட்டியுள்ளதுதான் சாதனை. இப்போது இலகுவான சைக்கிள் பேட்டரி மொபட் காயல்பட்டினத்தில் பலராலும் பாராட்டப்படும் வாகனமாக மாறி உள்ளது. பட்டனை அழுத்தி 'ஸ்டார்ட்' செய்து திருகினால் 'ரெக்க கட்டி பறக்குதய்யா சுல்தானோட சைக்கிள்'. 2 மணி நேரம் 'சார்ஜ்' செய்தால் 14 கிலோமீட்டர் தொலைவிற்கு பயணிக்க முடிகிறது. மணிக்கு 40 கிலோமீட்டர் தூர வேகம்.

    தேவைப்பட்டால் சாதாரணமாக 'பெடல்' செய்தும் பயணிக்கலாம். கூடுதலாக பேட்டரி இணைப்புடன் கூடிய எல்.இ.டி. ஹெட்லைட் வசதியும், தானியங்கி லாக் சிஸ்டமும் உள்ளன. இவை தவிர இந்த வண்டி எங்கே செல்கிறது என்பதை காட்டுவதற்கான ஜி.பி.எஸ் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நவீன சைக்கிளை ஓட்டுவதற்கு லைசன்ஸ் தேவையில்லை. எவ்விதத்திலும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத இந்த சைக்கிளைப் பற்றிய பரபரப்பான பேச்சு காயல்பட்டினம் பகுதியில் உலவி வருகிறது.

    இது பற்றி சுல்தான் அப்துல்காதர் பயின்று வரும் பள்ளியின் தலைமை ஆசிரியரான அப்துல்காதர் கூறியதாவது:-

    எங்கள் மாணவன் சுல்தான் அப்துல்காதரின் இந்த சாதனையை கண்டு வியந்தோம். பள்ளியின் நிர்வாகிகளான வாவு மஸ்னவி, வாவு நெய்னா ஆகியோர் இந்த முயற்சிக்கு பாராட்டுதலை தெரிவித்ததோடு, இந்த 'சைக்கிள் மொபட்' வாகனத்தை இன்னும் மேம்படுத்த என்னென்ன உபகரணங்கள் தேவையோ அவற்றை எல்லாம் வாங்கித் தந்து உதவுவதாக கூறியுள்ளனர். மாணவனின் தேர்வு காலம் முடிந்த பிறகு கூடுதலான சைக்கிள் மொபட்டுகளை தயாரிக்கலாமா என்பது பற்றியும் யோசித்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஆக ஒரு சாதாரண சைக்கிளை ரூ.10 ஆயிரம் செலவில் எளிய ரக மோட்டார் வாகனமாக மாற்றி காட்டி சாதனை புரிந்துள்ளார் பள்ளி மாணவரான சுல்தான் அப்துல்காதர். இவரை காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்து முகம்மது உள்ளிட்ட பிரமுகர்கள் பாராட்டியுள்ளனர். காயல்பட்டினத்தில் அரசின் இலவச சைக்கிள்களை பெற்றுள்ள மாணவர்களுக்கும் இதுபோன்று தங்கள் சைக்கிளையும் மதிப்பு கூட்டி மொபட் போல் மாற்றி அதில் பயணிக்கும் ஆசை பெருகி வருகிறது. தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளின் அதிகாரிகள் இந்த மாணவனின் சாதனை முயற்சியை பாராட்டி ஊக்குவிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

    • சம்பவத்தன்று முருகேஷ், ஓலப்பாளையம் பொன்பரப்பி பிரிவு அருகே தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
    • வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அடுத்த முத்தூர் அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேஷ் (வயது 66). சம்பவத்தன்று முருகேஷ், ஓலப்பாளையம் பொன்பரப்பி பிரிவு அருகே தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, முருகேஷ் சென்று கொண்டிருந்த மொபட் மீது மோதியதாக தெரிகிறது.

    இதில் மொபட்டில் இருந்து பலத்த காயத்துடன் முருகேஷ் கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை அங்கிருந்து மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முருகேஷ் நேற்று (திங்கட்கிழமை) காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மொபட்டில் சென்ற முதியவர் பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள வாவிடமருதூர் மேலத் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது74). இவர் புது நத்தம் ரோட்டில் பாலத்தின் கீழே மொபெட்டில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சாலை யோரத்தில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அந்த காரின் அருகே மொபட் வந்தபோது டிரைவர் சிக்னல் எதுவும் செய்யாமல் திடீரென கதவை திறந்தார். இதனால் மொபட் எதிர் பாராத விதமாக கார் கதவு மீது மோதியது. இதனால் முருகன் நிலைதடுமாறி சாலையில் விழுந்தார்.

