search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளிகுளத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில் கால்நடை மருத்துவமனை-சிவபத்மநாதன் அடிக்கல் நாட்டினார்
    X

    வெள்ளிகுளத்தில் கால்நடை மருத்துவமனை கட்டுவதற்கு தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் அடிக்கல் நாட்டினார்.


    வெள்ளிகுளத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில் கால்நடை மருத்துவமனை-சிவபத்மநாதன் அடிக்கல் நாட்டினார்

    • வெள்ளிகுளம் கிராமத்தில் நபார்டு நிதி திட்டத்தின் கீழ் கால்நடை மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

    கடையம்:

    கடையம் யூனியன் பாப்பான்குளம் ஊராட் சிக்குட்பட்ட வெள்ளிகுளம் கிராமத்தில் நபார்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் மாயவன், அவைத்தலைவர் பொட்டல்புதூர் சேட், துணைச் செயலாளர்கள் வின் சென்ட், முல்லைய ப்பன், மாவட்ட கவுன்சிலர் மைதீன் பிவீ கோதர் மைதீன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜஹாங்கீர், தமிழரசி தமிழ்ச்செல்வன், சுந்தரி மாரியப்பன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கடையம் பெரும்பத்து பொன்ஷீலா பரமசிவன், தர்மபுரம் மடம் ரூஹான் ஜன்னத் சதாம், பாப்பான்குளம் முருகன், ஆழ்வார்குறிச்சி பேரூர் செயலாளர் அழகேசன், பேரூராட்சி கவுன்சிலர்கள் சக்தி சுப்பிரமணியன், நாகூர் மீராள் ஒலி, சந்திரன், முத்துமாரி, லதா தங்கதுரை, அரசு விடுதி நலக்குழு உறுப்பினர் பாஸ்கர், உதவி செயற்பொறியாளர் சந்தானசெல்வி, உதவி பொறியாளர் மகேஷ், கால்நடை மருத்துவர் ஆறுமுகம், ஒப்பந்ததாரர் ஜெயபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×