search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் மழை வேண்டி பிரார்த்தனை
    X

    கள்ளப்பிரான் கோவிலில் மழை வேண்டி பெண்கள், அர்ச்சகர்கள் பிரார்த்தனை செய்த போது எடுத்தபடம்.

    ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் மழை வேண்டி பிரார்த்தனை

    • தினமும் திருப்பாவை நான்காவது பாசுரம் ஆழி மழைக் கண்ணா பாடலை பாடி பிரார்த்தனை செய்தால் மழை பெய்யும் என்பது ஐதீகம்.
    • பெண்கள் உட்பட பக்தர்கள் கூட்டாகச் சேர்ந்து 1008 தடவை பாடி பிரார்த்தனை செய்தனர்.

    தென்திருப்பேரை:

    நவதிருப்பதி தலங்களில் ஒன்றான ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் மழை வேண்டி பொதுமக்கள் பிரார்த்தனை செய்தனர். தினமும் திருப்பாவை நான்காவது பாசுரம் ஆழி மழைக் கண்ணா பாடலை பாடி பிரார்த்தனை செய்தால் மழை பெய்யும் என்பது ஐதீகம். இதன்படி 7 நாட்கள் பொதுமக்கள் பிரார்த்தனை செய்திட வேண்டும் என முடிவு செய்தனர். அதன்பின் காலை 11 மணிக்கு சோரநாத நாயகி தாயார் சன்னதியில் அர்ச்சகர்கள் ரமேஷ், நாராயணன், வைகுண்டநாதன், ராமானுஜம், சீனு ஆகியோர் அர்ச்சனை செய்து கற்பூர ஆர்த்தியுடன் பாசுரத்தை ஆரம்பிக்க ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி மற்றும் பெண்கள் உட்பட பக்தர்கள் கூட்டாகச் சேர்ந்து 1008 தடவை பாடி பிரார்த்தனை செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், தக்கார் அஜித், ஆய்வாளர் நம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×