பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை

காமராஜ் நகர் பொதுமக்கள் சார்பில் முதலாம் நாள் மண்டகப்படி திருவிழா நடத்தப்பட்டது. சுவாமி சன்னதி முன்பு 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களை படத்தில் காணலாம்.
திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களை படத்தில் காணலாம்.
Published on

தென்காசி:

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காமராஜ் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதில் முதலாம் நாள் மண்டகப்படி திருவிழா காமராஜ் நகர் பொதுமக்கள் சார்பில் நடத்தப்பட்டது. உச்சிகால பூஜை, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் சப்பர ஊர்வலம் நடைபெற்றது. மாலை சுவாமி சன்னதி முன்பு 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com