அங்கன்வாடி ஊழியரின் மொபட் திருட்டு

அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக ஸ்கூட்டரை எடுக்கச்சென்றார்.சென்ற மாதத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையைச் சேர்ந்த அங்கன்வாடி பெண் ஊழியர் அவருக்குச் சொந்தமான ஸ்கூட்டர் வாகனத்தில் மேற்குப் பல்லடம் பகுதியில் உள்ள வட்டார ஊட்டச்சத்து மைய அலுவலகத்திற்கு நேற்று மதியம் வந்தார். ஸ்கூட்டர் வாகனத்தை அலுவலகத்திற்கு முன் எதிரே உள்ள இடத்தில் நிறுத்தி விட்டு சுமார் 2 மணி நேரம் அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக ஸ்கூட்டரை எடுக்கச்சென்றார்.

அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கும் இங்கும் தேடிப் பார்த்தும் ஸ்கூட்டர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். பல்லடம் பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டுப் போவதால் பொதுமக்கள் ஒருவித அச்சத்தில் உள்ளனர். சென்ற மாதத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே போலீசார் இருசக்கர வாகன திருடர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com