    அப்போது பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த மற்றொரு கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் படுகாயமடைந்த முருகனை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை க்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து முருகனின் மகன் செந்தில் குமார் போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்தார். போலீசார் நின்றிருந்த கார் டிரைவர் உத்தங்குடி லேக் ஏரியாவை சேர்ந்த சுதர்சன் (43), மற்றொரு கார் டிரைவர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குப்புசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    வெள்ளகோவில் :

    மூலனூர் அருகே உள்ள கிழாங்குண்டல் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி (வயது 70) என்பவர் நேற்று வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகில் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மொபட் மோதிவிட்டது.

    இதனால் குப்புசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் குப்புசாமியை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே குப்புசாமி இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • உடலில் ஊற்றும் தண்ணீர் அருகில் நின்றிருந்த வாகன ஓட்டிகள் மீது விழும்படியாக குளித்து கொண்டிருந்தார்.
    • ஈரோடு போக்குவரத்து போலீசார் வாலிபர் பார்த்திபன் மீது ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது, விதிகளை மீறியது உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகரில் முக்கிய இடங்களில் ஒன்றாக பன்னீர்செல்வம் பார்க் சந்திப்பு உள்ளது. இங்கு காந்திஜி சாலை, மீனாட்சி சுந்தரனார் சாலை, கச்சேரி வீதி சாலை, நேதாஜி சாலை, திருவேங்கட வீதி சாலை ஆகிய 5 சாலைகள் இணைகிறது. இதில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம் மற்றும் ஜவுளிச்சந்தை, வணிக வளாகங்கள் இயங்கி வருவதால் எப்போதும் இங்கு மக்கள் நடமாட்டமும், வாகன போக்கு வரத்தும் இருந்து கொண்டே இருக்கும்.

    இந்நிலையில் நேற்று மதியம் வாகன போக்குவரத்து அதிகம் இருந்த நேரத்தில் மீனாட்சி சுந்தரனார் சாலையில் இருந்து மொபட்டில் வந்த வாலிபர் ஒருவர் சிக்னலில் வந்து நின்றார். பின்னர் மொபட்டில் கால் வைக்கும் இடத்தில் இருந்த தண்ணீர் நிரம்பிய பிளாஸ்டிக் டப்பில் இருந்து மக்கில் இருந்து தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றி குளிக்க தொடங்கினார். இதனை அவரை பின்தொடர்ந்து வந்த அவரது நண்பர்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். சிக்னல் விழுந்தும் செல்லாமல் தொடர்ந்து குளித்து கொண்டிருந்தார்.

    அவர் உடலில் ஊற்றும் தண்ணீர் அருகில் நின்றிருந்த வாகன ஓட்டிகள் மீது விழும்படியாக குளித்து கொண்டிருந்தார். பின்னர் அந்த வாலிபரை அங்கிருந்தவர்கள் எச்சரிக்க அவர் அங்கிருந்து சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

    இதுகுறித்து அவரது நண்பர்களிடம் கேட்டபோது, நடுரோட்டில் குளித்த வாலிபர் சென்னிமலை அருகே உள்ள வெள்ளோட்டைச் சேர்ந்த பார்த்திபன் (26) என்று தெரிய வந்தது. மேலும் இவர் இன்ஸ்டாகிரம் மூலம் அவரை பின்தொடர்பவர்கள் அளிக்கும் சவால்களை ஏற்று அதை நிறைவேற்றி வந்து உள்ளார். அதன்படி ஒருவர் 10 ரூபாய் தருகிறேன். நடுரோட்டில் குளிக்கும் படி சவால் விட்டிருந்தார். அந்த சவாலை ஏற்று பார்த்திபன் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் நடுரோட்டில் குளித்து, சவாலுக்கான ரூ.10-ஐயும் பெற்றார். பார்த்திபன் ஏற்கனவே இரவு நேரத்தில் நடுரோட்டில் தூங்குவது, பச்சை மீன்களை சாப்பிடுவது, இரவில் கிணற்றில் குளிப்பது உள்ளிட்ட பல்வேறு சவால்களை செய்துள்ளார் என்று தெரிய வந்தது. நடுரோட்டில் வாலிபர் குளிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியானது.

