search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக"

    வருகிற ஜூன் 3-ந்தேதி கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழாவை சிறப்பாக மாவட்ட அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது எனவும், கழக ஆக்கப்பணிகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
    திருச்சி:

    சென்னையில் கடந்த 28-ந்தேதி தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டம், மாவட்ட அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில வருகிற ஜூன் 3-ந்தேதி முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 99-வது பிறந்த நாள் விழாவை சிறப்பாக மாவட்ட அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது எனவும், கழக ஆக்கப்பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டத்தில் சிறப்பு தீர்மானமாக சட்டமன்ற உறுப்பினரும், மாநில இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டுமென ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    வருகிற 1 மற்றும் 2-ந்தேதிகளில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள மாநாட்டு அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
    சென்னை:

    தமிழ்நாட்டை நாட்டின் அனைத்து துறைகளிலும் நம்பர்-1 முதன்மை மாநிலமாக மாற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை தீட்டி தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளார்.

    இதன் காரணமாக தமிழகத்தில் முக்கிய துறைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது. தொலைநோக்கு சிந்தனையுடன் மேற்கொள்ளப்படும் திட்ட நடவடிக்கைகளால் தமிழகத்தில் தொழில் மற்றும் வேளாண் துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன.

    தமிழ்நாட்டை மிகச்சிறந்த தொழில் வளர்ச்சி மிக்க மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதற்காக வெளிநாடுகளில் இருந்து தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டு உள்ளன. துபாய், அபுதாபி, சுவிட்சர்லாந்தில் நடந்த சர்வதேச தொழில் கண்காட்சி மூலம் தமிழ்நாட்டுக்கு கணிசமான தொழில் முதலீடு கிடைத்து உள்ளது.

    தற்போது ஜெர்மனி நாட்டில் நடந்து வரும் தொழில் மாநாடு மூலமாகவும் தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க தனி அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. 2021-2022-ம் நிதி ஆண்டில் தமிழகத்துக்கு முந்தைய ஆண்டை விட 30 சதவீதம் அதிகமாக வெளிநாட்டு முதலீடு கிடைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோன்று அனைத்து துறைகளிலும் பணிகளை மேம்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளார். இந்த நிலையில் சிறப்பு திட்ட துறை மூலம் 2 நாள் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வருகிற 1 மற்றும் 2-ந்தேதிகளில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது மாடியில் இருக்கும் மாநாட்டு அரங்கில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் துறை சார்ந்த முதன்மை செயலாளர்கள், கூடுதல் செயலாளர்கள், இணை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். அவர்கள் தமிழக அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் பற்றி விளக்கி கூறுவார்கள். இந்த கூட்டம் துறை வாரியாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    அரசு துறை அதிகாரிகள் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள் பற்றி விளக்கி கூறுவதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டு அறிவார். கடந்த ஓராண்டு கால ஆட்சியில் சட்டசபையிலும் மற்றும் தேர்தல் அறிக்கை மூலமாகவும் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் எந்தெந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன? எந்தெந்த திட்டங்கள் நிலுவையில் உள்ளன? என்பது பற்றி எல்லாம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்வார்.

    ஒவ்வொரு துறை சார்பாகவும் மிகவும் ஆழ்ந்த முறையில் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது. ஜூன் 1-ந்தேதி 19 துறைகளின் செயல்பாடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்வார். ஜூன் 2-ந்தேதி 19 துறைகளின் செயல்பாடுகள் பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசிப்பார்.

    ஜூன் 1-ந்தேதி நகராட்சி நிர்வாகம், குடிநீர் சப்ளை, பொதுப்பணித்துறை, எரிசக்தி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகம், வீட்டுவசதி மேம்பாட்டு வாரியம், தொழில், சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில், தகவல் தொழில்நுட்பம், தமிழ் வளர்ச்சித்துறை, சுற்றுலாத்துறை, மனிதவள மேம்பாடு, கைத்தறித்துறை, வணிகவரித்துறை, பேரழிவு நிர்வாகத்துறை, சிறப்பு திட்டங்கள் துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை, போக்குவரத்து, நிதித்துறை பற்றி ஆய்வு நடைபெறும்.

