search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tamil new year"

    • தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் நெல்வாய் கிராமத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான சிறப்பு மிக்க ராமபிரான் கோவில் உள்ளது.

    இங்கு அனைத்து விஷேச தினங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.

    இதனைதொடர்ந்து இன்று தமிழ்வருட பிறப்பு முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி உடன் கோவில் நடை திறக்கப்பட்டு 5.30 மணிக்கு தவன பந்தலின் கீழ் ஸ்ரீ ராமசுவாமிக்கு விசேஷ பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள் திருமஞ்சனம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து சந்தனத்தால் ஸ்ரீ கல்யாண ராமர் திருக்கோல விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது. பன்னீர் புஷ்பத்தால் விசேஷ அர்ச்சனை செய்யப்பட்டு ராஜோபசார பூஜைகள் செய்யப்பட்டு மகாதீப ஆராதனையானது நடைபெற்றது.

    இதில் நெல்வாய் சுற்றுப்பகுதியில் உள்ள சுமார் 500 க்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் கலந்துக் கொண்டு தரிசனம் செய்தனர்.

    • நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
    • பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி முர்மு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.

    தமிழகத்தில் இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதைப்போல விஷு, பைசாகி, பிஹு என பல்வேறு மாநிலங்களில் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.

    இதையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பைசாகி, விஷு, பிஹு, நபா பர்ஷா, வைஷாகாதி மற்றும் புத்தாண்டு பிறப்பு ஆகிய பண்டிகைகளின் புனிதமான இந்த தருணத்தில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டெல்லியில் நடந்த தமிழ் புத்தாண்டு விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் பங்கேற்றனர்.
    • அப்போது பேசிய பிரதமர் மோடி, அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்றார்.

    புதுடெல்லி:

    தமிழ் புத்தாண்டு விழா உலகமெங்கும் உள்ள தமிழர்களால் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு டெல்லியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழ் புத்தாண்டு விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளார். அதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர். விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் பங்கேற்றுள்ளனர். மத்திய இணை மந்திரி எல்.முருகன் இல்லத்தில் தமிழ்புத்தாண்டு விழா நடக்கிறது.

    இந்நிலையில், தமிழ் புத்தாண்டு விழாவில் பட்டு வேஷ்டி, சட்டையில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:

    அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ஜனநாயகத்தின் தாய் இந்தியா. அதில் பல வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. அவற்றுள் தமிழ்நாட்டில் உத்திரமேரூரில் 1100-1200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டில் இந்தியாவின் ஜனநாயகம் பற்றிய பல விஷயங்கள் எழுதப்பட்டுள்ளன...

    உலகின் பழமையான மொழி தமிழ், ஒவ்வொரு இந்தியனும் தமிழ் மொழி குறித்து பெருமைப்படுகின்றனர்.

    சென்னையிலிருந்து கலிபோர்னியா வரை, மதுரையில் இருந்து மெல்போர்ன் வரை, கோயம்புத்தூரில் இருந்து கேப் டவுன் வரை, சேலமில் இருந்து சிங்கப்பூர் வரை, தங்கள் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களைத் தம்முடன் சுமந்து சென்ற தமிழ் மக்களைக் காணலாம்.

    பொங்கலாகட்டும், புத்தாண்டாகட்டும், அவை உலகம் முழுவதும் கொண்டாப்படுகின்றன.

    பலமுறை பல சாதனை செய்த தமிழர்கள் பற்றி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசி உள்ளேன்.

    தமிழ் இலக்கியமும் அதிகமாக மதிக்கப்படுகிறது. தமிழரின் பண்பு குறித்து தமிழ்த் திரையுலகம் நமக்குச் சின்னச் சின்னப் படைப்புகளை வழங்கி உள்ளது.

    இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மிக முக்கியமானது.

