search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாராதனை"

    • கிருஷ்ணன் ஜெயந்தி உற்சவம் நேற்று தொடங்கி வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • வழுக்கு மரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டதையடுத்து உறியடி திருவிழா தொடங்கியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மேலவீதியில் புகழ்பெற்ற நவநீதகிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவிலில் கிருஷ்ணன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்று நவநீதகிருஷ்ணனுக்கு காலை 7 மணிக்கு குபேர சம்பத்துகள வேண்டி பல்வேறு திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனமும் அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கிருஷ்ணனை தரிசனம் செய்தனர்.

    இக்கோவிலில் கிருஷ்ணன் ஜெயந்தி உற்சவம் நேற்று தொடங்கி வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இன்று (வியாழக்கிழமை) 2-ம் நாள் காலை 8 மணிக்கு புகழ்பெற்ற தொட்டில் உற்சவம் நடைபெற்றது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா மற்றும் கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் ஆஸ்திக மகா சபை கைங்கர்ய குழுவினர் செய்து வருகிறார்கள்.

    கிருஷ்ண ஜெயந்தியை யொட்டி தஞ்சை மேலவீதியில் உறியடி திருவிழா ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி 23-ம் ஆண்டு உறியடி திருவிழா நேற்று நடந்தது.

    முன்னதாக கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. முன்னாள் மாநகராட்சி மேயர் சாவித்திரி கோபால் பக்தி இசை பாடினார்.

    அதைத்தொடர்ந்து வழுக்கு மரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டதையடுத்து உறியடி திருவிழா தொடங்கியது. இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு வழுக்குமரம் ஏறினர்.

    இறுதியில் ஒரு வாலிபர் வழுக்குமரம் ஏறினார்.

    இதனை திரளான பொது மக்கள் கண்டுகளித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர் கோபால், சரத் யாதவ், ரவி யாதவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புனிதநீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசத்தை வந்தடைந்தது.
    • கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே, கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ மனோன்மணி சமேத கைலாசநாதர் கோவில் உட்பட ஏழு கோவில்களுக்கு ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, பிம்பசுத்தி ரக்ஷா பந்தனன், நாடி சந்தானம், தத்துவச்சாரணை, ஸ்பரிசாஹூதி, திரவியா ஹூதி, மகாபூர்ணா ஹூதி, யாத்ரா தானம், கிரகப்பிரிதி அனைத்து ஆலயங்களுக்கும் சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்கள் சுமந்து ஊர்வலமாக புறப்பட்டு ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், ஸ்ரீ சீதலா தேவி மாரியம்மன், ஸ்ரீ மன்மத சுவாமி கோயில், ஸ்ரீ கூந்தாளம்மன் கோயில், ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஆலயம், ஸ்ரீ கைலாசநாதர் ஆலயங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து ஆச்சாரிய உற்சவம், எஜமானும் உற்சவம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடு துறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன், மயிலாடுதுறை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் நிர்வாக குழுத்தலைவரும், மாவட்ட திமுக துணைத்தலை வருமான மு. ஞானவேலன் உள்ளிட்ட 2-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கீழப்பெரும்பள்ளம் கிராம வாசிகள் செய்தனர்.

    • 16 செல்வங்கள் கிடைக்க வேண்டி 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது.
    • நவதானியங்கள் முடிச்சு வழிபாடு நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகில் உள்ள பிள்ளையார்பட்டி கிராமத்தில் புகழ்பெற்ற ராகு கேது தோஷம் போக்கும் ஹரித்ரா விநாயகர் கோவில் அமைந்துள்ளது.

    மாமன்னன் ராஜராஜன் சோழன் கட்டிய இந்த விநாயகர் கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம்.

    தொடர்ந்து ஒன்பது சங்கடஹர சதுர்த்தி நவதானியங்கள் முடிச்சு சமர்ப்பித்து வழிபாடு செய்தால் கடன் தொல்லை களை நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.