    ஜூன் 2-ந்தேதி ஆதி திராவிடர் நலத்துறை, வேளாண், கால்நடை, பால்வளம், மீன்வளம், பிற்பட்டோர், இதர பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, பள்ளிக்கல்வி, உயர்க்கல்வி, தொழிலாளர் நலம், ஊரக மேம்பாடு, சுகாதாரம், சமூக நலம், முதல்வரின் முகவரி, மாற்றுத்திறனாளிகள் துறை, சுற்றுச்சூழல், சட்டம், இளைஞர்கள் நலம், திட்டம் மற்றும் நிதித்துறைகள் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்யப்படும்.

    தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து துறை செயலாளர்களுக்கும் அனுப்பி உள்ளார்.

    இந்த 2 நாள் ஆலோசனைக் கூட்டத்தின்போது கடந்த ஓராண்டு ஆட்சியில் திட்டங்கள் நிறைவேற்றம் தொடர்பாக என்னென்ன நடந்தது என்பதை முழுமையாக அறிந்து கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளார். எந்தெந்த துறைகளில் திட்டப்பணிகள் சுறுசுறுப்பு இல்லாமல் தொய்வாக இருக்கிறது என்பதையும் இந்த ஆய்வுக் கூட்டம் மூலம் துல்லியமாக தெரிந்து கொள்ள உள்ளார்.

    ஆலோசனை முடிவில் என்னென்ன திட்டங்கள் எதற்காக நிலுவையில் உள்ளன என்பது பற்றியும் ஆய்வு செய்யப்பட உள்ளது. அதன் அடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று தலைமைச் செயலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    திட்டங்களை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டாமல் இருக்கும் அதிகாரிகள் மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று கூறப்படுகிறது. தேவைப்பட்டால் அந்த துறை சார்ந்த அமைச்சர்களிடமும் விளக்கம் கேட்கப்பட்டு நடவடிக்கை பாயும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் 1, 2-ந்தேதிகளில் நடைபெறும் திட்டங்களின் செயல்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    தேச விரோத சக்திகளிடமிருந்து சேதாரமின்றி தமிழகத்தை காப்போம் என்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    சென்னை:

    தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

    தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர், தங்கள் அயராத உழைப்பாலும், தமது குருதி-வியர்வையைக் கொட்டியும், பண்படுத்தி வைத்துள்ள தமிழ் நிலத்தில், சமூகநீதியும் மதநல்லிணக்கமும் செழித்துச் சிறந்திருப்பதைப் பார்த்துப் பொறுத்துக்கொள்ள இயலாமல்; மதவாத நச்சு விதைகளைத் தூவிட எத்தனிக்கும்,

    தேச விரோத-அபாயகர சக்திகளையும், அவர்களுக்குத் துணைபோகும் அடிமைகளையும், விலைபோகும் வீணர்களையும் அடையாளம் காட்டி, அவர்களிடமிருந்து தாய்த் தமிழ்நாட்டை எந்தவித சேதாரமும் இன்றி, பாதுகாத்திடும் புதிய பட்டாளத்து சிப்பாய்களின் அணிவகுப்பை உருவாக்கிடும் வகையில், ‘திராவிட மாடல் பயிற்சிப் பாசறை’க் கூட்டங்களை வெற்றிகரமாகவும் தொடர்ச்சியாகவும் நடத்தி, முதல்-அமைச்சர், தலைவர் மு.க.ஸ்டாலினின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு அரணாக நிற்க வகை செய்வோம் எனக் கழக மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்களின் இந்தக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானம் செய்து உறுதி ஏற்கிறது.

    சமூகநீதி-சமச்சீரான வளர்ச்சி-சம உரிமை ஆகியவற்றை அடித்தளமாகக்கொண்ட அரசை வெற்றிகரமாக நடத்தி, இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்கள் பலவற்றை வழங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
    சென்னை:

    தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    ‘‘என் உயரம் எனக்குத் தெரியும்” என்று பொது வாழ்வுக்குரிய தன்னடக்கத்துடன் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு, இந்திய அரசியலில் இமயம் போல் உயர்ந்து நிமிர்ந்து நின்று, நாடே வியந்து பார்க்கும் நல்ல பல சாதனைகளைப் படைத்தவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர்.

