search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Naam Indian Party"

    • தூத்துக்குடி நாம் இந்தியர் கட்சி சார்பில் நான் அறிந்த மனிதமும், அரசியலும் என்ற நூல் வெளியீட்டு விழா என்.பி.எஸ். திறந்த வெளி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
    • பாரதீய ஜனதா தலைவராக உள்ள அண்ணாமலைக்கு அரசியல் அனுபவம் இன்னும் வரவில்லை என்று என்.பி. ராஜா பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி நாம் இந்தியர் கட்சி சார்பில் நான் அறிந்த மனிதமும், அரசியலும் என்ற நூல் வெளியீட்டு விழா என்.பி.எஸ். திறந்த வெளி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. மாநில செயலா ளர் பொன்ராஜ் வரவேற்று பேசினார். நாம் இந்தியர் கட்சி நிறுவனத்தலைவர் என்.பி.ராஜா 'நான் அறிந்த மனிதமும், அரசியலும்' நூலை வெளியிட்டு பேசிய தாவது:-

    நான் என் வாழ்வில் இப்படி ஓர் புத்தகத்தை எழுத வேண்டும் என்று கடந்த ஒரு ஆண்டாக சிந்தித்து சமுதாய அவல நிலையை எடுத்துரைத்துள்ளேன். இதன் மூலம் மகிழ்ச்சியோடு எனது தாய், தந்தையை வணங்குகிறேன்.

    எனக்கு மிகவும் பிடித்த தலைவர்கள் கலைஞர், வைகோ, வாஜ்பாய். அப்போது இருந்த பாரதீய ஜனதா எனக்கு பிடித்தது. இப்போது உள்ள செயல்பாடுகள் இணங்கி வரவில்லை. கலைஞரின் 50 ஆண்டு சேவைகள் பெருமைக்குரியவைகள் எல்லோரையும் அரவணைத்து செல்வார். பத்திரிகை யாளர்களின் கேள்விக்கு உடனே பதில் சொல்பவர்கள் தான் தலை வர்கள். அந்த வழியில் தான் வைகோ வின் பேச்சாற்ற லின் மூலம் அவரை நான் விரும்பினேன்.

    அரசியலில் வாஜ்பாய், நல்ல தலைவர். அப்போது நான் அந்த இயக்கத்தில் இருந்தேன். பின்னர் தான் புரிந்து கொண்டேன், இங்கு இருந்து உழைத்தால் அது நல்லதல்ல என்று பின்னர் அதிலிருந்து விடுபட்டு கொண்டேன்.

    எங்கள் கட்சி செயல்திட்டம் மற்றவர்களையும் கவரும் வகையில் உள்ளன. 2031-ல் ஆட்சி அமைக்கும். ஒரு மொழியை சொல்லி மற்றவர்களின் வளர்ச்சியை சிலர் தடுக்கிறார்கள்.

    தமிழகத்தில் தற்போது ஒருகோடி பேர் இந்தி சரளமாக பேசுபவர்கள் இருக்கிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் பல கோடி படித்தவர்கள் உருவாகும் நிலை வரும். மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி மூலம் நல்ல வருமானம். அதன் மூலம் பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன. கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது தூத்துக்குடியில் ஆயிரம் கோடியில் திட்டப்பணிகள் தொடங்கியது. அதிகாரிகளின் பல தவறான செயல்பாடுகளால் பல்வேறு குறைபாடுகள் இருந்து வருகிறது.

    அண்ணாமலை அரசியல்

    இந்தநிலையில் தமிழகத்தில் பாரதீய ஜனதா தலைவராக உள்ள அண்ணாமலை வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற வற்றில் எதை யாவது கூறிக்கொண்டு வருகிறார். இவருக்கு அரசியல் அனுபவம் இன்னும் வரவில்லை. இவரது அரசியல் தமிழகத்தில் எடுபடாது. ஐ.பி.எஸ். அதிகாரி போல் தான் பேசுகிறார். இது வாக்காக வந்து சேராது. மத்திய அரசில் 2 முறை தொடர்ந்து பாரதீய ஜனதா ஆட்சியில் உள்ளது. 3-வது முறையும் வர நினைக்கிறது. வந்தால் சர்வாதிகாரம் நடக்கும். தற்போது அந்த ஆட்சியில் நிறைய பாதிப்புகள் உள்ளன. அதை மக்கள் பேசுகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து தூத்துக்குடி வக்கீல் சங்க தலைவர் செங்குட்டு வன், நாம் இந்தியர்கட்சி மாநகர செயலாளர் ரூஸ்வெல்ட், பல்வேறு அமைப்பை சேர்ந்த அழகேசன், ராமசந்திரன், அய்யாத்துரை, நூருல்லா நவாஸ், ஆறுமுகசாமி, ரிக்டர், செல்வம், தனபால், சுந்தர்சிங், மந்திரமூர்த்தி, பேச்சிமுத்து, குமார், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

    விழாவில் நாம் இந்தியர்கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர், வடக்கு மாவட்ட செயலாளர் கருப்பசாமி, தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் ராஜ், வடக்கு மாவட்ட துணைச்செ யலாளர்கள் சின்னத்துரை, ஜேசு ராஜேந்திரன், குட்டி மாரிமுத்து, பொருளாளர் சங்கரன், அவைத்தலைவர் அமிர்த்காந்தன், நெல்லை மாவட்ட செயலாளர் ராம கிருஷ்ணன், துணை செயலாளர் காமாட்சிநாதன், சாயர்புரம் நகர செயலாளர் பரத், தலைவர் ஜெயபாலன், ஒன்றிய செயலாளர்கள் சரவணன், வேல்சாமி, தலைவர் ரமேஷ்பாலன், இளைஞர் அணி செயலாளர் உடையார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில பொருளாளர் ஜெயகணேஷ் நன்றி கூறினார்.

    • நாம் இந்தியர் கட்சி சார்பாக தமிழ் புத்தாண்டு விழா மற்றும் கட்சியின் தலைவர் என்.பி. ராஜா எழுதிய புத்தகம் வெளியீட்டு விழா நாளை (14-ந் தேதி) நடக்கிறது.
    • நாம் இந்தியர் கட்சியின் மாநில செயலாளர் பொன்ராஜ் வரவேற்று பேசுகிறார்.

    தூத்துக்குடி:

    நாம் இந்தியர் கட்சி சார்பாக தமிழ் புத்தாண்டு விழா மற்றும் கட்சியின் தலைவர் என்.பி. ராஜா எழுதிய புத்தகம் வெளியீட்டு விழா நாளை (14-ந் தேதி) நடக்கிறது.

    தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள என்.பி.எஸ். திறந்தவெளி மைதானத்தில் நாளை மாலை 5 மணிக்கு விழா தொடங்குகிறது.

    நாம் இந்தியர் கட்சியின் மாநில செயலாளர் பொன்ராஜ் வரவேற்று பேசுகிறார். கட்சியின் தலைவர் என்.பி.ராஜா சிறப்புரை யாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து என்.பி. ராஜா எழுதிய புத்தகம் வெளி யிடப்படுகிறது. அதனை மாண வர்கள் பெற்றுக் கொள்கிறா ர்கள்.

    தொடர்ந்து பல்வேறு நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேச உள்ளனர். முடிவில் கட்சி மாநில பொருளாளர் ஜெய கணேஷ் நன்றி கூறுகிறார். விழாவில் நாம் இந்தியர் கட்சியின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, வட்டார, கிளை க்கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

    ×