search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teenager"

    • தன்னை யாரோ கையில் வெட்டியதாக கூறி வரவழைத்து கொடூரம்
    • கொலை வழக்கில் தொடர்பு பற்றி பேசியதால் குத்தியதாக வாக்குமூலம்

    கோவை,

    கோவை சின்னியம்பாளையம் அருகே உள்ள அருளானந்தம் நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 22). இவர் அந்த பகுதியில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று கடையில் இருந்த முருகனுக்கு ஆசிரியர் காலனியை சேர்ந்த மாதவன் (21) என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் தன்னை யாரோ கையில் வெட்டி விட்டதாக கூறினார். முருகன் உடனடியாக மாதவன் அழைத்த இடத்துக்கு சென்றார்.

    அங்கு தனியாக நின்று கொண்டு இருந்த அவர் நீ என்ன பெரிய ஆளா என கூறியபடி அவர் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து முருகனின் வயிற்றில் குத்தினார். பின்னர் அங்கு இருந்த தப்பிச் சென்றார்.

    கத்திக்குத்தில் காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் முருகனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து சூலூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் தலைமறைவாக இருந்த மாதவனை கைது செய்தனர்.

    அவரிடம் கத்தியால் குத்தியதற்கான காரணம் குறித்து விசாரித்தனர். விசாரணையில் மாதவன், ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர். அந்த கொலை சம்பந்தமாக முருகன் பேசியதால் அவரை கத்தியால் குத்தியதாக கூறினார். இதனை தொடர்ந்து போலீசார் மாதவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • மோட்டார் சைக்கிளில் ஏற மறுத்ததால் காதலர் ஆத்திரம்
    • பொள்ளாச்சி தாலுகா போலீசார் தீவிர விசாரணை

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ராமநாதபுரத்தை சேர்ந்தவர் 15 வயது பள்ளி மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவரது தாய் மற்றும் தந்தை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் மாணவி அவரது தாத்தா பாட்டி பராமரிப்பில் இருந்து வருகிறார்.

    இந்தநிலையில் மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெகதீஸ் (வயது 21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

    சம்பவத்தன்று மாணவி பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஜெகதீஸ் தன்னுடன் மோட்டார் சைக்கிளில் வருமாறு அழைத்தார். ஆனால் மாணவி வர மறுத்து விட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் மாணவியை தாக்கி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார். இதில் காயம் அடைந்த மாணவி நடந்த சம்பவத்தை தனது தாத்தாவிடம் கூறி னார். அவர் மாணவியை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு மாணவிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசில் மாணவி புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
    • கொலை தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பிரபாகர் காலனியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மகன் விக்கி (வயது 26). சம்பவத்தன்று இவரது வீட்டிற்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல் விக்கியை தனியாக பேச அழைத்து சென்றனர். சிறிது நேரத்தில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் விக்கியை கத்தியால் சரமாரியாக குத்தினர்.

    இதில் அவர் படுகாயமடைந்தார். அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட விக்கி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து திருப்பத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு மருத்துவமனை அலுவலர்கள் தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்த நகர் காவல் ஆய்வாளர் கலைவாணி சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்ததோடு கொலைக்கான காரணம் என்னவென்று விசாரித்து வருகின்றனர். கொலை தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றவர்களையும் தேடி வருகின்றனர்.

    • திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் வல்லுறவு
    • வால்பாறை அனைத்து மகளிர் போலீசார் தொழிலாளியிடம் விசாரணை

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடுமலை அருகே உள்ள பூக்களத்தை சேர்ந்த 19 வயது கூலித் தொழிலாளி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    கடந்த 29-ந் தேதி சிறுமி தனது பெற்றோரிடம் வெளியே செல்வதாக கூறி விட்டு சென்றார். அப்போது அவரை அவரது காதலன் திருமண ஆசை காட்டி கடத்தி சென்றார். பின்னர் வாலிபர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத் காரம் செய்தார்.

    சிறுமி மாயமானது குறித்து அவரது பெற்றோர் கோட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வாலிபர் சிறுமியை கடத்தி சென்றது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் வாலிபருடன் தங்கி இருந்த சிறுமியை மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வாலிபர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து இந்த வழக்கு வால்பாறை அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டது. வால்பாறை அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபரை தேடி வந்தனர்.
    • சூர்யாவை கைது செய்து அவரிடமிருந்து திருடிய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே ரங்கப்பனூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது47). இவர் சம்பவத்தன்று தனது விவசாய நிலத்தின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்து குமார் கொடுத்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபரை தேடி வந்தனர். விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடியவர் திருவண்ணாமலை மாவட்டம், அகரம்பள்ளிப்பட்டு முஸ்லிம் தெருவை சேர்ந்தபழனி மகன் சூர்யா(22) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்பெஸ்க்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் அகரம்பள்ளிப்பட்டுக்கு விரைந்து சென்று சூர்யாவை கைது செய்து அவரிடமிருந்து திருடிய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    • படுகாயமடைந்த பிரதாப் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சாரதியை தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை ஆம்பூர் சாலையில் பிளாட்பார பகுதியில் வசித்து வருபவர் அமுதா. இவரது மகன் பிரதாப்(வயது20). இவருக்கும் புதுவை ஆட்டுப்பட்டியை சேர்ந்த சாரதி என்பவருக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் பிரதாப் செட்டி தெருவில் உள்ள அரசு நிதி உதவி பெரும் பள்ளி அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சாரதி பிரதாப்பிடம் தகராறு செய்தார்.

    பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரதாப்பின் கையில் குத்தி விட்டு தப்பியோடி விட்டார்.

    இதில் படுகாயமடைந்த பிரதாப் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார்.