    14 வயது சிறுவனாகத் தன் கையில், புலி - வில் - கயல் பொறித்த, என்றும் தாழா தமிழ்க்கொடி ஏந்தி, தாய்மொழியைக் காத்திட சளைக்காமல் போராடி, தமிழுக்குச் செம்மொழித் தகுதி கிடைக்கச் செய்து எப்போதும் தமிழ் உணர்வுடனும் உத்வேகத்துடனும், தனது இறுதி மூச்சு வரையிலும் சோர்வின்றிச் செயலாற்றிய கொள்கை தீரர் அவர்.

    நூற்றாண்டு கால திராவிட இயக்கத்தில் முக்கால் நூற்றாண்டு காலப் பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரர் அவர்.

    தீக்கனலும், தென்றல் குளிரிளங்காற்றும் சரியளவில் கலந்த செந்தமிழ் வித்தகர் அவர்.

    பத்திரிகையாளர்-கவிஞர்-எழுத்தாளர்-திரைக்கதை உரையாடல் ஆசிரியர்-கொள்கை விளக்க நாடக நடிகர் என கலை இலக்கியத்தின் அனைத்துமுகத் திறனும் கொண்ட ஆளுமை அவர்!

    இயல்-இசை-நாடகம் என முத்தமிழுக்கும் தன் படைப்புகளால் முழுமையாகப் பங்களிப்பு செய்த முத்தமிழறிஞர்.

    தந்தை பெரியாரின் ஈரோடு ‘குடிஅரசு’ குருகுலத்தில் பயின்று, பேரறிஞர் அண்ணாவின் அரசியல் இயக்கப் பல்கலைக்கழகத்தின் பட்டம் பெற்று, திராவிடப் பேரியக்கத்திற்காகவே தன் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்தவர்!

    அரை நூற்றாண்டு காலம் கழகத் தலைவராகப் பொறுப்பேற்று ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் அச்சாணியாக இருந்து தமிழ்நாட்டு அரசியலை மட்டுமின்றி தேசிய அரசியலையும் சுழலச் செய்தவர்.

    தேர்தல் களத்தினை 13 முறை எதிர்கொண்டு, நின்ற தொகுதிகள் அனைத்திலும் வென்று, 5 முறை தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக இருந்து, 19 ஆண்டுகள் ஆட்சிப்புரிந்து, தமிழ்நாட்டை நயமாகச் செதுக்கிய ‘நவீனத் தமிழ்நாட்டின் தந்தையாகத்’ திகழ்ந்தவர்.

    சமூகநீதி-சமச்சீரான வளர்ச்சி-சம உரிமை ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட அரசை வெற்றிகரமாக நடத்தி, இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்கள் பலவற்றை வழங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

    இந்திய ஒன்றியத்தில் அரசியலில் நெருக்கடிகள் ஏற்பட்ட சூழல்களின் போதெல்லாம், டெல்லிப்பட்டணத்தின் பார்வை கோபாலபுரம் நோக்கியே திரும்பியிருக்கிறது என்பது கடந்த கால வரலாறு.

    பல குடியரசுத் தலைவர்களையும், பிரதமர்களையும் தேர்வு செய்வதில் முக்கிய பங்காற்றி, சமூகநீதிக் கொள்கையை இந்தியாவின் அரசியல்-சமுதாயக் கொள்கையாக நிலைநிறுத்தியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

    நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சைத் தரணியில், சின்னஞ்சிறிய கிராமத்தில்-இசையையும் வேளாண்மை யையும் ஊன்றுகோலாய்க் கொண்ட எளிய குடும்பத்தில் பிறந்து, கொள்கை உறுதியும், கூரிய இலக்கும், குறைவிலா உழைப்பும் கொண்டு, அவதூறுகள்-பழித்தூற்றல்கள் போன்ற நெருப்பாறுகளைக் கடந்து, அரசியல்-பொதுவாழ்வு-கலை-இலக்கியம் எனத் தொட்ட துறைகள் அனைத்திலும், தூண்டா மணி விளக்காய் ஜொலித்து, வெற்றிகரமான சாதனைகள் ஏராளம் படைத்த ஆருயிர்த் தலைவர் கலைஞர் இன்றைய இளைய தலைமுறையினருக்கு “ரோல் மாடல் (முன்மாதிரி)”-வரலாற்று நாயகர்.