    இது குறித்து ஈரோடு போலீசாரும் விசாரணை நடத்தினர். இதையடுத்து நடுரோட்டில் குளித்த வாலிபர் பார்த்திபனை விசாரணைக்கு அழைத்து வந்தனர்.

    ஈரோடு போக்குவரத்து போலீசார் வாலிபர் பார்த்திபன் மீது ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது, விதிகளை மீறியது உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் குற்றப்பிரிவு போலீசாரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மொபட் ஓட்டிய பெண்ணிடம் 15 பவுன் நகை பறிக்கப்பட்டது.
    • நகை பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கே.கே.நகர் மானகிரி 5-வது தெருவை சேர்ந்த மணிகண்டன் மனைவி மகாலட்சுமி (வயது37). இவர் மொபட்டில் அண்ணாநகர் செல்வ விநாயகர் கோவில் தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் 2 வாலிபர்கள் இருந்தனர்.

    அவர்கள் மகாலட்சுமி அணிந்திருந்த 15 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • வாலிபரும், பெண்ணும் நடுரோட்டில் ஸ்கூட்டியில் அமர்ந்து குளிப்பதை காண முடிந்தது.
    • தானே நகர போலீசாரும் சம்பந்தப்பட்ட வாலிபர் மீதும், அந்த பெண் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக பதில் அளித்துள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் உலாஸ் நகரில் நடைபெற்ற வினோதமான சம்பவத்தில் ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் நடுரோட்டில் ஸ்கூட்டியில் குளித்து கொண்டு செல்வது போன்று ஒரு வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    டுவிட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோ தானே நகரத்தில் உள்ள உல்காஸ் நகரின் 17-வது பிரிவு பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. அதில் வாலிபரும், பெண்ணும் நடுரோட்டில் ஸ்கூட்டியில் அமர்ந்து குளிப்பதை காண முடிந்தது.

    அந்த பெண் தன் முன்னால் ஒரு வாளியை வைத்திருந்தார். மற்ற பயணிகள் பார்த்து கொண்டிருக்கும் போது அந்த ஆண் மீதும், தன் மீதும் அந்த பெண் தண்ணீரை ஊற்றி குளிப்பது போன்று காட்சிகள் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கடும் கண்டனம் விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்கிடையே வீடியோ வைரலானதால் தானே நகர போலீசாரும் சம்பந்தப்பட்ட வாலிபர் மீதும், அந்த பெண் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக பதில் அளித்துள்ளனர்.

    • அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக ஸ்கூட்டரை எடுக்கச்சென்றார்.
    • சென்ற மாதத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையைச் சேர்ந்த அங்கன்வாடி பெண் ஊழியர் அவருக்குச் சொந்தமான ஸ்கூட்டர் வாகனத்தில் மேற்குப் பல்லடம் பகுதியில் உள்ள வட்டார ஊட்டச்சத்து மைய அலுவலகத்திற்கு நேற்று மதியம் வந்தார். ஸ்கூட்டர் வாகனத்தை அலுவலகத்திற்கு முன் எதிரே உள்ள இடத்தில் நிறுத்தி விட்டு சுமார் 2 மணி நேரம் அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக ஸ்கூட்டரை எடுக்கச்சென்றார்.

    அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கும் இங்கும் தேடிப் பார்த்தும் ஸ்கூட்டர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். பல்லடம் பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டுப் போவதால் பொதுமக்கள் ஒருவித அச்சத்தில் உள்ளனர். சென்ற மாதத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே போலீசார் இருசக்கர வாகன திருடர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • ஆழ்வார்குறிச்சி சேர்ந்தவர் முகமது வைசாலி தனது சகோதரர் செய்யது என்பவருடன் மொபட்டில் வந்துள்ளார்.
    • கருத்தப்பிள்ளையூர் சாலையில் மொபட்டை ஓட்டி வந்தபோது கனமழை பெய்துள்ளது.

    நெல்லை:

    ஆழ்வார்குறிச்சி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முகமது பரூக். இவரது மனைவி முகமது வைசாலி(வயது 33). இவர் கடந்த 2-ந்தேதி தனது சகோதரர் செய்யது என்பவருடன் மொபட்டில் வந்துள்ளார்.