    இத்தகைய பல்வேறு சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் நேற்று இரவு மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ஹரித்திரா விநாயகருக்கு 16 செல்வங்கள் கிடைக்க வேண்டி 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது.

    அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரமும் கடன் தொல்லைகளை நிவர்த்தி யாகும் நவதானியங்கள் முடிச்சு வழிபாடும் தீபாராதனை நடந்தது.

    • பன்னீர்,சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் கீழத்தஞ்சாவூர் கிராமத்தில் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி பவுர்ணமியையொட்டி பஞ்சலிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    முன்னதாக சாமிக்கு மஞ்சள்பொடி,மாப் பொடி,தேன், திரவியபொடி, பால்,தயிர்,இளநீர், பன்னீர்,சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • தெப்பத்தில் சுவாமி அமர்ந்து இரண்டு சுற்றுகள் நடைபெற்றது.
    • சுவாமியை ஊஞ்சலில் வைத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவை யாறில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான அறம்வ ளர்த்தநாயகி உடனாகிய ஐயாறப்பர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் உள்ள சூரிய புஷ்கரணி குளத்தில் தெப்ப திருவிழா நடைபெற்றது.

    தெப்பத்தில் ஐயாறப்பர், அறம்வளர்த்த நாயகியுடன் அமர்ந்து 5 சுற்றுகள் வந்த பிறகு குளத்தின் நடுமண்ட பத்தில் சாமி இறக்கி வைத்து ஊஞ்சலில் வைத்து ஆராட்டி தீபாரதனை நடைபெற்றது.

    பின்னர் தெப்பத்தில் சுவாமி அமர்ந்து இரண்டு சுற்றுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தெப்பத்தி ருவிழா ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • முத்துமாரியம்மன் கோவில் திருவிளக்கு பூஜை நடந்தது.
    • நாள்தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் 84-ம் ஆண்டு முளைக்கொட்டு திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி கடந்த செவ்வாய்கிழமை காப்பு கட்டுடன் தொடங்கியது. நாள்தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து 201 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முதலில் அம்பாளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாரதனைக்கு பின் கோவில் திருவிளக்கு ஏற்றப்பட்டது. பின்னர் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    • மகா கணபதி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • Consecrated, Deeparathana, கும்பாபிஷேகம், தீபாராதனை

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பெரிய கள்ளங்காடு மகா கணபதி திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பெரியகள்ளங்காடு கிராமத்தில் அருள் பாலித்து வரும் மகா கணபதி திருக்கோயில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், முதல் கால யாக பூஜை, வாஸ்து சாந்தி, இரண்டாம் கால யாக பூஜை, அஷ்டபந்தனம் மருந்து சாற்றுதல், மூன்றாம் காலயாக பூஜை, நான்காம் காலயாக பூஜை, ரக்ஷா பந்தனம், கோமாதா பூஜை, யாத்ரா தானம், மங்கல இசையுடன் கடம் புறப்பாடு நடைபெற்றது.

    பின்னர் சிவாச்சாரியார்கள் கடத்தை சுமந்து கொண்டு கோயிலை சுற்றி வலம் வந்து வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    தொடர்ந்து ஸ்ரீ மகா கணபதி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    கும்பாபிஷேகத்தை காண கள்ளங்காடு, குருவிக்கரம்பை, குண்டாமரைக்காடு, நாடாகாடு, கொன்றைக்காடு, காலகம் கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.
    • சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பாபநாசம்:

    பாபநாசம் அடுத்த மாளாபுரம் கிராமத்தில் உள்ள நல்லமுத்து முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

    விழாவில் ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி, முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.

    பின், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    • நாளை ஆவணி முதல் ஞாயிறு
    • நாகராஜருக்கு தீபாராதனையும், அபிஷேகங்களும் நடக்கிறது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நாகராஜா கோவில் நாகதோஷம் தீர்க்கும் புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு வழிபட்டால் தோஷங்கள் நீங்கும், திருமணங்கள் கைகூடும் என்பது ஐதீகம்.