    பா.ம.க. வருமானம் 55.60 லட்சம் ரூபாயில் இருந்து 1.16 கோடியாகவும், ம.தி.மு.க. வருமானம் 1.5 கோடியில் இருந்து 2.86 கோடியாகவும் அதிகரித்து உள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மாநில அரசியல் கட்சிகளும் ஒவ்வொரு ஆண்டும் வரவு-செலவு கணக்கை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்வது வழக்கம்.

    இதன்படி 2020-2021 ஆண்டிற்கான வரவு-செலவு கணக்கினை கட்சிகள் சமர்பித்தன.

    இதில் 31 பெரிய கட்சிகளின் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்த ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் இது தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

    இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க 2020-2021-ம் ஆண்டில் மொத்தம் 149.95 கோடி நன்கொடை பெற்று மாநில கட்சிகளில் முதலிடத்தை பெற்று உள்ளது. இது நாடு முழுவதிலும் உள்ள மாநில கட்சிகளின் மொத்த வருவாயில் 28 சதவீதம் ஆகும்.

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 2019-2020-ல் அக்கட்சியின் வருமானம் 64.90 கோடியாக இருந்தது. இது தற்போது 149.95 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.

    இது கடந்த ஆண்டை விட 131 சதவீதம் கூடுதலாகும். ஆனால் இந்த ஆண்டு வருமானத்தை விட தி.மு.க. அதிக அளவு செலவு செய்துள்ளது.

    தி.மு.க. மொத்தம் ரூ.218.49 கோடி செலவு செய்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சி ரூ.54.70 கோடியும், அ.தி.மு.க. ரூ.42.36 கோடியும் செலவிட்டு உள்ளது.

    தி.மு.க.வுக்கு அடுத்த படியாக ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 108 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி 2-வது இடத்தையும் ஒடிசாவில் உள்ள பிஜு ஜனதாதளம் ரூ.73 கோடி வருமானம் பெற்று 3-வது இடத்தையும் பெற்று உள்ளது.

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 20 சதவீதமும் பிஜூ ஜனதாதளம் கட்சிக்கு 13 சதவீதமும் வருமானம் அதிகரித்து உள்ளது.

    அ.தி.மு.கவுக்கு வருமானம் குறைந்துள்ளது. 2019-2020-ல் 89 கோடியாக இருந்த வருமானம் தற்போது ரூ.34 கோடியாக குறைந்துள்ளது.

    ஆனால் பா.ம.க. வருமானம் 55.60 லட்சம் ரூபாயில் இருந்து 1.16 கோடியாகவும், ம.தி.மு.க. வருமானம் 1.5 கோடியில் இருந்து 2.86 கோடியாகவும் அதிகரித்து உள்ளது.

    இந்த வருமானம் அனைத்தும் நன்கொடைகள் மற்றும் தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
    சென்னை:

    தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.

    அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமி, ஆ.ராசா, பொன்முடி, ஆலந்தூர் பாரதி உள்ளிட்ட தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் மேடையில் மு.க.ஸ்டாலினுடன் அமர்ந்து இருந்தனர்.

    இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    ‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என்று, தந்தை பெரியாரிடம் கற்றுத்தெளிந்த லட்சியப் பிடிப்பின் அடிப்படையில், தன்னைத் தமிழ் உலகிற்குப் பிரகடனப்படுத்திக்கொண்ட கொள்கைச் சிகரமாம் “தமிழினத் தலைவர்” கலைஞரின் 99-வது பிறந்த நாளினையொட்டி, அவரது மங்காப் பெரும்புகழ் அவனியில் என்றும் பரவி, எப்போதும் நிலைத்திடும் வகையில், அவர் நாள்தோறும் சிந்தித்து சிந்தித்து பொலிவும் வலிவும் கூட்டிப் ‘‘புதிய தலைமைச் செயலக கட்டிடம்” கட்டிய ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், தமிழக அரசின் சார்பில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையில், இந்தியக் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, கலைஞரின் திருவுருவச் சிலையினைத் திறந்து வைக்கும் பெருமைமிகு நிகழ்வுக்கு, கழக மாவட்டச் செயலாளர்கள்/ பொறுப்பாளர்களின் இந்தக் கூட்டம், நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து,