    கருத்தப்பிள்ளையூர் சாலையில் முகமது வைசாலி மொபட்டை ஓட்டி வந்தபோது கனமழை பெய்துள்ளது. அப்போது சாலை பள்ளத்தில் சறுக்கி மொபட் சாலையோரம் நின்ற மரத்தில் மோதியது. இதில் வைசாலியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    தகவல் அறிந்த ஆழ்வார்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வைசாலியை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

    • திருச்சியில் ஸ்டேஷனரி கடையில் திருட வந்த வாலிபர், உரிமையாளர் வந்துவிட்டதால் மொபட்ைட விட்டு விட்டு தப்பிச்சென்றார்
    • வாசுதேவன் கோட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி:

    திருச்சி சங்கரன் பிள்ளை சாலை பகுதியில் வசித்து வருபவர் வாசுதேவன் (வயது 52). இவர ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார். கடந்த 29-ந்தேதி இரவு வாசுதேவன் கடையை பூட்டிவிட்டு அருகாமையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

    பின்னர் பூட்டிய கடைக்குள் விளக்கு எரிவதை பார்த்த வாசுதேவன் உடனடியாக கடைக்கு திரும்பினார்.

    அப்போது கடைக்குள் திருடன் இருப்பதை கண்டு திடுக்கிட்டார். பின்னர் அவர் திருடன்..., திருடன்... என கூச்சல் போட்டார்.

    உடனே கொள்ளையன் கடையில் இருந்த செல்போன் மற்றும் ரூ.9800 ரொக்க பணம் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றார்.

    கடை உரிமையாளர் வந்துவிட்டதால் தான் ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தை போட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

    இதுகுறித்து வாசுதேவன் கோட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் நிறுவன பஸ் ஒன்று பணியாட்களை அழைத்துக் கொண்டு கே.ஒ.என்.தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே வந்தது.
    • எதிர்பாராதவிதமாக இந்த பஸ் மொபட் மீது மோதியதில் மொபட்டில் வந்த 3 பேரும் கீழே விழுந்து காயமடைந்தனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பள்ளிப்பாளையம் சாலை, குமரன் மருத்துவமனை பின்புறம் வசிப்பவர் கலைமணி(வயது 34.). இவர் தனது குழந்தைகள் ரினிதாஸ்ரீ,( 6,) சிவஸ்ரீ, (3,) ஆகிய இருவரையும் மொபட்டில் பள்ளியில் விடுவதற்காக அழைத்து சென்றார். அப்போது தனியார் நிறுவன பஸ் ஒன்று பணியாட்களை அழைத்துக் கொண்டு கே.ஒ.என்.தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே வந்தது.

    எதிர்பாராதவிதமாக இந்த பஸ் மொபட் மீது மோதியதில் மொபட்டில் வந்த 3 பேரும் கீழே விழுந்து காயமடைந்தனர். அவர்கள் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து குமாரபா ளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்.சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.குமாரபாளையம் அருகே நேரு நகரில் வசிப்பவர் அஜித் குமார்(வயது 19.) கட்டுமான கூலி தொழிலாளி. இவர் தன் அண்ணனின் மொபட்டில் சேலம்-கோவை புறவழிச்சாலையில் நேரு நகர் பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது சேலம் பக்கமிருந்து வேகமாக வந்த கார், மொபட் மீது மோதியதில் அஜித்குமார் படுகாயமடைந்தார்.

    குமாரபாளையம் போலீசார் விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் கோவையை சேர்ந்த தீயணைப்பு படை வீரர் கணேஷ்பாபு, (36,) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மலர்விழி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இவ்விபத்தில் கணேஷ்பாபுவிற்கும் காயமேற்பட்டதால் இவர் ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பி கணவன்-மனைவி லாரி மோதியது விபத்தில் பெண் பலியானார்.
    • இது குறித்து கோபி செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அடுத்த கரட்டடிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி ராஜேஸ்வரி (57). இவர்களுக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சண்முகம் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று ராஜேஸ்வரிக்கு உடல் நலம் சரியில்லாததால் அவரை மருத்துவமனைக்கு கணவர் சண்முகம் தனது மொபட்டில் அழைத்து சென்றார். மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று கணவன்-மனைவி இருவரும் மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.

    சாந்தி தியேட்டர் பிரிவு அருகே ஈரோடு-சத்தி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக சண்முகம் மொபட் மீது மோதியது. இதில் சண்முகம், ராஜேஸ்வரி இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

    அப்ேபாது அந்த வழியாக சென்றவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கணவன்-மனைவி இருவரையும் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் கோவை அரசு மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி பரிதாபமாக இறந்தார். சண்முகம் தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து கோபி செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×