என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்தில் வாலிபர் பலி
- அஜித்குமார் (வயது 24) இவரது நண்பர் பாஸ்கர் (24) இருவரும் நேற்றிரவு சேலத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.
- மோட்டார் சைக்கிளை ஓட்டிய பாஸ்கர் படுகாயம் அடைந்தார்.
சேலம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி கிழக்குக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 24) இவரது நண்பர் பாஸ்கர் (24) இருவரும் நேற்றிரவு சேலத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது காரிப்பட்டி கருமாபுரம் அருகே சென்ற போது முன்னால் சென்ற லாரியை முந்தியபோது லாரி மோதி கீழே விழுந்தனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலே அஜித்குமார் இறந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டிய பாஸ்கர் படுகாயம் அடைந்தார். அவரை போலீசார் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் ராசிபுரம் மங்களபுரத்தை சேர்ந்த சுந்தரம் (52) என்பவரை கைது செய்தனர்.
Next Story






