search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவிளக்கு பூஜை"

    • சண்முகருக்கு அன்னாபிஷேகமும், உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது.
    • மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று அதி காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து உச்சிகால அபிஷேகமும் நடைபெற்றது.

    காலை 10.30 மணிக்கு 'சுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகமும், உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடக்கிறது.

    கோவில் வளாகத்தில் காலை 8 மணிக்கு நாதஸ்வர மங்கள இசை, 8.30 மணிக்கு தேவார இன்னிசை, காலை 9 மற்றும் 12 மணிக்கு ஆன்மீகச் சொற்பொழிவு, காலை 10.30 மணிக்கு பொது விவரக் குறிப்பேடு வெளியிடப்பட்டது. மாலை 6 மணிக்கு அக்னி தனிப்பயிற்சி கல்வி நிலைய மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

     தமிழ் புத்தாண்டு மற்றும் விடுமுறை தினம் என்பதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் குவிந்தனர்.

     அவர்கள் காலையில் இருந்தே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று தமிழ் புத்தாண்டு தினம் என்பதால் சுமார் 5 மணிநேரம் காத்திருந்த பின்னரே பக்தர்கள் தரிசனம் செய்ய முடிந்தது. திருச்செந்தூர் முழுவதும் பக்தர்கள் கூட்டம் மற்றும் வாகன மிகுதியால் போக்குவரத்து ஸ்தம்பித்து.

    • பவானி அம்மன் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி பூஜை நடைபெற்றது.
    • முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    புளியங்குடி:

    புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் உள்ள பெரியபா ளையத்து பவானி அம்மன் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி பூஜை நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு முப்பெரும்தேவி அம்மனுக்கு சிறப்பு பூஜை கள் நடந்தது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவுர்ணமி சிறப்பு அருள் வாக்கு நடைபெற்றது. மாலை 6 மணி அளவில் குருநாதர் சக்தியம்மா ஐப்பசி மாத பவுர்ணமி பூஜை குறித்து ஆன்மீக சொற்பொழிவாற்றினார்.

    இரவு 7 மணிக்கு பால், தயிர், சந்தனம், தேன், குங்குமம் உள்பட 21 வகையான நறுமணப் பொருட்களால் அபிஷேகம் மற்றும் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் 1008 லிட்டர் சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து பரிகார தெய்வங்களான பால விநாயகர், கல்யாண சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பதினெட்டாம் படி கருப்பசாமி, பவானி பத்திரகாளி அம்மன்,மகா காளியம்மன், பேச்சி யம்மன்களுக்கு பாலா பிஷேகம் நடை பெற்றது.

    தொடர்ந்து முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு மஞ்சள் காப்பு அல ங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பி க்கப்பட்டது. இரவு 8.30 மணியளவில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    பின்னர் சிறப்பு அன்ன தானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜை க்கான ஏற்பாடுகளை குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • திருமங்கலம் மீனாட்சி-சொக்கநாதர் கோவிலில் நவராத்திரி-திருவிளக்கு பூஜை நடந்தது.
    • மேலும் கோவில் பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ள கொலுவையும் பக்தர்கள் கண்டுகளித்தனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் மீனாட்சி-சொக்கநாதர் சுவாமி கோவிலில் நவராத்திரி விழா கடந்த 15-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடக்கிறது. வருகிற 20-ந் தேதி மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. இதில் பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினால் திருமண பாக்கியம், குழந்தை பேறு, தொழில் அபிவிருத்தி உண்டாகும் என்பது நம்பிக்கை. எனவே பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ளுமாறு கோவில் தக்கார் சக்கரையம்மாள், நிர்வாக அதிகாரி அங்கயற்கண்ணி ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    நவராத்திரி விழாவில் தினமும் மாலை சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.மேலும் கோவில் பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ள கொலுவையும் பக்தர்கள் கண்டுகளித்தனர்.

