search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thenthiruperai"

    • ஏரல் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் கைலாச குமாரசாமி, டாஸ்மாக் தாசில்தார் செல்வகுமார் மற்றும் ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலையில் சமாதான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் குரங்கணி கோவில் திருவிழா நடைபெறும் 11, 12 ஆகிய இரண்டு நாட்கள் தற்காலிகமாக மூடுவது என்றும், பின்னர் 3 மாத காலத்திற்குள் நிரந்தரமாக மூட ஏற்பாடு செய்யப்படும் என தீர்வு மேற்கொள்ளபட்டது.

    தென்திருப்பேரை:

    தென்திருப்பேரை மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை மூட கோரி உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற இருந்தது. மறியல் போராட்டத்திற்காக நேற்று ஏரல் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் கைலாச குமாரசாமி, டாஸ்மாக் தாசில்தார் செல்வகுமார் மற்றும் ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலையில் சமாதான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் குரங்கணி கோவில் திருவிழா நடைபெறும் 11, 12 ஆகிய இரண்டு நாட்கள் தற்காலிகமாக மூடுவது என்றும், பின்னர் 3 மாத காலத்திற்குள் நிரந்தரமாக மூட ஏற்பாடு செய்யப்படும் என தீர்வு மேற்கொள்ளபட்டதை தொடர்ந்து மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    கூட்டத்தில் பா.ஜ.க. சார்பில் மாவட்ட பொது செயலாளர்கள் ராஜா, சத்தியசீலன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் செல்வகுமார், ஆழ்வை கிழக்கு மண்டல் தலைவர் குமரேசன், மாவட்ட செயலாளர் கனல் ஆறுமுகம் , செய்தி மற்றும் ஊடக பிரிவு தலைவர் முத்து ராமலிங்கம், மாநில கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் மாரிதுரைசாமி, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் லோபோ, உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் வேல்குமார், திருச்செந்தூர் நகரதலைவர் நவமணிகண்டன், ஏரல் ஓன்றிய பொது செயலாளர் ராஜ்குமார், மாவட்ட அரசு தொடர்புதுறை தலைவர் வெங்கடேஷ், அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவு மாவட்ட செயலாளர் முத்துமாலை, ஆழ்வை கிழக்கு மண்டல் கூட்டுறவு பிரிவு தலைவர் ஜெயசிங், பிரசார பிரிவு தலைவர் ஆட்டோ சுப்பிரமணியன், அரசு தொடர்பு துறை தலைவர் பிச்சமுத்து, செயற்குழு உறுப்பினர் ஜெயலெட்சுமி, ஏரல் வணிகர் பிரிவு தலைவர் விஜயராகவன், ஏரல் சிறுபான்மைபிரிவு தலைவர் ஜெனிஷ்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காலை 6 மணிக்கு விஸ்வரூபம், 6.30 மணிக்கு திருமஞ்சனம்,7 மணிக்கு தீபாராதனை, 7.30 மணிக்கு நித்தியல் கோஷ்டி நடந்தது.
    • மூலவர் பிரகாரத்தில் உற்சவர் கள்ளப்பிரான் நடை பாவாடை விரிக்கப்பட்டு கைத்தலத்தில் கர்ப்ப கிரகத்திற்குள் எழுந்தருளினார்.

    தென்திருப்பேரை:

    நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியான ஸ்ரீவை குண்டம் கள்ளப் பிரான் கோவிலில் நேற்று சேஷ்டாபிஷேகம் நடந்தது. ஆண்டுதோறும் ஆனி மாதம் கேட்டை நட்சத்திர நாளன்று உற்சவர் கள்ளப்பிரான் சுவாமியின் கவசங்கள் படிகளையப் பெற்று பொற்கொல்லர் களால் அற நிலையத் துறையின் துணை ஆணையர் (சரிபார்ப்பு) அதிகாரிகள் முன்னிலையில் சுத்தப்படுத்தும் பணி நடைபெறும். காலை 6 மணிக்கு விஸ்வரூபம், 6.30 மணிக்கு திருமஞ்சனம்,7 மணிக்கு தீபாராதனை, 7.30 மணிக்கு நித்தியல் கோஷ்டி நடந்தது. 9 மணிக்கு உற்சவரின் கவசங்கள் படி களையப் பெற்று அதிகாரிகள் மற்றும் ஸ்தலத்தார்கள் முன்பு சுத்தப்படுத்தும் பணி நடை பெற்றது. பின்னர் அர்ச்சகர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. மாலை 6.30 மணிக்கு கவசங்கள் சாத்தப்பட்டது. மூலவர் பிரகாரத்தில் உற்சவர் கள்ளப்பிரான் நடை பாவாடை விரிக்கப்பட்டு கைத்தலத்தில் கர்ப்ப கிரகத்திற்குள் எழுந்தரு ளினார். தீர்த்தம், சடாரி பிரசாதம் பக்தர் களுக்கு வழங்கப்பட்டது.

