search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "veterinary hospital"

    • உலக வெறி நாய் (ரேபிஸ்) தினத்தை முன்னிட்டு மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து இலவச வெறி நோய் (ரேபிஸ்) தடுப்பூசி முகாம் ஸ்ரீபுரம் கால்நடை பன்முக மருத்துவமனையில் இன்று நடைபெற்றது.
    • மாநகராட்சி சார்பில் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின்படி சுகாதார ஆய்வாளர் முருகன் மற்றும் பணியாளர்கள் முகாமில் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி ஆகியோர் உத்தரவின்பேரின் உலக வெறி நாய் (ரேபிஸ்) தினத்தை முன்னிட்டு மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து இலவச வெறி நோய் (ரேபிஸ்) தடுப்பூசி முகாம் ஸ்ரீபுரம் கால்நடை பன்முக மருத்துவமனையில் இன்று நடைபெற்றது.

    இதில் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் மருத்துவர் தியோபலஸ் ரோஜர், துணை இயக்குனர் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு பணிகள் டாக்டர்.ராஜேந்திரன், கால்நடை மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் மாநகராட்சி சார்பில் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின்படி சுகாதார ஆய்வாளர் முருகன் மற்றும் பணியாளர்கள் முகாமில் கலந்து கொண்டனர்.

    • கணேசன் வீட்டில் திடீரென ரத்த வாந்தி எடுத்தார்.
    • தனியார் மருத்துவமனைக்கு கணேசன் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த வரதம்பாளையம், தோப்பூர் காலனி, முதல் தெருவை சேர்ந்தவர் கணேசன் (43). இவரது மனைவி மலர்மணி (33). கணேசன் புங்கம் பள்ளியில் அரசு கால்நடை மருத்துவமனையில் ஊழி யராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் கணேசனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. குடிக்கு அடிமையாகி அடிக்கடி குடித்து விட்டு வந்துள்ளார். இதனால் உடல்நிலம் பாதிக்கப்பட்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் கடந்த சில மாதங்களாக கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் சம்ப வத்தன்று கணேசன் வீட்டில் திடீரென ரத்த வாந்தி எடுத்தார். உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கணேசன் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

    பின்னர் மேல் சிகிச்சை க்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கணேசன் இறந்து விட்டதாக தெரிவித்த னர்.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தென்திருப்பேரையில் செயல்பட்டு வந்த கால்நடை மருத்துவமனை பழுதடைந்த நிலையில் இருந்தது.
    • இதனால் ரூ. 54 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டு இதற்கான அடிக்கல் நாட்டு விழா கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நடந்தது.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா தென்திருப் பேரையில் செயல்பட்டு வந்த கால்நடை மருத்துவ மனை பழு தடைந்த நிலையில் இருந்தது. இதனால் புதிய கட்டிடம் கட்ட ரூ. 54 லட்சம் மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப்பட்டு இதற்கான அடிக்கல் நாட்டு விழா கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணா சலம், மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர், தூத்துக்குடி மாவட்ட கால்நடை இணை இயக்குநர் (பொறுப்பு) ராதாகிருஷ்ணன், உதவி இயக்குனர் (கூடுதல் பொறுப்பு) ஆண்டனி சுரேஷ், உதவி இயக்குனர் ஜோசப் ராஜ், கால்நடை மருத்துவர்கள் சுரேஷ், செந்தில் கண்ணன், பிரதீப், ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன்குமார், மத்திய ஒன்றிய அவை தலைவர் மகரபூசனம், தென்திருப்பேரை பேரூ ராட்சி தலைவர் மணிமே கலை ஆனந்த், செயல் அலுவலர் ரமேஷ் பாபு, துணை தலைவர் அமிர்த வள்ளி, நகர செயலாளர் முத்துவீர பெருமாள், கவுன்சி லர்கள் ஆனந்த், சண்முக சுந்தரம், சீதா லட்சுமி, மாரியம்மாள், மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • நாகலாபுரத்தில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.
    • 54 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டுமான பணிகள் நேற்று தொடங்கின.

    விளாத்திகுளம்:

    கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் ஊராட்சி ஒன்றியம் நாகலாபுரத்தில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நாகலாபுரத்தில் ரூ. 54 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டுமான பணிகள் நேற்று தொடங்கின. விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.