    இதனால் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நாகராஜரை வழிபட்டு செல்கிறார்கள். குறிப்பாக ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமையான நாளை (20-ந்தேதி) அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து நாகராஜருக்கு தீபாராதனையும், அபிஷேகங்களும் நடக்கிறது. கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளையும் கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    சுட்டெரிக்கும் வெயில் அடித்து வரும் நிலையில் பக்தர்களுக்கு வசதியாக கோவில் வளாகத்தில் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நாகர் சிலைகளுக்கு பால் ஊற்ற செல்லும் பகுதிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டு வருகின்றன. பக்தர்கள் வரிசையாக நின்று சாமி கும்பிட வசதியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

    இதேபோல் கோவிலுக்குள் சென்று பக்தர்கள் தரிசனம் செய்ய கூட்டம் அதிகமாக காணப்படும் என்பதால் அதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் பக்தர்கள் வரிசையாக செல்ல தடுப்பு கம்புகள் கட்டப்பட்டு உள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கோவில் முழுவதும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • விழா கடந்த 5-ந் தேதி தொடங்கி வருகிற 12-ந் தேதி வரை நடக்கிறது.
    • வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, படையல் இட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தேத்தாக்குடி தெற்கு, யாதவபுரத்தில் உள்ள வெங்கடாஜலபதிக்கு 70-வது ஆண்டு கம்பசேவை திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கியது.

    இந்த விழா வருகிற 12-ந் தேதி வரை நடக்கிறது.

    முன்னதாக தெத்தேரியிலிருந்து பக்தா்கள் புனித நீராடி, கம்ப விளக்கு ஏந்தி வந்து வெங்கடாஜலபதி சன்னதியில் வைத்து வழிபட்டனர்.

    தொடர்ந்து வடை மாலை, வாழைத்தார், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு படையல் இட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடா்ந்து, அரிச்சந்திரா புராண நாடகம் நடந்தது.

    விழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு கலை நிகழ்ச்சிகள், கிராமிய பல்சுவை நிகழ்ச்சி, வருகிற 9-ந் தேதி விளக்கு பூஜை மற்றும் இன்னிசை நிகழ்ச்சி, பரத நாட்டியம், ஆன்மீக சொற்பொழிவு, இன்னிசை பட்டிமன்றம் ஆகியவை நடைபெற உள்ளது.

    ஏற்பாடுகளை விழா நிர்வாக குழுவினரும், தேத்தாக்குடி தெற்கு யாதவபுரம் கிராமமக்களும் செய்திருந்தனா்.

    • ஆடி 3-வது வெள்ளியை முன்னிட்டு கோவிலில் விளக்கு பூஜை நடந்தது.
    • அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் ஆடி 3-வது வெள்ளியை முன்னிட்டு உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை நடந்தது.

    முன்னதாக மாரியம்மனுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின், கோவிலில் விளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    • காசிவிஸ்வநாதர் கோவிலில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி அம்மன்களுக்கு சிறப்பு வழிபாடு நடை பெற்றது.
    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் அலங்காரம் செய்ய ப்பட்டு மகாதீபாரா தனை காண்பிக்கப்பட்டது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் விசா லாட்சி அம்பிகா சமேத காசிவிஸ்வநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெ ருக்கு விழாவையொட்டி கங்கா, யமுனா, நர்மதா, சரஸ்வதி, காவிரி, கோதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயூ ஆகிய நவகன்னிகை அம்மன்களுக்கு சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம்.

    இதைப்போல் இந்த ஆண்டும் கங்கா, யமுனா, நர்மதா, சரஸ்வதி, காவிரி, கோதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயூ ஆகிய நவகன்னிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் அலங்காரம் செய்ய ப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. குறிப்பாக காவிரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதில் திரளான பெண்கள், பக்தர்கள் கலந்துகொண்டு நவகன்னி கைகளை வழிபட்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் மற்றும் மங்களாம்பிகை கைங்கர்ய சபாவினர் செய்திருந்தனர்.

    ×