    இதேபோல் நவதிருப்பதி கோவிலில் ஆழ்வார்திருநகரி கோவிலிலும் நடந்தது. இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரமேஷ், வாசு நாராயணன், ராமானுஜம், சீனு ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி, சீனிவாசன், தேவராஜன், கண்ணன், திருவேங்கடத்தான், ஸ்ரீவேங்கட கிருஷ்ணன் வெங்கட்டநாராயன், வெங்கடேசன், கோவிந்த ராஜன், கண்ணன், நிர்வாக அதிகாரி கோவல மணி கண்டன், தக்கார் அஜித், ஆய்வாளர் நம்பி உட்பட பக்தர்கள் கலந்து கொண்ட னர்.

    • கடம்பாகுளம் , சீரமைப்பு பணிகளில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், அதனை தடுத்திட கோரியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மள்ளர் பேராயம் தலைவர் சுபாஷினி மள்ளத்தி கண்டன உரையாற்றினார்.

    தென்திருப்பேரை:

    தென்திருப்பேரை பஸ் நிலையம் அருகே மள்ளர் பேராயம் சார்பில் கடம்பாகுளம் மராமத்து - சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்திட வலியுறுத்தியும், சீரமைப்பு பணிகளில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் அதனை தடுத்திட கோரியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வக்கீல் சரவணன் தலைமை தாங்கினார். மோசஸ் பாண்டியன், சுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரபாகரன் வரவேற்று பேசினார். இதில் கடம்பாகுளம் ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்க தலைவர் உத்திரம், தலைமை ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மள்ளர் பேராயம் தலைவர் சுபாஷினி மள்ளத்தி கண்டன உரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தெற்கு மாவட்ட இளைஞரனி செயலாளர் யேசுதாஸ், மனித நேய மக்கள் ஜனநாயக கட்சி ஜெயசீலன், கருங்குளம் ஒன்றிய மள்ளர் பேராய செயலாளர் பொன்மயில் மற்றும் சமூக ஆர்வலர்கள், ஆத்தூர் கீரனூர் விவசாய பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆழ்வை ஒன்றிய மள்ளர் பேராய செயலாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.

    • தினமும் திருப்பாவை நான்காவது பாசுரம் ஆழி மழைக் கண்ணா பாடலை பாடி பிரார்த்தனை செய்தால் மழை பெய்யும் என்பது ஐதீகம்.
    • பெண்கள் உட்பட பக்தர்கள் கூட்டாகச் சேர்ந்து 1008 தடவை பாடி பிரார்த்தனை செய்தனர்.

    தென்திருப்பேரை:

    நவதிருப்பதி தலங்களில் ஒன்றான ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் மழை வேண்டி பொதுமக்கள் பிரார்த்தனை செய்தனர். தினமும் திருப்பாவை நான்காவது பாசுரம் ஆழி மழைக் கண்ணா பாடலை பாடி பிரார்த்தனை செய்தால் மழை பெய்யும் என்பது ஐதீகம். இதன்படி 7 நாட்கள் பொதுமக்கள் பிரார்த்தனை செய்திட வேண்டும் என முடிவு செய்தனர். அதன்பின் காலை 11 மணிக்கு சோரநாத நாயகி தாயார் சன்னதியில் அர்ச்சகர்கள் ரமேஷ், நாராயணன், வைகுண்டநாதன், ராமானுஜம், சீனு ஆகியோர் அர்ச்சனை செய்து கற்பூர ஆர்த்தியுடன் பாசுரத்தை ஆரம்பிக்க ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி மற்றும் பெண்கள் உட்பட பக்தர்கள் கூட்டாகச் சேர்ந்து 1008 தடவை பாடி பிரார்த்தனை செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், தக்கார் அஜித், ஆய்வாளர் நம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் கொடைவிழா ஆண்டு தோறும் ஆனி மாதம் கடைசி செவ்வாய்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • கொடை விழாவை முன்னிட்டு ஜூலை 9-ந் தேதி நாதஸ்வர கச்சேரி, பஜனை குழுவினர் பக்தி பாடல் நிகழ்ச்சியும், நவீன வில்லிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் கொடைவிழா ஆண்டு தோறும் ஆனி மாதம் கடைசி செவ்வாய்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு கோவிலின் கொடை விழா வருகிற ஜூலை மாதம் 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

    கால்நாட்டு விழா

    அதையொட்டி நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு நித்திய கால பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்பு கால்நாட்டு விழாவை முன்னிட்டு மதியம் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் விநாயகர், அம்மன், நாராயணர், பெரியசாமி மற்றும் பரிவார மூர்த்தி களுக்கும் புஷ்ப அலங்காரம், தீபாராதனை, அதைத்தொடர்ந்து பெரியசாமி சன்னதிக்கு மேற்புறம் உள்ள முப்பிடாதி அம்மன் கோவில் முன்பு மஞ்சள், குங்குமம், சந்தனம், மாவிலை, புஷ்ப அலங்காரத்துடன் கூடிய 'கால்நாட்டு' விழா நடைபெற்றது.

    அதை தொடர்ந்து திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்திருந்து அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கொடைவிழா தொடங்கியதை முன்னிட்டு பக்தர்கள் நேற்று முதல் விரதத்தை தொடங்கினார்கள்.

    நிகழ்ச்சி நிரல்

    கொடை விழாவை முன்னிட்டு ஜூலை 9-ந் தேதி நாதஸ்வர கச்சேரி, பஜனை குழுவினர் பக்தி பாடல் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து நவீன வில்லிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 10-ந் தேதி மாலை 4 மணிக்கு தேவஸ்தான வித்வான் மங்கள இசை, அதை தொடர்ந்து கம்ப ராமாயணத்தில் தமிழ் பண்பாடு நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு மாபெரும் பட்டி மன்றமும், இரவு 7 மணிக்கு ஸ்டார் நைட் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 11-ந் தேதி காலை நாதஸ்வர கச்சேரி, ஆன்மீக சொற்பொழிவு, மாலை 4 மணிக்கு மாபெரும் பட்டி மன்றம், மாலை 6.30 மணிக்கு பரத நாட்டிய நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு மெல்லிசை கச்சேரி நடைபெறுகிறது.

    நண்பகல் 1 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜையும், இரவு 1 மணிக்கு ஆனி பெருந்திருவிழாவும் (கொடைவிழா) நடைபெறும். இரவு 8 மணிக்கு கயிறு சுற்றி ஆடுதல், 10 மணிக்கு மாவிளக்கு பெட்டி எடுத்து வருதல் நிகழ்ச்சியும், 1 மணிக்கு நாராயண சுவாமி சின்ன சப்பரத்திலும், இரவு 2 மணிக்கு நாராயண சுவாமி பெரிய சப்பரத்திலும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 18-ந் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    கால்நாட்டு விழாவில் செல்வராஜ், ஜெகதீசன், முத்துமாலை, ராஜேந்திரன், சப்தசாகரன், ஜெயசங்கர், சந்திரசேகரன், குணசேகரன், ஈஸ்வரன், ரவி, பெரியசாமி, ராகவன், கேசவமூர்த்தி, சிவசுப்பிரமணியன், ஶ்ரீதர், அர்ஜூன் பாலாஜி, தங்கராஜ், முத்துக்குமார், முத்து லிங்கம், கார்த்திகேயன், ஜெயபிரகாஷ், ஊராட்சி தலைவர் ஜெய முருகன், முத்து கிருஷ்ணன் மற்றும் 60 பங்கு நாடார்கள், ஊர் பொதுமக்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    விழா எற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கிருஷ்ண மூர்த்தி, தக்கார் ராமசுப்பிரமணியன் மற்றும் குரங்கணி 60 பங்கு நாடார்கள், சென்னை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தினர், கோவை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தினர் ஆகியோர் செய்துள்ளனர்.

