ஆழ்வார்குறிச்சி அருகே மொபட் மரத்தில் மோதி பெண் பலி

ஆழ்வார்குறிச்சி சேர்ந்தவர் முகமது வைசாலி தனது சகோதரர் செய்யது என்பவருடன் மொபட்டில் வந்துள்ளார். கருத்தப்பிள்ளையூர் சாலையில் மொபட்டை ஓட்டி வந்தபோது கனமழை பெய்துள்ளது.
ஆழ்வார்குறிச்சி அருகே மொபட் மரத்தில் மோதி பெண் பலி
Published on

நெல்லை:

ஆழ்வார்குறிச்சி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முகமது பரூக். இவரது மனைவி முகமது வைசாலி(வயது 33). இவர் கடந்த 2-ந்தேதி தனது சகோதரர் செய்யது என்பவருடன் மொபட்டில் வந்துள்ளார்.

கருத்தப்பிள்ளையூர் சாலையில் முகமது வைசாலி மொபட்டை ஓட்டி வந்தபோது கனமழை பெய்துள்ளது. அப்போது சாலை பள்ளத்தில் சறுக்கி மொபட் சாலையோரம் நின்ற மரத்தில் மோதியது. இதில் வைசாலியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்த ஆழ்வார்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வைசாலியை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

X

Maalai Malar
www.maalaimalar.com