    • தச்சம்பத்து கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் நடந்தது.
    • உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே தச்சம்பத்து பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலம் நடந்தது. முதல் நாள் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடந்தது. இதைத் தொடர்ந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமம் செயலாளர் சுவாமி பரமானந்த சுவாமி பக்தி சொற்பொழிவாற்றினார். 2-ம் நாள் விநாயகருக்கு மஞ்சள் அபிஷேகம் கோமாதா பூஜை மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர்கள் தேனூர் விடி பாலு திருவேடகம் பழனியம்மாள் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 3-ம் நாள் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி புறநகர் மாவட்ட தலைவர் குருஜி ராமச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேல்முருகன், மாவட்டச் செயலாளர் ரமேஷ், ஒன்றிய தலைவர் முத்துப்பாண்டி, ஒன்றிய துணைத் தலைவர் ராஜா, நிர்வாகிகள் தனசேகரன், பொன்னையா, சுரேஷ்குமார், பாபு, காசி, சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தேனூர் கவுன்சிலர்கள் சவுத்ரி நல்ல மணி திருவிடம் கவுன்சிலர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். சிலை ஊர்வலம் கிராமத்தில் வலம் வந்தது. விழா ஏற்பாடுகளை பச்சமுத்து, பாலகிருஷ்ணாபுரம் இந்து முன்னணி மற்றும் விநாயகர் கமிட்டி குழுவினர் செய்திருந்தனர். சமயநல்லூர் ஏட்டு சிவபாலன் மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

    • உலக நன்மை வேண்டி வண்டுறை மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
    • 1008 பெண்கள் அமர்ந்து உலக நன்மை வேண்டி விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வாய்மேட்டை அடுத்த வண்டுவாஞ்சேரி வண்டுறை மாரியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    முன்னதாக மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன், திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்று.

    மாரியம்மனுக்கு சந்தன காப்பு சாத்தப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் கோவிலின் எதிர்புறத்தில் 1008 பெண்கள் அமர்ந்து உலக நன்மை வேண்டி விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசனம் செய்தனர்.

    • முத்துமாரியம்மன் கோவில் திருவிளக்கு பூஜை நடந்தது.
    • நாள்தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் 84-ம் ஆண்டு முளைக்கொட்டு திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி கடந்த செவ்வாய்கிழமை காப்பு கட்டுடன் தொடங்கியது. நாள்தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து 201 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முதலில் அம்பாளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாரதனைக்கு பின் கோவில் திருவிளக்கு ஏற்றப்பட்டது. பின்னர் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    • ஆடி கடைசி வெள்ளிக் கிழமையையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவாரூர்:

    வலங்கைமானில் பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடக்கும் பாடைக்காவடி விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். வலங்ைகமான் மகாமாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளிக் கிழமையையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    இதில் வலங்கைமான் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து குத்துவிளக்கேற்றி வழிபாடு நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பூஜை ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரமேஷ், ஆய்வாளர் தமிழ் மணி, நிர்வாக மேலாளர் சீனிவாசன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • பெண்கள் மட்டும் பங்கேற்ற 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
    • பச்சைநாயகி அம்மனுக்கு ஊஞ்சல் பாடல்கள் பாடி வழிபாடு நடைபெற்றது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொளப்பலூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பச்சை நாயகி அம்மன் திருக்கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இதில் முக்கிய நிகழ்ச்சியாக பெண்கள் மட்டும் பங்கேற்ற 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    இதில் ஏராளமான பெண்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி, பழம், தேங்காய் உள்ளிட்டவற்றை வைத்து படையலிட்டு திருவிளக்கேற்றி மக்கள் நலன் வேண்டியும், குடும்பம் செழிக்கவும், மழை வேண்டியும் வழிபாடு செய்தனர்.

    பச்சைநாயகி அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்திலும், திருவிளக்கு பூஜை நடைபெறும் இடத்தில் பச்சை நாயகி அம்மன் வளையல்கள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சலில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    அதனைத்தொடர்ந்து ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சி அளித்த பச்சைநாயகி அம்மனுக்கு ஊஞ்சல் பாடல்கள் பாடி வழிபாடு நடைபெற்றது.