    • ஆதிநாதபுரம் ஊராட்சியில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு சுமார் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டது.
    • நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவி தொகை க்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    தென்திருப்பேரை:

    முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம் பாட்டு திட்டம் 2022-23 திட்டத்தின் கீழ் கேம்பலாபாத்தில் ரூ.38.14 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினை ஸ்ரீவை குண்டம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தொடங்கி வைத்தார். மேலும் தேமாங்குளம் ஊராட்சி மானாட்டூரில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது. ஆதிநாதபுரம் ஊராட்சியில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு சுமார் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவி தொகை க்கான விண்ணப்பங்களும், நெல்லை- திருச்செந்தூர் மெயின் ரோட்டில் பால்குளம் பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் பெற்று கொண்டு ஆவன செய்து கொடுப்பதாக கூறினார்.

    நிகழ்ச்சியில் ஏரல் தாசில்தார் கைலாச குமார சாமி, ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர், ஆழ்வார்திருநகரி வட்டார காங்கிரஸ் தலைவர் கோதண்டராமன், ஶ்ரீவைகுண்டம் வட்டார தலைவர் நல்லகண்ணு, வட்டார செயலாளர் மோகன் ராஜ், தெற்கு மாவட்ட துணைத்தலைவர் இசை சங்கர், மாவட்ட பொருளாளர் எடிசன், மாவட்ட பொதுச் செயலாளர் அலங்கார பாண்டியன், மாவட்ட இளைஞரணி ஜெயசீலன், மாநில பொதுக்குழு உறுப்பினர் தாசன், கேமலாபாத் பஞ்சாயத்து தலைவர் சபிதா ஷர்மிளா, துணைத்தலைவரும், ஆழ்வை மத்திய ஒன்றிய தி.மு.க. பொருளாளருமான ஹாஜா உதுமான், ஆழ்வை மத்திய ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் அசாருதீன், கிளை பிரதிநிதி சிந்தா பகர்தீன், ஜமாத் தலைவர் அப்துல் காதர், காண்டிராக்டர் சைமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கோவில் கொடைவிழவையொட்டி பால்குடம், கணபதி ஹோமம், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், மஹா நெய்வேத்தியத்துடன் தீப ஆராதனையும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது.
    • விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார்திருநகரி குண்டுத்தெருவில் உள்ள ஈசான உச்சினிமாகாளி அம்மன் கோவிலில் நேற்று கொடை விழா நடைபெற்றது.

    காலையில் பால்குடம், கணபதி ஹோமம், யாக பூஜை மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், புஷ்ப அலங்காரம் மற்றும் மஹா நெய்வேத்தியத்துடன் தீப ஆராதனையும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

    • கடம்பா குளத்தில் நடைபெறுகிற மராமத்து வேலைகள் குறித்து நிதி மதிப்பீடு, நடைபெறும் வேலைகள் பற்றி குளத்தில் கரையில் போர்டு வைக்க வேண்டும்.
    • விவசாயத்திற்கு குளத்தில் இருந்து கரம்பை மண், வண்டல் மண் விவசாயிகள் எடுத்து கொள்வதை வருவாய் துறையின் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும்.

    தென்திருப்பேரை:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஆழ்வை ஒன்றிய குழு கூட்டம் தென்திருப்பேரை கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. ஆழ்வை ஒன்றிய தலைவர் பூலான் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணைத் தலைவர் சீனிவாசன் கலந்து கொண்டார்.