    6-வது முறையாக கழக ஆட்சி அமைந்திடவும், ஆருயிர்த் தலைவர் கலைஞரின் முழு உருவச்சிலையினை அரசின் சார்பில் நிறுவிடவும், ஓய்வறியாச் சூரியனாய் ஒவ்வொரு நாளும் உழைத்து, ஓராண்டு சாதனைகளால், ஒட்டுமொத்த இந்தியாவிலும் அனைத்துத் தரப்பினரின் கருத்தையும் கவனத்தையும் ஈர்த்து, இந்திய மாநிலங்களின் முதல்-அமைச்சர்களில் முதன்மை இடத்தைப் பிடித்துள்ள முதல்-அமைச்சராக மிக உயர்ந்து நிற்கும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, நெஞ்சத்தில் ஊற்றெனப் பெருக்கெடுத்துவரும் பாராட்டுகளைத் தெரிவித்து அளவிலா மகிழ்ச்சி அடைகிறது.

    “தமிழினத் தலைவர்” கலைஞரின் பிறந்தநாளான ஜூன் 3-ம் நாள், தமிழ்நாட்டு வரலாற்றில் முக்கிய இடம் பெறத் தக்க வகையில், அரசு விழாவாகக் கொண்டாட ஆணையிட்ட கழகத் தலைவரும் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சருமான தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, கழக மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் நன்றி நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

    ‘‘தமிழினத் தலைவர்” கலைஞரின் பிறந்த நாளையொட்டி, மாவட்டக் கழகங்கள் தொடங்கி ஒன்றிய-நகர-பேரூர்-பகுதி-வட்ட-கிளைக் கழகங்கள் வரை, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தி, கழகக் கொடியேற்று விழாவையும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவையும் சிறப்பாக நடத்துவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

    அடுத்த ஆண்டு (2023) நூற்றாண்டு விழா காண விருக்கும் முத்தமிழறிஞர் கலைஞரையும்; அவர் உயிரென எண்ணிக் கட்டிக்காத்த இயக்கத்தின் கொள்கைகளையும், அவர் வழியில் “திராவிட மாடல்” ஆட்சி நடத்தி, ஒவ்வொரு நாளும் சாதனைத் திட்டங்களால் தமிழ்நாட்டை தலைநிமிரச் செய்துள்ள கழகத் தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகளையும், இன்றைய தலைமுறையினருக்குக் கொண்டு சேர்த்திடும் வகையில், மாநிலம் முழுவதும் ‘திராவிட மாடல் பயிற்சிப் பாசறை’க் கூட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்துவது என இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.

    இளைய பட்டாளத்தின் இணையற்ற கைகளில், கருத்தியல் ஆயுதங்களை வழங்கிடும் வகையில் கழகத்தின் இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, தகவல் தொழில்நுட்ப அணி உள்ளிட்ட அணிகள் இத்தகைய கூட்டங்களை அரங்குகளிலும்-இணைய வழியாகவும் தொடர்ந்து நடத்திட முறையான திட்டங்கள் வகுக்கவும், அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கழகங்கள் செய்திடவும் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.


    கச்சத்தீவு மற்றும் நீட்தேர்வு பிரச்சினைகளில் தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதையாக தி.மு.க. அரசியல் நாடகம் நடத்தி வருகிறது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
    மதுரை:

    சென்னையில் நடை பெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மதுரை-போடி இடையிலான அகலப்பாதை ரெயில் திட்டத்தை நேற்று மாலை தொடங்கி வைத்தார். இதற்காக மதுரை ரெயில் நிலையத்தில் நடைபெற்ற மதுரை போடி ரெயில் தொடக்க நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்கள், ரெயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் மதுரை ரெயில் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-

    மதுரை-தேனி ரெயில் கனவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக தென் மாவட்ட மக்கள் சார்பாக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போன்று தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் கச்சத்தீவு கொடுக்கப்பட்டது. கருணாநிதி ஆட்சியில் தான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது.

    கருணாநிதி

    தற்போது அவருடைய மகன் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கச்சத்தீவை மீட்க கேட்கிறார். நீட் தேர்வு குறித்து முதல்வர் மேடையில் பேசியது விளம்பரம் தேடுவதற்காகவே. ஏனென்றால் தி.மு.க. ஆதரவுடன் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தான் 2010-ம் ஆண்டு நீட் தேர்வு மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றியது.

