search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளத்தில் கால்நடை மருத்துவமனை கட்டும் பணிக்கு பூமி பூஜை
    X

    கால்நடை மருத்துவமனை கட்டிடப்பணிகளை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பூமிபூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.

    விளாத்திகுளத்தில் கால்நடை மருத்துவமனை கட்டும் பணிக்கு பூமி பூஜை

    • நாகலாபுரத்தில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.
    • 54 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டுமான பணிகள் நேற்று தொடங்கின.

    விளாத்திகுளம்:

    கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் ஊராட்சி ஒன்றியம் நாகலாபுரத்தில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நாகலாபுரத்தில் ரூ. 54 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டுமான பணிகள் நேற்று தொடங்கின. விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.

    இதில், கால்நடை மருத்துவர் அருண்குமார், புதூர் மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், ஊராட்சிமன்ற தலைவர் உலகம்மாள் முனியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×