    ஐக்கிய நாடுகள் சபையில் தமிழ் மொழியைப் பற்றிக் குறிப்பிட்டேன். ஏராளமானோர் குறுஞ்செய்தி மூலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் என தெரிவித்தார்.

    • தமிழ் மக்களுக்கு விவசாயத்தில் மிகவும் ஆழமான அனுபவம் உள்ளது.
    • சிறுதானியங்கள் வளரும் இடத்தின் மண் வளமாகவே இருக்கும்.

    கோவை:

    ஈஷா நிறுவனர் சத்குரு வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:

    உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். நம் தமிழ்க் கலாச்சாரத்தில், மண்ணை 'தாய் மண்' எனச் சொல்லுகிறோம். ஏனெனில், அந்தக் காலத்திலிருந்தே மண் நம் உயிருக்கு மூலமானது, நம் தாய் போல என்று உணர்ந்து, நாம் பல்லாயிரம் வருடங்களாக விவசாயம் செய்து வருகிறோம். தமிழ் மக்களுக்கு விவசாயத்தில் மிகவும் ஆழமான அனுபவம் உள்ளது. அப்படி இருப்பினும், கடந்த இருபது, முப்பது வருடங்களில் நம் மண்ணைக் காப்பாற்றாமல் விட்டுவிட்டோம்.

    நம் மண்ணைக்காக்க, நாம் அனைவரும் கம்பு, வரகு, சாமை, ராகி உள்ளிட்ட சிறுதானியங்களை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், சிறுதானியங்கள் வளரும் இடத்தின் மண் வளமாகவே இருக்கும்.

    மேலும், தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமல்ல. இது ஒரு பெருமை, இது ஒரு திறமை. திறமை என்றால் ஏதோ ஒரு செயல் மட்டும் இல்லை. நாம் வாழும் முறையிலேயே நம் திறமை காட்டப்படவேண்டும். நம் தமிழ் கலாச்சாரத்தில், இலக்கியத்தில், எல்லா இடங்களிலும், சித்தர், யோகிகள் என இருந்தனர். உள்நிலையில் எப்படி இருக்கிறோம் என்பது முக்கியம் என்பதால், ஒரு ஊரை உருவாக்கும் முன்னரே அங்கு கோயிலை உருவாக்கினோம்.

    பொருளாதாரம், குடும்ப வாழ்க்கை என எல்லாவற்றையும்விட முக்கியமானது நமது ஆன்மீகம். நாமே ஒரு கோயிலாக வாழவேண்டும் என்பதாலேயே, தமிழ்நாட்டின் குறியீடாக ஒரு கோயிலை வைத்துள்ளோம். இதுதான் தமிழ் கலாச்சாரம். இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் அனைவருக்கும் எனது ஆசியும், வாழ்த்துக்களும்.

    இவ்வாறு சத்குரு கூறி உள்ளார்.

    • தமிழ் புத்தாண்டை யொட்டி நாளை நெல்லை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடை பெறுகிறது.
    • நெல்லையப்பர் கோவிலில் காலையில் சுவாமி -அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடக்கிறது.

    நெல்லை:

    தமிழ் புத்தாண்டை யொட்டி நாளை நெல்லை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடை பெறுகிறது.

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் காலையில் சுவாமி -அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடக்கிறது. மதியம் 12 மணிக்கு சுவாமிக்கு அன்னா பிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

    இதைத்தொடர்ந்து மாலையில் சுவாமி நெல்லை யப்பருக்கும், காந்திமதி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து பஞ்சாங்கம் வாசிப்பு நிகழ்ச்சி நடை பெறும். இந்த நிகழ்ச்சிகளில் மாநகர பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இதேபோல் நெல்லை சந்திப்பில் உள்ள சாலை குமாரசாமி கோவில், குறுக்குத்துறை சுப்பிரமணிய சாமி கோவில், பாளை மேலவாசல் சுப்பிரமணியசாமி கோவில், முத்தாரம்மன் கோவில், வெற்றி விநாயகர் கோவில் உள்பட பல கோவில்களில் தமிழ் புத்தாண்டையொட்டி நாளை சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெறும்.

    நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறும். நெல்லை டவுன் புட்டாபுரத்தி அம்மன் கோவிலில் சித்திரை விசு மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடைபெறும்.

    பாளை அருகே உள்ள சீவலப்பேரி சுடலைமாட சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை சிறப்பு பூஜை நடக்கிறது. காலை 6 மணிக்கு சுடலைமாட சுவாமி, பேச்சி, பிரம்மசக்தி, முண்டசுவாமி, புதியவன் சுவாமி மற்றும் பரிவார சுவாமிகளுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனையும், மதியம் 12 மணிக்கு உச்சிகால சிறப்பு பூஜையும் நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    • நாம் இந்தியர் கட்சி சார்பாக தமிழ் புத்தாண்டு விழா மற்றும் கட்சியின் தலைவர் என்.பி. ராஜா எழுதிய புத்தகம் வெளியீட்டு விழா நாளை (14-ந் தேதி) நடக்கிறது.
    • நாம் இந்தியர் கட்சியின் மாநில செயலாளர் பொன்ராஜ் வரவேற்று பேசுகிறார்.

    தூத்துக்குடி:

    நாம் இந்தியர் கட்சி சார்பாக தமிழ் புத்தாண்டு விழா மற்றும் கட்சியின் தலைவர் என்.பி. ராஜா எழுதிய புத்தகம் வெளியீட்டு விழா நாளை (14-ந் தேதி) நடக்கிறது.

    தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள என்.பி.எஸ். திறந்தவெளி மைதானத்தில் நாளை மாலை 5 மணிக்கு விழா தொடங்குகிறது.

    நாம் இந்தியர் கட்சியின் மாநில செயலாளர் பொன்ராஜ் வரவேற்று பேசுகிறார். கட்சியின் தலைவர் என்.பி.ராஜா சிறப்புரை யாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து என்.பி. ராஜா எழுதிய புத்தகம் வெளி யிடப்படுகிறது. அதனை மாண வர்கள் பெற்றுக் கொள்கிறா ர்கள்.

    தொடர்ந்து பல்வேறு நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேச உள்ளனர். முடிவில் கட்சி மாநில பொருளாளர் ஜெய கணேஷ் நன்றி கூறுகிறார். விழாவில் நாம் இந்தியர் கட்சியின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, வட்டார, கிளை க்கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வழக்கமாக டெல்லியில் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை மட்டுமே கொண்டாடுவது வழக்கம்.
    • மத்திய மந்திரி எல்.முருகன் ஏற்பாட்டின் பேரில் முதல் முறையாக தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்ப்புத்தாண்டு நாளை பிறக்கிறது. மத்திய மந்திரி எல்.முருகன் டெல்லியில் உள்ள அவரது இல்ல வளாகத்தில் இன்று மாலை தமிழ்ப்புத்தாண்டை பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாட விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

    இதற்காக அவரது வீட்டு வளாகத்தில் உள்ள புல்வெளியில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக தமிழர்களின் பெருமையை எடுத்துச் சொல்லும் வகையில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக தமிழ்நாட்டில் இருந்து 5 கலைக்குழுக்களை சேர்ந்தவர்கள் டெல்லி சென்றுள்ளனர். அவர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்ட விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் விதவிதமான உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன.

    இந்த தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுனருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனும் கலந்து கொள்கிறார்.

    இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்குமாறு தென் மாநிலங்களை சேர்ந்த பல எம்.பி.க்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள், அ.தி.மு.க. எம்.பி.க்கள் என அனைத்து கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கும் மத்திய மந்திரி எல்.முருகன் தனித்தனியாக அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கலந்து கொள்வார்களா? என்பது தெரியவில்லை.

