search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்திருப்பேரையில் ஆழ்வை ஒன்றிய விவசாயிகள் சங்க கூட்டம்
    X

    மாவட்ட துணைத் தலைவர் சீனிவாசன் பேசிய காட்சி. அருகில் ஆழ்வை ஒன்றிய தலைவர் பூலான் உள்ளார்.

    தென்திருப்பேரையில் ஆழ்வை ஒன்றிய விவசாயிகள் சங்க கூட்டம்

    • கடம்பா குளத்தில் நடைபெறுகிற மராமத்து வேலைகள் குறித்து நிதி மதிப்பீடு, நடைபெறும் வேலைகள் பற்றி குளத்தில் கரையில் போர்டு வைக்க வேண்டும்.
    • விவசாயத்திற்கு குளத்தில் இருந்து கரம்பை மண், வண்டல் மண் விவசாயிகள் எடுத்து கொள்வதை வருவாய் துறையின் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும்.

    தென்திருப்பேரை:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஆழ்வை ஒன்றிய குழு கூட்டம் தென்திருப்பேரை கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. ஆழ்வை ஒன்றிய தலைவர் பூலான் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணைத் தலைவர் சீனிவாசன் கலந்து கொண்டார்.

    100 ஏக்கர்

    கூட்டத்தில் ஆழ்வை ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், துணைச் செயலாளர் செந்தூரப்பாண்டி, ஆறுமுகநயனார், துணைத் தலைவர் முத்துகிருஷ்ணன், மேகநாதன், அண்ணாமலை, முருகபெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    100 ஏக்கருக்கு கீழே அரசுக்கு நிலம் எடுக்கும் போது நீர் நிலைகள் இருந்தாலும் அந்த நிலத்தை எடுக்கலாம் என்று தமிழக அரசு கொண்டு வந்ததை நிறுத்தி விவசாயம் பாதுகாக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. ரேசன் கடைகளில் செறியூட்டப்பட்ட அரிசி வழங்குவது என்ற மத்திய அரசின் முடிவை விலக்கிக் கொள்ள வேண்டும்.

    மராமத்து வேலைகள்

    கடம்பா குளத்தில் நடைபெறுகிற மராமத்து வேலைகள் குறித்து நிதி மதிப்பீடு, நடைபெறும் வேலைகள் பற்றி குளத்தில் கரையில் போர்டு வைக்க வேண்டும். கடம்பா குளத்தில் வெள்ளப்பெருக்கு காலத்தில் உபரி நீர் வெளியேறும் கால்வாயிலுள்ள 4 ஷட்டர்களும் உபரிநீர் வெளியேற மழைக்காலத்தில் மட்டும் திறக்க வேண்டும்.

    விவசாயத்திற்கு குளத்தில் இருந்து கரம்பை மண், வண்டல் மண் விவசாயிகள் எடுத்து கொள்வதை வருவாய் துறையின் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும். நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் அரசு பஸ்கள் மணத்தி, புறையூர், அங்கமங்கலம், ஆதிநாதபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் செந்தூர்பாண்டி நன்றி கூறினார்.

    Next Story
    ×