    100 ஏக்கர்

    கூட்டத்தில் ஆழ்வை ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், துணைச் செயலாளர் செந்தூரப்பாண்டி, ஆறுமுகநயனார், துணைத் தலைவர் முத்துகிருஷ்ணன், மேகநாதன், அண்ணாமலை, முருகபெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    100 ஏக்கருக்கு கீழே அரசுக்கு நிலம் எடுக்கும் போது நீர் நிலைகள் இருந்தாலும் அந்த நிலத்தை எடுக்கலாம் என்று தமிழக அரசு கொண்டு வந்ததை நிறுத்தி விவசாயம் பாதுகாக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. ரேசன் கடைகளில் செறியூட்டப்பட்ட அரிசி வழங்குவது என்ற மத்திய அரசின் முடிவை விலக்கிக் கொள்ள வேண்டும்.

    மராமத்து வேலைகள்

    கடம்பா குளத்தில் நடைபெறுகிற மராமத்து வேலைகள் குறித்து நிதி மதிப்பீடு, நடைபெறும் வேலைகள் பற்றி குளத்தில் கரையில் போர்டு வைக்க வேண்டும். கடம்பா குளத்தில் வெள்ளப்பெருக்கு காலத்தில் உபரி நீர் வெளியேறும் கால்வாயிலுள்ள 4 ஷட்டர்களும் உபரிநீர் வெளியேற மழைக்காலத்தில் மட்டும் திறக்க வேண்டும்.

    விவசாயத்திற்கு குளத்தில் இருந்து கரம்பை மண், வண்டல் மண் விவசாயிகள் எடுத்து கொள்வதை வருவாய் துறையின் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும். நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் அரசு பஸ்கள் மணத்தி, புறையூர், அங்கமங்கலம், ஆதிநாதபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் செந்தூர்பாண்டி நன்றி கூறினார்.

    • சிறப்பு விருந்தினராக ஆழ்வை வட்டார வளர்ச்சி அதிகாரி நாகராஜன் கலந்து கொண்டு திருவள்ளுவர் படத்தினை திறந்து வைத்து வள்ளுவம் பற்றி எடுத்துரைத்தார்.
    • டி.எல். அறக்கட்டளை காப்பாளர் பூபதி கல்விக்காக அறக்கட்டளை வழங்கும் நன்மைகள் பற்றி எடுத்துரைத்து மாணவர்கள் அதனை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொண்டார்.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் குருகாட்டூர் ஊராட்சியில் டி.எல். அறக்கட்டளை சார்பில் திருவள்ளுவர் உருவப்படம் திறப்புவிழா, நூலகத்திற்கு நூல்கள் வழங்கும் விழா, காலஞ்சென்ற முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்களின் படத்திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் ஜன்னத் புஷ்பராணி தலைமை தாங்கினார். உலக திருக்குறள் ஆய்வு மூதறிஞர் குழு இயக்குநர் திருக்குறள் ஜேம்ஸ்ராஜா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக ஆழ்வை வட்டார வளர்ச்சி அதிகாரி நாகராஜன் கலந்து கொண்டு திருவள்ளுவர் படத்தினை திறந்து வைத்து வள்ளுவம் பற்றி எடுத்துரைத்தார். டி.எல். அறக்கட்டளை காப்பாளர் பூபதி கல்விக்காக அறக்கட்டளை வழங்கும் நன்மைகள் பற்றி எடுத்துரைத்து மாணவர்கள். அதனை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டார். விழாவில் தாமிரபரணி இலக்கிய மன்றத் தலைவர் பிரிட்டோ அலெக்சாண்டர், மக்கள் செயற்பாட்டாளர் மாரிதுரைசாமி, ஒன்றிய கவுன்சிலர் தானி ராஜ் குமார், தலைமை ஆசிரியர்கள் நெல்சன், வயலோலா புஷ்பலதா, ஞானசுந்தரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்கள். நிகழ்ச்சிகளை ஊராட்சி துணத்தலைவர் ராஜ்குமார் தொகுத்து வழங்கினார். ஊராட்சி செயலர் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார். விழாவில் ஏராளமான ஊர் பொதுமக்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

    தென்திருப்பேரை:

    முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு நெடுஞ்சாலை துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆழ்வார் திருநகரி - நாசரேத் - சாத்தான்குளம் நெடுஞ்சா லையில் நாவல், புங்கை, வேம்பு, புளியமரம் உட்பட சுமார் 2,500 மர கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் ஆழ்வார்தி ருநகரி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர் கலந்து கொண்டு மரகன்று களை நட்டு ஆரம்பித்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் திருச்செ ந்தூர் கோட்ட உதவி பொறி யாளர் விஜய சுரேஷ் குமார், உதவி பொறியாளர் சிபின், வரண்டி யவேல் பஞ்சாயத்த துணைத் தலைவர் அருண், சாலை ஆய்வாளர் பெத் ரமேஷ் மற்றும் நெடுஞ்சாலைதுறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தென்திருப்பேரையில் செயல்பட்டு வந்த கால்நடை மருத்துவமனை பழுதடைந்த நிலையில் இருந்தது.
    • இதனால் ரூ. 54 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டு இதற்கான அடிக்கல் நாட்டு விழா கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நடந்தது.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா தென்திருப் பேரையில் செயல்பட்டு வந்த கால்நடை மருத்துவ மனை பழு தடைந்த நிலையில் இருந்தது. இதனால் புதிய கட்டிடம் கட்ட ரூ. 54 லட்சம் மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப்பட்டு இதற்கான அடிக்கல் நாட்டு விழா கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணா சலம், மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர், தூத்துக்குடி மாவட்ட கால்நடை இணை இயக்குநர் (பொறுப்பு) ராதாகிருஷ்ணன், உதவி இயக்குனர் (கூடுதல் பொறுப்பு) ஆண்டனி சுரேஷ், உதவி இயக்குனர் ஜோசப் ராஜ், கால்நடை மருத்துவர்கள் சுரேஷ், செந்தில் கண்ணன், பிரதீப், ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன்குமார், மத்திய ஒன்றிய அவை தலைவர் மகரபூசனம், தென்திருப்பேரை பேரூ ராட்சி தலைவர் மணிமே கலை ஆனந்த், செயல் அலுவலர் ரமேஷ் பாபு, துணை தலைவர் அமிர்த வள்ளி, நகர செயலாளர் முத்துவீர பெருமாள், கவுன்சி லர்கள் ஆனந்த், சண்முக சுந்தரம், சீதா லட்சுமி, மாரியம்மாள், மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • ஏரல் தாலுகா குரங்கணியில் மக்கள் சந்திப்பு பேரியிக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் சித்ராங்கதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தென்திருப்பேரை:

    ஏரல் தாலுகா குரங்கணியில் மக்கள் சந்திப்பு பேரியிக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்திக்கு ஆழ்வை கிழக்கு பா.ஜ.க. மண்டல் தலைவர் குமரேசன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருக ஆதித்தன், மாவட்ட செயலாளர் கனல் ஆறுமுகம், மாநில கூட்டுறவு பிரிவு செயலாளர் மாரிதுரைசாமி, இளைஞரணி செயலாளர் பூபதிபாண்டியன், அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவுசெயலாளர் செயலாளர் கோமதிராஜ், மாவட்ட துணை தலைவர் ரேவதி, மண்டல் பொதுச் செயலாளர் முத்தையாதாஸ், பொருளாளர் சிவநேசன், துணைத் தலைவர்கள் குரங்கணி ராஜாராம், பாமா, இளைஞரணி தலைவர் ராஜதுரை, கூட்டுறவு பிரிவு தலைவர் ஜெயசிங், இளைஞரணி பொதுச்செயலாளர் கார்த்திக், கலைகலாச்சார பிரிவு தலைவர் ராஜா, அரசு தொடர்பு துறை தலைவர் பிச்சமுத்து, ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டு மாவட்ட துணை தலைவர் ராஜ்குமார், மாவட்ட மகளிரணி துணை தலைவர் ராஜேஸ்வரி, மாவட்ட நெசவாளர் பிரிவு செயலாளர் குமரேசன், சக்தி கேந்திர பொறுப்பாளர் காமினி, மண்டல் மகளிரணி தலைவர் ஆனந்தவல்லி, கூட்டுறவு பிரிவு துணை தலைவர் சபரிசங்கர், கிளை தலைவர்கள் முத்துலிங்கம், ராஜ கோபால், குரங்கணியை சேர்ந்த ராமசந்திரன், கணேசன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் குணசேகர் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×