    அப்போதைய தி.மு.க. மத்திய அமைச்சர் காந்திசெல்வன் கையெழுத்திட்டார். இப்போது நீட்தேர்வு விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.

    எனவே கச்சத்தீவு மற்றும் நீட்தேர்வு பிரச்சினைகளில் தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதையாக தி.மு.க. அரசியல் நாடகம் நடத்தி வருகிறது. இந்த பிரச்சினைகளுக்கு காரணமே தி.மு.க. தான்.

    வளர்ந்த மாநிலங்களிடம் இருந்து அதிக வரி வருவாய் பெற்றாலும் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறைவாக இருக்கிறது. கூடுதல் நிதி ஒதுக்கீடு வேண்டுமென முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போத ஆணித்தனமாக கூறினார்கள்.

    தி.மு.க. ஒரு வருடத்தில் அதிகமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.அவர்கள் அறிவித்த திட்டங்கள் பல தோல்வியடைந்து விட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் செலுத்திய கருணாநிதிக்கு அரசு சார்பில் சிலை திறப்பதை எண்ணி மகிழ்வதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    எழுச்சிமிகு சிந்தனையால்-ஏற்றமிகு பேச்சாற்றலால்-புரட்சிகர எழுத்துகளால்-புதுமையான திட்டங்களால், இந்தியத் திருநாடு எண்ணி எண்ணிப் போற்றுகிற வகையில், தமிழ்நாட்டின் மூத்த தலைவராகவும், திராவிட இயக்கத்தின் நெடும்பயணத்தில் முக்கால் நூற்றாண்டுக்கு மேல் ஓய்வின்றி உழைத்தவருமான நம் ஆருயிர்த் தலைவர் கலைஞருக்கு தமிழக அரசு சார்பில் திருவுருவச் சிலை திறக்கப்படும் நாள் (மே 28), நம் அனைவருக்கும் தித்திப்பான நாள்! திசையெல்லாம் மகிழ்ச்சி பரவிடும் நாள்! ‘உடன்பிறப்பே..’ என்று தமது காந்தக் குரலால் அவர் நம்மை பாசத்துடன் அழைப்பது போன்ற உணர்வைப் பெறுகின்ற திருநாள்!

    தனது கை உயர்த்தி, ஐந்து விரல்களைக் காட்டி மக்களின் செல்வாக்கைப் பெற்ற நம் உயிர்நிகர்த் தலைவரை, தமிழ்நாட்டு மக்கள் 5 முறை முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்கச் செய்தனர். தமிழ்நாட்டில் அதிக ஆண்டுகள் முதல்-அமைச்சர் பொறுப்பை வகித்தவர் என்ற பெருமையும் நம் ஆருயிர்த் தலைவருக்கேயுரியது.

    5-வது முறை அவர் முதல்-அமைச்சராகப் பொறுப்பு வகித்தபோது, சென்னை அண்ணாசாலையில், எந்த ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகத்தை எழிலுடனும் வலிவுடனும் அமைத்தாரோ, அந்த ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலேயே அவருடைய திருவுருவச் சிலையை, முதல்-அமைச்சர் என்ற பொறுப்பினைச் சுமக்கும் உங்களில் ஒருவனான என் தலைமையில், கழகத்தின் பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வரவேற்புரையாற்றிட, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நம் உயிரனைய தலைவரின் திருவுருவச் சிலையினை நாளை (சனிக்கிழமை) அன்று மாலை 5.30 மணி அளவில் திறந்து வைத்திட இருக்கிறார். அதனைத் தொடர்ந்து விழா நிகழ்ச்சிகள் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது.

    அய்யன் வள்ளுவரையும் அவர் தந்த குறளின் பெருமையையும் அன்னைத் தமிழ்நாட்டவர் மட்டுமின்றி அயல்நாட்டவரும் வியக்கும் வகையில் அமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம், அரை நூற்றாண்டுக்கு முன்பே அண்ணா மேம்பாலம், புத்தாயிரம் ஆண்டின் போக்குவரத்தை சமாளிக்கும் வகையில் கத்திப்பாரா மேம்பாலம், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைக் காட்டும் டைட்ல் பார்க், விரைவான பொதுப் போக்குவரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டம், சர்வதேசத் தரத்தில் அறிவுக் கோபுரமாகத் திகழும் அண்ணா நூற்றாண்டு நூலகம், ஆசியாவின் மிகப்பெரிய கோயம்பேடு பேருந்து நிலையம் என எத்திசை பயணித்தாலும் அவர் பெயரை உச்சரிக்கும் அடையாளங்களே தமிழ்நாட்டின் தலைநகரெங்கும் நிறைந்துள்ளன.