    இதில், கால்நடை மருத்துவர் அருண்குமார், புதூர் மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், ஊராட்சிமன்ற தலைவர் உலகம்மாள் முனியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தொடர்மழை காரணமாக, கால்நடைகளுக்கு மருத்துவம் பார்க்கும் பகுதியில் மழைநீர் புகுந்தது
    • மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்தி கால்நடைகளுக்கு எளிதாக சிகிச்சை அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளனர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அடுத்த, ஆத்தூர் தாலுகா அலுவலகம் அருகே உள்ள அரசு கால்நடை ஆஸ்பத்திரியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக, கால்நடைகளுக்கு மருத்துவம் பார்க்கும் பகுதியில் மழைநீர் புகுந்தது.

    கடந்த ஒரு வாரமாக குளம்போல் தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் கூடாரமாக மாறியுள்ளது. இதனால், கால்நடைகளுக்கு மழைக்காலங்களில் ஏற்படும் நோய்க்காக ஆஸ்பத்திரிக்கு வரும் கால்நடைகள் நோய் தொற்றோடு செல்லும் அவல நிலை உள்ளதாக இப்பகுதி விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் வேதனை தெரிவித்துள்ளார்.

    எனவே, ஆத்தூர் அரசு கால்நடை ஆஸ்பத்திரி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்தி கால்நடைகளுக்கு எளிதாக சிகிச்சை அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளனர்.

    • பால் கறவை செய்யும் நேரம் என்பதால் இந்த நேரத்தில் சிகிச்சைக்கு கொண்டு சென்று அழைத்து செல்லுவது சரியாக இருக்காது.
    • பால் கறவை செய்யும் நேரம் என்பதால் இந்த நேரத்தில் சிகிச்சைக்கு கொண்டு சென்று அழைத்து செல்லுவது சரியாக இருக்காது.

    திருப்பூர்:

    திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆர்.டி.ஓ. பண்டரிநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் சி.பொன்னுசாமி கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    இடுவாய் கிராமத்தில் உள்ள சீரங்ககவுண்டன்பாளையம், சின்னக்காளிபாளையம், ஆட்டையாம்பாளையம் போன்ற பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக செயல்படுகிறது. கால்நடை வளர்ப்பிலும் ஈடுபடுகின்றனர். இங்கு ஒரே ஒரு கால்நடை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளார். இவருக்கு உதவியாக கால்நடை ஆய்வாளரோ, கால்நடை பராமரிப்பு ஊழியரோ இல்லை. இதனால் விவசாயிகள் கொண்டு வரும் கால்நடைகள் சிகிச்சை பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே காலியாக உள்ள இடத்திற்கு புதிதாக ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் திருப்பூரில் உள்ள கால்நடை மருத்துவமனைகள் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மதியம் 3 மணி முதல் 5 மணி வரையிலும் செயல்படுகிறது. ஆனால் மதியம் 3 மணி முதல் 5 மணி வரை உள்ள சமயம் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று திரும்பவும், பால் கறவை செய்யும் நேரம் என்பதால் இந்த நேரத்தில் சிகிச்சைக்கு கொண்டு சென்று அழைத்து செல்லுவது சரியாக இருக்காது. எனவே கால்நடை மருத்துவமனை நேரத்தை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை தொடர்ந்து செயல்பட தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார். 

    • வெள்ளிகுளம் கிராமத்தில் நபார்டு நிதி திட்டத்தின் கீழ் கால்நடை மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

    கடையம்:

    கடையம் யூனியன் பாப்பான்குளம் ஊராட் சிக்குட்பட்ட வெள்ளிகுளம் கிராமத்தில் நபார்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் மாயவன், அவைத்தலைவர் பொட்டல்புதூர் சேட், துணைச் செயலாளர்கள் வின் சென்ட், முல்லைய ப்பன், மாவட்ட கவுன்சிலர் மைதீன் பிவீ கோதர் மைதீன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜஹாங்கீர், தமிழரசி தமிழ்ச்செல்வன், சுந்தரி மாரியப்பன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கடையம் பெரும்பத்து பொன்ஷீலா பரமசிவன், தர்மபுரம் மடம் ரூஹான் ஜன்னத் சதாம், பாப்பான்குளம் முருகன், ஆழ்வார்குறிச்சி பேரூர் செயலாளர் அழகேசன், பேரூராட்சி கவுன்சிலர்கள் சக்தி சுப்பிரமணியன், நாகூர் மீராள் ஒலி, சந்திரன், முத்துமாரி, லதா தங்கதுரை, அரசு விடுதி நலக்குழு உறுப்பினர் பாஸ்கர், உதவி செயற்பொறியாளர் சந்தானசெல்வி, உதவி பொறியாளர் மகேஷ், கால்நடை மருத்துவர் ஆறுமுகம், ஒப்பந்ததாரர் ஜெயபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×