    இந்த சிறப்பு பூஜையில் கொளப்பலூர், காமராஜ் நகர், சிறுவலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் திருவிளக்கு பூஜையில் மாணவிகள் பங்கேற்றனர்.
    • மேயர் இந்திராணி கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றத்தை அடுத்த பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் உலக நலனுக் காக ஆடி வெள்ளியை யொட்டி 1,008 திருவிளக்கு பூஜை அனுஷாதேவி அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி செயலாளர் விஜயராகவன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ராமசுப்பையா வரவேற்றார். கல்லூரி தலைவர் ராஜ கோபால், உதவி தலைவர் ஜெயராம், கல்லூரி செயலாளர் விஜய ராகவன், பொருளாளர் ஆழ்வார்சாமி, உதவி செயலாளர் ராஜேந்திரபாபு, முதல்வர் ராமசுப்பையா, சுயநிதி பிரிவு இயக்குனர் (பொறுப்பு) பிரபு, அறக்கட்டளை உபயதாரர் மகாலட்சுமி தர்மராஜ் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் சிறப்பு அழைப் பாளராக மதுரை மாநக ராட்சி மேயர் இந்திராணி கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து 1,008 திருவிளக்கு பூஜையை தொடங்கி வைத்தார்.

    இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் முருகன் கோவில் 2-வது ஸ்தானிகர் ரமேஷ் பட்டர் தலைமையில் கல்லூரி மாணவிகள், பேரா சிரியைகள் அனைவரும் திருவிளக்கு ஏற்றி வழிபட்டனர். நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல், மாநகராட்சி கவுன்சிலர்கள் இந்திராகாந்தி, ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்ட னர். விழாஏற்பாட்டினை கல்லூரியின் பொருளாதார துறை உதவி பேராசிரியை விஷ்ணு சுபா, தமிழ்துறை உதவி பேராசிரியை பரிமளா ஆகியோர் செய்திருந்தனர்.

    • திருவெற்றியூரில் திருவிளக்கு பூஜை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கப்பட்டது.
    • 1008 திருவிளக்கு பூஜை நடத்த அனுமதி அளித்தனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே பிரசித்தி பெற்ற திருவெற்றியூர் பாகம்பிரியாள் வன்மீக நாதர் கோவில் உள்ளது. கோவில் முன்பு இந்து மக்கள் நல இயக்கம் சார்பில் ஆண்டு தோறும் 1008 திருவிளக்கு பூஜை நடத்துவது வழக்கம். அதற்கான ஏற்பாடுகளை இயக்கத்தின் நிறுவன தலைவர் இளையராஜா செய்து வந்தார்.

    இந்தநிலையில் திருவெற்றியூர் பஞ்சாயத்து தலைவர் திருவிளக்கு பூஜை நடத்துவதால் இடநெருக்கடி, பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே விளக்கு பூஜை நடத்தக்கூடாது என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் போது, ஆண்டுதோறும் விளக்கு பூஜை நடத்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களை இயக்கத்தின் மாநில தலைவரான இளையராஜா கோர்ட்டில் சமர்ப்பித்தார். அதனைப்பார்த்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிப திகள் வழக்கம் போல 1008 திருவிளக்கு பூஜை நடத்த அனுமதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து இன்று திருவெற்றி யூரில் 1008 திருவிளக்கு பூஜை நடை பெறுகிறது.

    • அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன் மாலையில் சாயராட்சை தீபாராதனை நடந்தது
    • பக்தர்களுக்கு அருட் பிரசாதம் வழங்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி வடக்கு ரதவீதியில் மூன்று முகம் கொண்ட முத்தாரம்மன் கோவில் அமைந்துஉள்ளது. இந்தக் கோவிலில் ஆடி மாத பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு நேற்று இரவு நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன் மாலையில் சாயராட்சை தீபாராதனை நடந்தது.பின்னர் இரவு7-மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு பூஜையை நடத்தினார்கள்.

    அதன் பிறகு இரவு 8மணிக்கு விநாயகர், முத்தாரம்மன் மற்றும் அதன் பரிவார தெய்வங்களான ஸ்ரீ உச்சினி மாகாளிஅம்மன், சுடலை மாடசாமி, பலவேசக்கார சாமி, முண்டன் சாமி, பைரவர் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடுகளும் விசேஷ பூஜைகளும் அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அருட் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • சேலம் மாவட்டம் ஆத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
    • அதன் தொடர்ச்சியாக ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 500 பெண்கள் கலந்து கொண்ட மாபெரும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 500 பெண்கள் கலந்து கொண்ட மாபெரும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த விளக்கு பூஜையில் பெண்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளையும் வேண்டுதலை வைத்து திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார்கள்.

    ×