search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குரங்கணி ஊராட்சியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி - எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. பங்கேற்பு
    X

    எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ.வுக்கு பா.ஜ.க. ஆழ்வை கிழக்கு மண்டல் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

    குரங்கணி ஊராட்சியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி - எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. பங்கேற்பு

    • ஏரல் தாலுகா குரங்கணியில் மக்கள் சந்திப்பு பேரியிக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் சித்ராங்கதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தென்திருப்பேரை:

    ஏரல் தாலுகா குரங்கணியில் மக்கள் சந்திப்பு பேரியிக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்திக்கு ஆழ்வை கிழக்கு பா.ஜ.க. மண்டல் தலைவர் குமரேசன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருக ஆதித்தன், மாவட்ட செயலாளர் கனல் ஆறுமுகம், மாநில கூட்டுறவு பிரிவு செயலாளர் மாரிதுரைசாமி, இளைஞரணி செயலாளர் பூபதிபாண்டியன், அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவுசெயலாளர் செயலாளர் கோமதிராஜ், மாவட்ட துணை தலைவர் ரேவதி, மண்டல் பொதுச் செயலாளர் முத்தையாதாஸ், பொருளாளர் சிவநேசன், துணைத் தலைவர்கள் குரங்கணி ராஜாராம், பாமா, இளைஞரணி தலைவர் ராஜதுரை, கூட்டுறவு பிரிவு தலைவர் ஜெயசிங், இளைஞரணி பொதுச்செயலாளர் கார்த்திக், கலைகலாச்சார பிரிவு தலைவர் ராஜா, அரசு தொடர்பு துறை தலைவர் பிச்சமுத்து, ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டு மாவட்ட துணை தலைவர் ராஜ்குமார், மாவட்ட மகளிரணி துணை தலைவர் ராஜேஸ்வரி, மாவட்ட நெசவாளர் பிரிவு செயலாளர் குமரேசன், சக்தி கேந்திர பொறுப்பாளர் காமினி, மண்டல் மகளிரணி தலைவர் ஆனந்தவல்லி, கூட்டுறவு பிரிவு துணை தலைவர் சபரிசங்கர், கிளை தலைவர்கள் முத்துலிங்கம், ராஜ கோபால், குரங்கணியை சேர்ந்த ராமசந்திரன், கணேசன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் குணசேகர் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×