    மேலும் மத்திய மந்திரிகள் உள்பட 500 பிரபலங்களுக்கும் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் பங்கேற்கிறார்கள். தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை உள்பட தமிழக பா.ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 50 பேருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதையொட்டி அவர்கள் 50 பேருமே டெல்லி சென்றுள்ளனர்.

    வழக்கமாக டெல்லியில் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை மட்டுமே கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில் மத்திய மந்திரி எல்.முருகன் ஏற்பாட்டின் பேரில் முதல் முறையாக தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

    • தமிழ் வருடப்பிறப்பு வெள்ளிக்கிழமை வருவதால் 13-ந்தேதி வியாழக்கிழமை 500 சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்படுவதால் மக்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் பஸ் பயணம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    கடந்த வாரம் புனித வெள்ளி, அரசு விடுமுறை என்பதால் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை கிடைத்தது. இதனால் வெளியூர் பயணம் அதிகரித்தது.

    சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கோடை விடுமுறை, பண்டிகை காலம், விசேஷ நாட்கள் அடுத்தடுத்து வருவதால் பஸ்களில் கூட்டம் அதிகரிக்கிறது.

    14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தமிழ் வருடப்பிறப்பு பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதைத் தொடர்ந்து 22-ந்தேதி ரம்ஜான் பண்டிகை வருகிறது. இதனால் வெளியூர் பயணம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு நாட்கள் வருவதால் கூடுதலாக 1000 பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டுள்ளன.

    தமிழ் வருடப்பிறப்பு வெள்ளிக்கிழமை வருவதால் 13-ந்தேதி வியாழக்கிழமை 500 சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்படுவதால் மக்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கருதி சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    இதேபோல ரம்ஜான் பண்டிகை 22-ந்தேதி (சனிக்கிழமை) வருவதால் 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'கடந்த வாரம் கோயம்பேடு பஸ் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. அதனால் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதேபோல தமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜானையொட்டி விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோவை, மதுரை போக்குவரத்து கழகங்கள் மூலம் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 500 பஸ்கள் வீதம் இயக்க திட்டமிட்டுள்ளோம்' என்றனர்.

    • இந்த ஆண்டு மகோற்சவ விழா இன்று தொடங்கி வரும் 21-ந் தேதி வரை நடக்கிறது.
    • அனைத்து பக்தர்களும் பங்கேற்று தீபம் ஏற்றி வழிபாடு நடத்தி பயன் அடையுமாறு விழாக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் அருள்மிகு வீர ஆஞ்சநேய சுவாமி திருக்கோவில் உள்ளது. இங்கு பங்குனி மாத இறுதியில் மகோற்சவ விழா நடைபெறும். இதில் முக்கிய நிகழ்வாக தமிழ் புத்தாண்டு தினத்தன்று லட்சதீப விழா நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு மகோற்சவ விழா இன்று தொடங்கி வரும் 21-ந் தேதி வரை நடக்கிறது. இதில் தினமும் காலையில் ஆஞ்சநேயர் சாமிக்கு திருமஞ்சனமும், இரவில் சாமி வீதியுலாவும் நடைபெற உள்ளது. 

    மேலும், வருகின்ற 14-ந்தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் லட்ச தீப விழா நடக்கிறது. அன்று மாலை 6 மணியளவில் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் லட்ச தீபம் ஏற்றி வழிபடும் நிகழ்வு நடக்கவுள்ளது. இதில் அனைத்து பக்தர்களும் பங்கேற்று தீபம் ஏற்றி வழிபாடு நடத்தி பயன் அடையுமாறு விழாக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், தொடர்ந்து அன்று மாலை 8 மணியளவில் சாமி வீதியுலாவும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் தலைமையிலான விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.

    சித்திரை திங்கள் பிறப்பை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். #RahulGandhi #தமிழ்புத்தாண்டு
    புதுடெல்லி:

    தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழர்கள் தங்களது புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.
     