    தலைநகரம் மட்டுமல்ல, ஒவ்வொரு மாவட்டமும் அவற்றின் கிராமம்-நகரங்களும் அவரது ஆட்சியில்தான் காலத்திற்கேற்ற கட்டமைப்பு வசதிகளுடன் வளர்ச்சி பெற்றன. தமிழ்நாட்டின் தெற்கு எல்லையான குமரி முனையில் வானுயர்ந்து நிற்கும் வள்ளுவரின் சிலைபோல கலைஞரின் ஆட்சித்திறனும் அவர் புகழும் உயர்ந்து நிற்கின்றன. குமரிமுனை வள்ளுவர் சிலை போல, சுனாமிகளே வந்தாலும் எதிர்கொண்டு வெல்கின்ற ஆற்றலைக் கொண்டது நம் உயிர் நிகர்த் தலைவர் கலைஞரின் புகழ்.

    அண்ணா அறிவாலயத்தில் அவருக்குத் திருவுருவச் சிலை கண்டோம். திருச்சியில், ஈரோட்டில், தூத்துக்குடியில் இன்னும் பல நகரங்களில் கழகத்தின் சார்பில் சிலை அமைத்து மகிழ்ந்தோம். அதனை இன்னும் பல ஊர்களிலும் தொடர்கிறோம்.

    அவர் சிலையாக மட்டுமல்ல, நம் நெஞ்சில் நிலையாக வீற்றிருந்து கொள்கை முழக்கம் செய்து கொண்டே இருக்கிறார். இயற்கை அவரை நம்மிடமிருந்து பறித்துக் கொண்டாலும், நம் இதயத்துடிப்பினில் அவரே நிறைந்திருக்கிறார். எந்நாளும் வழிநடத்துகிறார். மக்கள் நலன் காக்கும் திராவிட மாடல் அரசு என்பது அவர் நமக்கு வகுத்துத் தந்த ஆட்சிக்கான இலக்கணம்.

    அந்த இலக்கணத்தின்படி, இந்தியாவுக்கே வழிகாட்டும் முன்னோடியான திட்டங்களை வகுத்து, தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி, சரித்திரத்தில் தனக்கான இடத்தினை கடைசி வரை போராட்டம் வழியாகவே பெற்ற மாபெரும் தலைவருக்குத் தமிழக அரசின் சார்பில் திருவுருவச்சிலை திறக்கப்படுவதை எண்ணி, உங்களைப் போலவே நானும் மகிழ்கிறேன்; நெகிழ்கிறேன்! முதல்-அமைச்சர் என்ற முறையில் விழாவை சிறப்பித்துத் தர வேண்டும் என உடன்பிறப்புகளான உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 3 பேரும் மனு தாக்கல் செய்கிறார்கள்.

    சென்னை:

    மேல்சபை எம்.பி. தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களாக எஸ்.கல்யாணசுந்தரம், ராஜேஸ்குமார், கிரி ராஜன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். மேல்சபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் தி.மு.க. வேட்பாளர்கள் எஸ்.கல்யாணசுந்தரம், ராஜேஸ்குமார், கிரி ராஜன் ஆகியோர் நாளை வேட்பு மனுதாக்கல் செய்கிறார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 3 பேரும் மனு தாக்கல் செய்கிறார்கள்.

    கருணாநிதி சிலை திறப்பு விழா வருகிற 28-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நடைபெறுகிறது.
    சென்னை:

    சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலை நிறுவப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 26-ந் தேதி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிவித்தார்.

    அதன்படி ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் சிலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. சிலையை வடிவமைக்கும் பணிகள் மீஞ்சூரில் உள்ள சிற்பக்கூடத்தில் நடைபெற்றது. சிற்பி தீனதயாளன் இந்த சிலையை வடிவமைத்தார். முழுவதும் வெண்கலத்தினால் ஆன இந்த சிலை 2 டன் எடை கொண்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள சிலை போன்றே இந்த சிலையும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    16 அடி உயரம் கொண்ட இந்த சிலையை நிறுவ 12 அடி உயர பீடம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சிலை வடிவமைக்கும் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் கருணாநிதியின் சிலை நிறுவப்பட்டது.

