search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் நாளை  தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
    X

    நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள கடைகளில் அவல் விற்பனை நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

    நெல்லை மாவட்டத்தில் நாளை தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்

    • தமிழ் புத்தாண்டை யொட்டி நாளை நெல்லை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடை பெறுகிறது.
    • நெல்லையப்பர் கோவிலில் காலையில் சுவாமி -அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடக்கிறது.

    நெல்லை:

    தமிழ் புத்தாண்டை யொட்டி நாளை நெல்லை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடை பெறுகிறது.

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் காலையில் சுவாமி -அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடக்கிறது. மதியம் 12 மணிக்கு சுவாமிக்கு அன்னா பிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

    இதைத்தொடர்ந்து மாலையில் சுவாமி நெல்லை யப்பருக்கும், காந்திமதி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து பஞ்சாங்கம் வாசிப்பு நிகழ்ச்சி நடை பெறும். இந்த நிகழ்ச்சிகளில் மாநகர பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இதேபோல் நெல்லை சந்திப்பில் உள்ள சாலை குமாரசாமி கோவில், குறுக்குத்துறை சுப்பிரமணிய சாமி கோவில், பாளை மேலவாசல் சுப்பிரமணியசாமி கோவில், முத்தாரம்மன் கோவில், வெற்றி விநாயகர் கோவில் உள்பட பல கோவில்களில் தமிழ் புத்தாண்டையொட்டி நாளை சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெறும்.

    நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறும். நெல்லை டவுன் புட்டாபுரத்தி அம்மன் கோவிலில் சித்திரை விசு மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடைபெறும்.

    பாளை அருகே உள்ள சீவலப்பேரி சுடலைமாட சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை சிறப்பு பூஜை நடக்கிறது. காலை 6 மணிக்கு சுடலைமாட சுவாமி, பேச்சி, பிரம்மசக்தி, முண்டசுவாமி, புதியவன் சுவாமி மற்றும் பரிவார சுவாமிகளுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனையும், மதியம் 12 மணிக்கு உச்சிகால சிறப்பு பூஜையும் நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    Next Story
    ×