    நடைமுறைக்கு ஏற்றதாக தமிழ்ப் புத்தாண்டு ஒரு குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்பட்டாலும், தமிழ்ப் பஞ்சாங்கங்களில் அந்த நாளில் ஆண்டு பிறக்கும் சரியான நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் அடிப்படையிலேயே ஆண்டுக்காலம் கணிக்கப்படுகிறது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி, தமிழர்களுக்கு தங்களது தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழ் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! தொன்மையான தமிழ் இனத்தின் மொழியும், கலாச்சாரமும் வாழ்வும், வரலாறும் செழிக்கட்டும் என தெரிவித்துள்ளார். #RahulGandhi #HappyTamilNewYear #TamilNewYear #NewYearGreetings #தமிழ்புத்தாண்டு
    உலகின் மூத்த குடியான தமிழ் மக்கள் தங்களின் பஞ்சாங்க குறிப்புகள் மூலம் புத்தாண்டு பிறக்கும் தினத்தை கட்சிதமாக அறிந்து கொண்டாடப்படும் திருநாளே தமிழ் புத்தாண்டு.

    உலகின் மூத்த குடியான தமிழ் மக்கள் தங்களின் பஞ்சாங்க குறிப்புகள் மூலம் புத்தாண்டு பிறக்கும் தினத்தை கட்சிதமாக அறிந்து கொண்டாடப்படும் திருநாளே தமிழ் புத்தாண்டு. பல சிறப்புகள் நிறைந்த சித்திரை முதல் நாளான தமிழ் புத்தாண்டில் நாம் என்ன செய்தால் நமக்கு நன்மைகள் அதிகரிக்கும் என்று பார்ப்போம் வாருங்கள்.

    சித்திரை முதல் நாளில் நாம் குளித்துவிட்டு தூய்மையான ஆடை அணிந்துகொண்டு வீடு வாசல் தெளித்து அரிசி மாவால் கோலம் இட வேண்டும். அந்த அரிசி மானிவை சிறு எறும்புகள் உண்பது நமக்கு நன்மையை தரும். அதன் பிறகு வீட்டு வாசல்படியில் மஞ்சள் குங்குமம் இடவேண்டும். மஞ்சள் குங்குமமானது கிருமி நாசினியாக மட்டும் இல்லாமல் நமது வீட்டினுள் துர் சக்திகளை நுழைய விடாமல் தடுக்கிறது.

    அதன் பிறகு வீட்டில் விளக்கேற்றி தமிழ் கடவுள் முருகனை போற்றி பூஜை செய்ய வேண்டும். கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் போன்றவற்றை படிக்கலாம். இந்த ஆண்டு முழுக்க எல்லா விதமான நற்பலன்களையும் தந்தருள முருகப்பெருமானிடம் மனமுருகி வேண்டலாம். முடிந்தால் முருகன் கோயிலிற்கு சென்று வழிபாடு செய்யலாம்.

    செய்ய வேண்டிய பரிகாரம்: சித்திரம் மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பது நாம் அறிந்ததே ஆகையால் விசிறி, மோர், கூழ் போன்றவற்றை ஏழை எளியோருக்கு இன்று தானம் செய்வது நமக்கு நல்ல பலன்களை தரும். வெய்யிலின் தாக்கத்தில் இருக்கும் ஏழைகளுக்கு எப்படி நாம் கொடும்கோடும் பொருளும் உணவும் குளிர்ச்சியை தருகிறதோ அது போல நமது வாழ்வும் ஆண்டு முழுவதும் எந்த வித சங்கடங்களும் இல்லாமல் குளிர்ச்சியாக இருக்கும் என்பது நம்பிக்கை.
    தமிழ்ப் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை கூறியுள்ளார். #TamilNewYear
    உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள் இன்று சித்திரை முதல் நாளான தமிழ்ப் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். பொதுமக்களுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 



    இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர்களுக்கு ட்விட்டரில் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் பகிர்ந்து அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
    ×