    இதுகுறித்து பிரதாப்பின் தாயார் அமுதா பெரியக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சாரதியை தேடி வருகிறார்கள்.

    • தலைமறைவாகியுள்ள பூமிநாதனை தேடி வருகின்றனர்
    • உளுந்தூர்பேட்டை போலீசார் அஜயை கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் வரிசையில் வரச் சொன்ன விற்பனையாளர் ராமர் என்பவர் மீது இரண்டு வாலிபர்கள் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தினர். இது தொடர்பான புகாரின் பேரில், சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், வாலிபர்களை அடையாளம் கண்டனர். அதன்படி, உளுந்தாண்டவர் கோவில் காலனியை சேர்ந்த அஜய் (வயது 32), செங்குறிச்சியை சேர்ந்த பூமிநாதன் (20) தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து விரைந்து சென்ற உளுந்தூர்பேட்டை போலீசார் அஜயை கைது செய்தனர். மேலும், தலைமறைவாகியுள்ள பூமிநாதனை தேடி வருகின்றனர்.

    • அஜித்குமார் (வயது 24) இவரது நண்பர் பாஸ்கர் (24) இருவரும் நேற்றிரவு சேலத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.
    • மோட்டார் சைக்கிளை ஓட்டிய பாஸ்கர் படுகாயம் அடைந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி கிழக்குக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 24) இவரது நண்பர் பாஸ்கர் (24) இருவரும் நேற்றிரவு சேலத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது காரிப்பட்டி கருமாபுரம் அருகே சென்ற போது முன்னால் சென்ற லாரியை முந்தியபோது லாரி மோதி கீழே விழுந்தனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலே அஜித்குமார் இறந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டிய பாஸ்கர் படுகாயம் அடைந்தார். அவரை போலீசார் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் ராசிபுரம் மங்களபுரத்தை சேர்ந்த சுந்தரம் (52) என்பவரை கைது செய்தனர்.

    • புகார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
    • பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் வந்திருந்தார். திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அங்கு இருந்த போலீசார் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அந்த நபரிடம் இருந்த பாட்டிலை பறிமுதல் செய்து அவர் மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்பாபு. இவர் வெளிநாட்டில் வேலை செய்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான காட்டுமன்னார்கோயில் பெரியார் நகர் பகுதியில் வீடு கட்டியுள்ளார்.

    அப்போது அதே பகுதியைச் சார்ந்த நபர் ஒருவர் அவரது வீட்டின் அருகே உள்ள பொதுப் பாதையில் இருந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அவரிடம் தெரிவித்த போது ஆட்கள் வைத்து மிரட்டுவதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்ப டவில்லை என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்திலும்,  பரபரப்பு ஏற்பட்டது.

    • போதையில் இளம்பெண்ணிடம் போலீஸ்காரர் அத்துமீறி நடந்துள்ளார்.
    • போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் அந்த காவலர் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் கோர்பச்சேவ். இவர் இதற்கு முன்பு பணியாற்றிய இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் தேவ கோட்டை டவுன் போலீஸ் நிலையத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.

    நேற்று மதுபோதையில் சீருடை அணிந்து காவலர் பணிக்கு சென்றுள்ளார். இரவு 8 மணியளவில் பஸ் நிலையம் அருகே அவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு இளம் பெண் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அந்த பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் காவலர் பின் தொடர்ந்து சென்றார். ஒத்தக்கடை ஆற்றுப்பாலம் அருகே இருள் சூழ்ந்த பகுதியில் சென்ற போது திடீரென காவலர் அந்தப் பெண்ணை வழிமறித்துள்ளார். ஏன் ஹெல்மெட் போட வில்லை? என போதையில் உளறியபடி அந்த பெண்ணிடம் அத்துமீறி நடக்க முயன்றுள்ளார்.

    அந்த பெண் கூச்சலிட்டதால் அந்த வழியாக சென்றவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் காவலரை சிறைபிடித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். டவுன் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களின் பிடியிலிருந்த காவலரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

    இதுகுறித்து தகவலறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் அந்த காவலர் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    • போலீசார் வடமாமாந்தூர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்.இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன், இளங்கோவன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் வடமாமாந்தூர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர் கண்டாச்சிபுரம் அடுத்த தாங்கல் பகுதியை சேர்ந்த முருகன் மகன் கார்த்தி(20) என்பது தெரியவந்தது. இவர் தனது நண்பரான சென்னையை சேர்ந்த பால்ராஜ் உள்பட 2 பேருடன் சேர்ந்து வடமாமாந்தூர் பகுதியை சேர்ந்த மெல்கியோர் (68) என்பவரது வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த ரூபாய் 4 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை திருடியது தெரிந்தது. இதையடுத்து கார்த்தியை போலீசார்கைது செய்தனர். மேலும் பால்ராஜ் உள்ளிட்ட 2 பேரை தேடி வருகின்றனர்.

    • விழுப்புரத்திற்கு சென்று விட்டு மீண்டும் செரலாபட்டிற்கு சென்றார்.
    • மேல்சிகிச்சைக்கு புதுவை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செரலாபட்டு பகுதியை சேர்ந்தவர் பாவாடை (வயது 50). தொழிலாளி இவர் கடந்த 28-ந்தேதி தனது மோட்டார் சைக்கிளில் விழுப்புரத்திற்கு சென்று விட்டு மீண்டும் செரலாபட்டிற்கு சென்றார். அப்போது சென்னை-திருச்சி சாலை இருவேல்பட்டு அருகே வழியாக மோட்டார் சைக்கிள் வந்தபோது எதிரே வந்த தனியார் வாகனம் மோதி பலத்த படுகாயம் அடைந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த பாவாடையை திருவெண்ணை நல்லூர் போலீசார் மீட்டு சிகிச்சைக்கு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்கு புதுவை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பாவாடை உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×