    கருணாநிதி சிலை திறப்பு விழா வருகிற 28-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து சிலை திறப்புக்கான நிகழ்ச்சி அன்று மாலை 5.45 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.

    கருணாநிதி சிலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசுகிறார். அமைச்சர் துரைமுருகன் வரவேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தமிழக அரசு சார்பில் செய்யப்பட்டு வருகிறது.

    முதல் முறையாக, தமிழக அரசின் மதிப்புக் கூட்டு வரி மத்திய அரசின் கலால் வரியை விட அதிகமாக இருக்கிறது. மத்திய அரசு மாநிலங்களுடன் பகிரும், அடிப்படைக் கலால் வரியில் எந்த மாறுதலும் செய்யவில்லை .

    சென்னை:

    பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்களின் சுமைகளை குறைப்பதற்காக மத்திய அரசு தற்போது எரி பொருட்களின் மீதான வரியை 2-வது முறையாக குறைத்துள்ளது. இதன் மூலம் முதல் முறையாக, தமிழக அரசின் மதிப்புக் கூட்டு வரி மத்திய அரசின் கலால் வரியை விட அதிகமாக இருக்கிறது.

    மத்திய அரசின் எரிபொருளின் மீதான கலால் வரியை விட அதிகமாக மாநிலம் கூடுதலாக வரியை வசூலிக்கும் போது வருவாய் இழப்பு எப்படி ஏற்படும்.

    கடந்த தேர்தலில் சொன்ன தி.மு.க.வின் வாக்குறுதியை மறந்து, பெட்ரோல் மீது 5 ரூபாய்க்கு பதிலாக வெறும் 3 ரூபாய் குறைத்து விட்டு டீசலுக்கு வாக்களித்த 4 ரூபாயில் ஒரு பைசா கூட குறைக்காமல் அறிவாலயம் தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றி விட்டது.

    தமிழகம் தவிர்த்த இந்தியாவின் பிற மாநிலங்களில் எல்லாம் மத்திய அரசின் வரி குறைப்பு நடவடிக்கையை அடுத்து மாநில அரசும் விலையை குறைத்து மக்கள் நலனில் அக்கறை காட்டியது.

    முதல் முறையாக, தமிழக அரசின் மதிப்புக் கூட்டு வரி மத்திய அரசின் கலால் வரியை விட அதிகமாக இருக்கிறது. மத்திய அரசு மாநிலங்களுடன் பகிரும், அடிப்படைக் கலால் வரியில் எந்த மாறுதலும் செய்யவில்லை .

    அதைத்தான் மாநில அரசுடன் பகிர்ந்து வருகிறது. ஆனால் கூடுதல் கலால் வரி விவசாய கட்டமைப்புக்கும், மற்றும் சாலை மேம்பாட்டுக்குமான வரித் தொகுப்புகள் திட்ட ஒதுக்கீடு நிதியாகக் கருதப்படுவதால், அதை மாநிலங்களின் திட்டங்களுக்காக மத்திய அரசு பயன்படுத்துகிறது.

    ஆகவே மாநிலங்களுடன் நேரடியாகப் பகிராத திட்ட ஒதுக்கீடு வரியில் மத்திய அரசு வரிக்குறைப்பு செய்துள்ளது.

    தி.மு.க. அரசு உடனடியாக பெட்ரோல் விலையை மேலும் 2 ரூபாயும், டீசலுக்கு 4 ரூபாயும் குறைப்பதன் மூலம் தன் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மேலும், சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்பட வேண்டும். மே 2020-ல் நிறைவேற்றப்பட்ட ஜிஓவை மாற்றியமைத்து, மாநில மதிப்புக் கூட்டு வரியை அடிப்படை விலையின் சதவீதமாக அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    பேரறிவாளன் விடுதலையில் தி.மு.க., காங்கிரஸ் மாறி, மாறி விமர்சிப்பது புதிது அல்ல என காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
    சென்னை:

    காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் சென்னையில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பேரறிவாளன் விடுதலையில் தி.மு.க., காங்கிரஸ் மாறி, மாறி விமர்சிப்பது புதிது அல்ல. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    ×